தமிழ் மாதங்கள் 12 அறிந்ததே. ஆனால், தமிழ் ஆண்டுகள் 60 தெரியுமா?

தமிழ் மாதங்கள் சித்திரை தொடங்கி பங்குனி வரை 12ன் பெயர்கள் நம்மில் பெரும்பாலும் அனைவருக்கும் தெரியும். ஆனால், தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபதின் பெயர்கள் நம்மில் யாருக்காவது தெரியுமா?

Mar 1, 2025 - 22:30
 0  1
தமிழ் மாதங்கள் 12 அறிந்ததே. ஆனால், தமிழ் ஆண்டுகள் 60 தெரியுமா?

தற்போது பிறந்துள்ள தமிழ் புத்தாண்டின் பெயர் குரோதி. குரோதி என்றால் கடிந்திடு கோபமுறும் என்று அர்த்தம். அதாவது பகைக்கேடு என்று பொருள். தமிழ் ஆண்டுகள் 60ன் பெயர்களையும் அவற்றின் பொருளையும் இந்தப் பதிவில் காண்போம்.

பிரபவ என்றால் உயர்வான உதயம் என்று பொருள்.

விபவ என்றால் ஒப்பில்லா பெருமை என்று பொருள்.

சுக்ல என்றால் ஒளி மிகுந்த வானத்தை போன்ற வெண்மை என்று பொருள்.

பிரமோத என்றால் உவகை பொங்கும் என்று பொருள்.

பிரஜாபதி என்றால் உருவாக்கும் நாயகன் என்று பொருள்.

ஆங்கிரச என்றால் திருமிக்க தவமுனி என்று பொருள்.

ஸ்ரீமுக என்றால் உளமேற்கும் என்று பொருள்.

பவ என்றால் உள்ளம் உள்ளது காட்டும் என்று பொருள்.

யுவ என்றால் இளமை எழிலுறும் என்று பொருள்.

தாது என்றால் இதயம் உவந்து தரும் என்று பொருள்.

ஈஸ்வர என்றால் இறைமை நிறைந்திடும் என்று பொருள்.

வெகுதானிய என்றால் இல்லம் செழித்திடும் என்று பொருள்.

பிரமாதி என்றால் தலைமை தாங்கிடும் என்று பொருள்.

விக்ரம என்றால் தைரியம் நிலைத்திடும் என்று பொருள்.

விருஷ என்றால் நிலையுற நின்றிடும் என்று பொருள்.

சித்திர பானு என்றால் நிறைந்த சித்திகள் விளங்கும் என்ற பொருள்.

சுபானு என்றால் நன்மைகள் பெருக்கிடும் என்று பொருள்.

தாரண என்றால் இளமை பூண்டிடும் என்று பொருள்.

பார்த்திப் என்றால் ஆளுமை கொண்டிடும் என்று பொருள்.

வியய என்றால் செலவிட செயல் தரும் என்று பொருள்.

ஸர்வஜித் என்றால் தொட்டது துலங்கும் என்று பொருள்.

சர்வதாரி என்றால் அணியெல்லாம் பூண்டிடும் என்று பொருள்.

விரோதி என்றால் கெட்டது விரட்டிடும் என்று பொருள்.

விக்குகி என்றால் கேடுற்ற எழில் என்று பொருள்.

கர என்றால் செயல் திறமுறும் என்று பொருள்.

இதையும் படியுங்கள்:

சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் என்னவாகும்?

காளயுக்தி என்றால் காலத்தில் அறிவுறுத்தும் என்று பொருள்

சித்தார்த்த என்றால் சிறப்புறு சித்தி தரும் என்று பொருள்.

ரௌத்ர என்றால் சீர்கெடும் சினமே என்று பொருள்

துர்மதி என்றால் தூண்டிடும் தீமைக்கு என்று பொருள்.

துந்துபி என்றால் துய்ய நல்லிசை தரும் என்று பொருள்

ருத்ரோத்காரி என்றால் கோபத்தின் விளைநிலமாம் என்று பொருள்.

ரக்தாஷி என்றால் குருதியாய் சிவந்த கண் என்று பொருள்.

குரோதன என்றால் விரோதத்தின் வேராகும் என்று பொருள்.

அக்ஷய என்றால் குறைவில்லாமல் நிறைவது என்று பொருள்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0