UI The Movie Review: உபேந்திரா 'யு.ஐ' படம் எப்படி இருக்கு
Movie Review in tamil

UI The Movie Review: உபேந்திரா 'யு.ஐ' படம் எப்படி இருக்கு
சென்னை: கன்னட நடிகர் உபேந்திரா இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'யு.ஐ' சயின்ஸ் பிக்ஷன் ஆக்ஷன் படமான இப்படத்தில், ரேஷ்மா நானய்யா, சன்னி லியோன், சாது கோகிலா, ஜிஷு சென்குப்தா, முரளி சர்மா என பலர் நடித்துள்ளனர். கன்னடத்தில் உருவான இந்தப் படம், தமிழ், தெலுங்கிலும் ஒரே நேரத்தில் இன்று வெளியாகி உள்ளது. கலவையான விமர்சனத்தை பெற்ற இப்படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.
படம் ஆரம்பிக்கும் விதம் வித்தியாசமாக இருந்தது. குறிப்பாக உபேந்திராவின் வலுவான நடிப்பு மற்றும் இயக்குனராக அவரின் தனித்துவமான பார்வை ரசிக்கும்படி இருந்தது. படம் பார்த்த ரசிகர் ஒருவர் தனது, எக்ஸ் தள பக்கத்தில், பவர்ஃபுல் மெசேஜுடன் விண்டேஜ் உபேந்திரா மீண்டும் வந்துள்ளார். படத்தின் முதல் பாதி பெரும் ஆவலை ஏற்படுத்தி உள்ளது. மேலும், உபேந்திராவின் நடிப்பு சூப்பர் என பதிவிட்டுள்ளார்.
தனித்துவமான கதை: மற்றொரு ரசிகர், உபேந்திரா இந்த படத்தில் தைரியமான அணுகுமுறையை கையில் எடுத்துள்ளார். "UI என்பது ஒரு சிக்கலான, ஆழ்மனப் போர், அது இன்றைய உலகை அழிவின் பாதைக்கு அழைத்து கொண்டு செல்கிறது என்பதை உபேந்திரா உண்மையிலேயே வித்தியாசமான ஒன்றை நமக்கு கொடுத்து இருக்கிறார். மேலும், படத்தின் பின்னணி இசை, காட்சிகள்,தொழில்நுட்ப அம்சங்கள் என ஒட்டுமொத்தமாக ஈர்க்கும் வகையில் உள்ளன. இப்படம் ஒரு தனித்துவமான சிறப்பான படமாக உள்ளது.
இரண்டாம் பாதியில் சொதப்பல்: ஒரு சிலர் படத்தை பாராட்டிய போதும் ஒரு இணையவாசி படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், இந்த படம் வழக்கமான படம் போல இல்லை, இது வெகுஜன மக்களுக்கு பிடிக்குமா என்பது சந்தேகம் தான். படத்தை எரிச்சல் அடையாமல் அமர்ந்து பார்ப்பது சற்று கடினம் தான். ஆனால், ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் படத்தை எடுத்துள்ளார் உபேந்திரா. வலுவான கதைக்களத்துடன் ஆரம்பிக்கும் படம் இரண்டாம் பாதியில் கதை அதன் பிடியை இழந்து வேறு ஒரு திரையில் செல்கிறது என்று பதிவிட்டுள்ளார். ஆனால், படத்தில் இடம் பெற்ற வீடுகள், காஸ்ட்யூம்கள் என அனைத்தும் வேறு ஒரு விஷயத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது என படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.
What's Your Reaction?






