இலட்சியப் பாதை

தோல்வி என்னும் வார்த்தையை அறியாதவன் நான் – என் அன்னையின் கருவறையில் இருந்தவரை…..!   சோகம் என்னும் வார்த்தையை அறியாதவன் நான் – என் பள்ளிச் சாலையில் திரிந்தவரை……!   பயம் என்னும் வார்த்தையை அறியாதவன் நான் – என் கல்லூரிச் சாரலில் நனைந்தவரை……!   எல்லாம் அறியத்துவங்கினேன் – என் வாழ்வின் வரவேற்பறையில் இருந்தே;   தோல்விகளால் தோற்றபோதும் சோகத்தால் மூழ்கியபோதும் பயத்தால் திணறிய போதும்   இலட்சியம் என்னும் வீரவாள் கொண்டு முன்னேறிக் கொண்டிருக்கிறேன் – என் வாழ்வில் என்றாவது ஒரு நாள் நிச்சயம் எட்டிவிடுவேன் வெற்றியின் மகுடத்தை……!!!

Mar 4, 2025 - 15:45
 0  1
இலட்சியப் பாதை

தோல்வி என்னும் வார்த்தையை

அறியாதவன் நான் – என்

அன்னையின் கருவறையில் இருந்தவரை…..!

 

சோகம் என்னும் வார்த்தையை

அறியாதவன் நான் – என்

பள்ளிச் சாலையில் திரிந்தவரை……!

 

பயம் என்னும் வார்த்தையை

அறியாதவன் நான் – என்

கல்லூரிச் சாரலில் நனைந்தவரை……!

 

எல்லாம் அறியத்துவங்கினேன் – என்

வாழ்வின் வரவேற்பறையில் இருந்தே;

 

தோல்விகளால் தோற்றபோதும்

சோகத்தால் மூழ்கியபோதும்

பயத்தால் திணறிய போதும்

 

இலட்சியம் என்னும் வீரவாள் கொண்டு

முன்னேறிக் கொண்டிருக்கிறேன் – என் வாழ்வில்

என்றாவது ஒரு நாள் நிச்சயம்

எட்டிவிடுவேன் வெற்றியின் மகுடத்தை……!!!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
குட்டி ஸ்டோரி நூல்களை தினந்தோறும் சுவை - நாளை உன்னைப் போற்றும் அவை.