மாடித் தோட்டம் - ஈஸியான செயல்முறை

Easy way to set a terrace garden: மாடிகளில் தோட்டம் அமைப்பதற்கு எளியமையான செயல் முறைகளை பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.

Feb 6, 2025 - 14:16
 0  4
மாடித் தோட்டம் - ஈஸியான செயல்முறை

Lifestyle news in tamil:  வீடுகளில் தோட்டம் அமைப்பதற்கு கண்டிப்பாக சில உபகாரணங்கள் நமக்குத் தேவைப்படும். எந்த வகையான உபகாரங்களை தாயார் செய்வது, எப்படி தயார் செய்வது என்பது பற்றிய குழப்பங்கள் இருக்கும். சிலர் மாடியில் தோட்டம் அமைத்தால் வீடு சேதமடையும் என்று நினைப்பது உண்டு. ஆனால் மாடியில் தோட்டம் அமைக்க வேண்டும் என்று முடிவு செய்த பின் அவை பற்றியெல்லாம் கவலை கொள்ள கூடாது. உங்களது வீட்டில் சாக்கு அல்லது சிமெண்ட் பை கண்டிப்பாக இருக்கும். அல்லது பிளாஸ்டிக்-ஆல் ஆனா கேன்கள், ட்ரம்முகள் போன்றவை இருக்கும். அதை நன்றாக கட் செய்து வைத்துக்கொள்ளவும். 

அந்த பைகளில் செம்மண் கலந்த கரிசல் மண்ணை இட வேண்டும். பின்னர் அதனுள் செடியை நட வேண்டும். பின்னர் அதே மண்ணை மீண்டும் செடி நட்ட பிறகு சேர்க்க வேண்டும். இப்போது அந்த மண்ணின் மீது காய்ந்த இலைகள், தேவையான அளவு உரம், மற்றும் தேவையான அளவு வேப்பம் புண்ணாக்கு போன்றவற்றை சேர்க்க வேண்டும். காய்ந்த வேப்ப இலைகளை அரைத்து பொடியாக மாற்றி செடியுடைய வேரின் அடிப்பகுதியில் இட்டு வந்தால், செடியையும், அதன் வேரையும் பூச்சி அண்டாது.    

நீங்கள் தயாரித்து வைத்துள்ள பைகளில் கத்தரி, வெண்டைக்காய், மிளகாய், தக்காளி, கொத்தவரை போன்ற செடிகளை வளர்க்கலாம். அதோடு பாகற்காய், புடலங்காய், பீர்க்கன்காய் போன்ற கொடியில் வளரும் காய்கறி வகைகளையும் பயிரிடலாம். சத்தான மண்ணாக இருந்தால், தர்பூசணி பழம், சுரைக் காய், பூசணிகாய் போன்ற தரையில் படரும் கொடி வகைகளையும், கேரட், முள்ளங்கி, நுாக்கோல், காலி பிளவர், பீட்ரூட், முட்டைகோஸ் போன்ற காய்கறி வகைகளையும் பயிரிடாலாம். 

நிறைய மண் கிடைத்தால், மாடியின் ஒரு மூலையில் உள்ள தரையில் பெரிய பிளாஸ்டிக் பைகளை விரித்து அதன் மீது மண்ணைக் கொட்டி, சிறு சிறு வரப்பு போல அமைத்து அதில் கீரை வகைகளை பயிரிடாலாம். கீரைகளின் வேர் ஆழமானதாக இருக்காது எனவே அதற்கு குறைவான மண் இருந்தாலே போதுமானது. 

செடியை நடவு செய்த பிறகு தினமும் காலையிலும் மாலையிலும், கண்டிப்பாக தண்ணீர் ஊற்ற வேண்டும். செடி நன்றாக வளர துவங்கிய பின்னர் இரண்டு நாளுக்கு ஒரு முறை அல்லது 1 நாள் கழித்து 1 நாள் தண்ணீர் ஊற்றலாம். நாம் கோடை காலத்தை நெருங்கிக் கொண்டிருப்பதால் தினந்தோறும் கூட செடிகளுக்கு தண்ணீர் ஊற்றலாம்.

உரங்களைப் பொறுத்தவரை நமக்கு அருகாமையில் கிடைக்கும் மண்புழு உரம், சாண உரம் போன்ற இயற்கையான உரங்களை பயன்படுத்தலாம். இது போன்ற உரங்களை பயன்படுத்துவதன் செடி, கொடிகளுக்கு நோய் வராமல் தடுப்பதோடு, அவை நன்றாக வளர உதவும். வீட்டின் முற்றங்களிலும், பால்கனிகளிலும் படரும் செடி கொடிகளை பயிரிடலாம். 

உங்களுடைய வீட்டின் முற்றங்களில் பூச் செடிகளை வளர்ப்பதன் மூலம் வீடு அழகாவும், பசுமையாகவும் காணப்படும். இது போன்று பயிரிடுவதற்கு வீட்டில் இருக்கும் கூல் ட்ரிங்ஸ் பாட்டில்களிலும், கேன்களிலும் செடிகளை வளர்த்து, சுவற்றில் படற விடலாம். அதோடு கால சூழல்களுக்கு ஏற்றவாறு பயிரிடுவது மிகவும் நல்லது.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow