அம்மா கவிதை - Amma Kavithai in Tamil
Collection of Best amma kavithai in Tamil, amma kavithai WhatsApp, Mother's Day wishes quotes, Mother's Day wishes kavithai
என் முகம் பார்க்கும் முன்பு
என் குரல்கேட்கும் முன்பு
என் குணம் அறியும் முன்பு
என்னை நேசித்த ஓர் இதயம் அம்மா
காலங்கள் மாறினாலும் நம்
அம்மாக்கள் நம்மிடம்
கேட்கும் கேள்விகள்
மட்டும் மாறவே மாறாது
எத்தனை முறை சண்டை
போட்டாலும் தேடிவந்து பேசும்
தெய்வம் என் தாயை தவிர
வேறேதும் உண்டோ இந்த உலகினிலே?
அம்மாவின் கைக்குள்
இருந்த வரை உலகம்
அழகாகத்தான் தெரிந்தது
அம்மா என்னும்
மந்திரமே அகிலம்
யாவும் ஆள்கிறதே
நம்ம கஷ்ட படும் போதும்
அழும் போதும் கூடவே
இருந்து ஆறுதல் சொல்றது
அம்மா மட்டும் தான்
இவ்வுலகில் மனதளவில் கூட
துரோகம் நினைக்காத
ஒரே ஜீவன் அம்மா
இழந்தவன் தேடுவதும்
இருப்பவன் தொலைப்பதும்
தாயின் அன்பு
அனைத்தையும் மறந்து
அன்னை மடியில் தூங்கிய
குழந்தை பருவம் நாம்
வாழ்ந்த சொர்க்க காலங்கள்
ஒவ்வொரு நாளும் கவலை
படுவாள் ஆனால் ஒரு நாளும்
தன்னை பற்றி கவலை படமாட்டாள்
உயிரை எடுக்க ஆயிரம்
சொந்தம் உயிர் கொடுக்க
ஒரே சொந்தம் அம்மா
உலகில் உன் வளர்ச்சியைக்
கண்டு பொறாமைப்படாத
ஒரே ஜீவன் அம்மா
அடி முடி தேடினாலும்
அகராதியை புரட்டினாலும்
முழுமையான அர்த்தம்
அறிய முடியாத உயிர்ச்
சித்திரம் அம்மா
மூன்று எழுத்து மந்திரமே
முடிவில்லாத காவியம
என்னை ஈன்றொடுத்த தெய்வமே
என் வாழ்க்கையின் முதல்
தெய்வம் நீயே என் அம்மா
அன்பை சொல்ல ஆயிரம்
உறவு இருந்தாலும் அதை
அன்பாய் சொல்ல அம்மாவை
தவிர வேறு யாரும் இல்லை
ஆயிரம் விடுமுறை வந்தாலும்
அவள் அலுவலகத்திற்கு
மட்டும் விடுமுறையில்லை
அம்மா சமயலறை
தன் உயிரைக் கொடுத்து
மற்றொரு உயிரைக் காப்பாற்றும்
ஒரே தெய்வம் அம்மா
வயது வித்தியாசம் பார்ப்பதில்லை
அம்மாவின் கொஞ்சலில்
மட்டும் இன்னும் குழந்தையாக
மழையில் நனைந்த என்னை
முந்தானையில் அனைத்து
பாசத்தோடு தலை துவட்டும்
போது அந்த மழையும்
பொறாமை கொள்ளும் தாயே
வலி நிறைந்தது என்பதற்காக
யாரும் விட்டு விடுவதில்லை
தாய்மை
உன் அருகில் இருக்கும் போதே
அள்ளிக்கொள் தொலைந்து
போன பின் தேடினாலும்
கிடைக்காத அன்பின்
பொக்கிஷம் "அம்மா"
நான் முதல் முறை
பார்த்த பெண்ணின்
அழகிய முக தரிசனம்
என் அம்மா
ஒரு உயிர் மற்றொரு உயிரை
சுமப்பது பார்ப்பவர்க்கு
பாரமாக இருந்தாலும்
சுமப்பவளுக்கோ
அது வரம் தான்
கடல் நீரை கடன்
வாங்கி என் கண்
கொண்டு அழுதாலும்
நான் சொல்லும் நன்றி
உனக்கு ஈடாகுமா
வெறும் எழுத்துக்கள்
ஆயின என் கவிதைகள்
ஒரு சொல்லின் முன்பு
அம்மா
தாய் மடியை காட்டிலும்
ஒரு சிறந்த தலையணை
இந்த உலகில் வேறு
எதுவும் இல்லை
அம்மா அன்பான வண்ணம்
விழாமல் இருக்கும்
எத்தனை காலங்கள் எத்தனை
ஜென்மங்கள் கடந்தாலும்
உன் அன்பு மட்டும்
என்றும் குறையுமா அம்மா
இரவு பகல் பாராமல்
ஒளிவிளக்காய் நீ இருந்தாய்
உன் நிழலிலும் என்னை
மிதிக்காமல் கண் விழித்துப்
பார்த்துக் கொண்டாள்
ஒவ்வொரு உறவுக்கும் ஒரு
எதிர்பார்ப்பு ஒன்று இருக்கும்
ஆனால் உன் உறவுக்கு
மட்டும் தான் எந்த
எதிர்பார்ப்பும் இல்லை அம்மா
ஒத்த உசுருக்குள்ள எத்தனையோ
ஆசைகள் நீ சுமந்த அத்தனையும்
உனக்காக அல்ல எனக்காக தானே அம்மா
நான் அழுத பொழுது
என்னை சிரிக்க வைத்த
முகம் அம்மா
தோல்வி கனம் என்னை
துரத்தும்போது என் மனம்
தேடுதே உன் மடியில்
சாய்ந்து இளைப்பாறும்
இடம் அதே அம்மா
என்றுமே என்னை வெறுக்காத
குணம் தவறுகளை மன்னிக்கும்
மனம் அளவு இல்லாத பாசம்
நேசம் உடையவள் தான் அம்மா
எத்தனை உறவுகள் தான்
எத்திசையில் தேடி வந்தாலும்
ஏன் ஆயிரமாயிரம் அன்பை
பொழிந்தாலும் அது தாய்
அன்பிற்கு ஈடாகுமா
அழுவதற்கு கண்கள்
அணைப்பதற்கு கைகள்
சாய்ந்து கொள்ள தாயின்
மடி எப்பொழுதும் காத்திருக்கும்
நீ திட்டி நான் அழுததில்லை
நீ அடித்தும் வலித்ததில்லை
வலிக்காமல் அடிப்பதை எங்கு
தான் நீ கற்றாயோ என் மனதை
உடைக்காத ஓர் உயிரும் நீயே
தோட்டத்திற்கு அழகு பூக்கள்
என் வெற்றிக்கு அழகு அம்மா
ஆழ்கடலில் ஆழம் பெரிதா
இல்லை நீ காட்டும் பேரன்பே
பெரியது என்பேன் நான்
இவ்வுலகில் என்றும்
எனக்கு உயிர் தந்த
உன்னை என் உயிர்
உள்ளவரை மறவேனோ
சிறுவயதிலே கடைவீதியில்
உன் கரம் பிடித்து நான்
நடந்த நாட்களே உலகை
சுற்றிய நொடிப் பொலுதாய்
என் மனம் உணர்ந்ததே அம்மா
மகன்களின் இதயக்கூட்டில்
உண்மையான ராணி
அம்மா நீ மட்டும் தான்
என் பிள்ளை அழகு என்று
ஊரெல்லாம் நீ சொல்ல
கரும்புள்ளி ஒன்று என்
கன்னத்தில் நீ வைத்தாயே
கர்வத்தில் சிரித்தேனே நான்
அழகு என்று என்னை எண்ணி
அன்பு என்ற சொல்லுக்கு
அர்த்தம் நீயே பாசம் என்ற
சொல்லுக்கு பொருளும் நீயே
வேகமும் விவேகமும் கற்று
நீ தந்தாயே உன்னாலே
நடந்தேனே உன்னாலே
நான் இன்று பயின்றேனே
தாய் தமிழை நன்று
கருவறையில் வளர்ந்துக்
கொண்டிருக்கிறது என
சொல்லி சிரித்தாள் வளர்
பிறையாய் உன் கருவில்
வளரும்போதே முழுநிலவாய்
நீ என்னை தொட்டு ரசித்தாய்
பாலூட்டி சீராட்டி பசி
மறந்து என்னை காத்தாயே
அம்மா என நான்
அழைக்கும் ஒரு சொல்லுக்கு
பிறக்கும் முன்னே உன் வலி
கொண்டு உலகை கண்டேன்
இறந்த பின்னே உன் எதிர்நின்று
என் உலகை காண்கிறேன் அம்மா
பிறக்கும் போது உன்
வலியை உணர்ந்து தான்
அழுது நான் பிறந்தேனோ தாயே
தோல் சாய்ந்து நீ
என்னைத் தாலாட்டு
பாடும்போது சொர்க்கத்தில்
இருப்பது போல ஆனந்தம்
கொண்டேன் அம்மா
உருவம் அறியா கருவிலும்
என்னை காதல் செய்தவளே
உன்னைப் பற்றி எழுதாமல்
நான் எழுதும் எழுத்துக்கள்
தான் கவிதை ஆகுமா
கருவறையில் இருந்த உணர்வை
உன் மடியில் உணருகிறேன் அம்மா
நிகரில்லா என் சுவாசம்
நீயே என் மனம் தினம்
ஏங்கும் அன்பும் நீயே அம்மா
ஆயிரம் கவிதைகள் உனக்காக
எழுதினேன் ஆனால் நீயோ
அம்மா என்ற ஒரு வார்த்தை
கவிதைக்குள் அனைத்தையும்
அடக்கி கொண்டாய்
கடவுள் தந்த உயிர் என்று
சொல்லவா இல்லை
கடவுள்களிலும் உள்ள
உயிர் என்று சொல்லவா
நிலா காட்டி சோறு
ஊட்டும்போது தெரியாது
அம்மா என்னையே சுற்றி
வந்த நிலா நீ தான் என்று
நீ உன் பிறவியை எனக்காக
தியாகம் செய்யத் துணிந்து
விட்டாய் உனக்காக நான்
என்ன செய்யப் போகிறேன் அம்மா
இவ்வுலகில் அன்பை மட்டுமே
எதிர்பார்க்கும் ஒரு உறவு
நீ மட்டுமே அம்மா
நான் எத்தனை முறை
கீழே விழுந்தாலும் என்னை
தூக்கி விட ஓடோடி வருபவள்
நீ மட்டும் தானே அம்மா
கருவில் சுமந்த உன்னை
என் வாழ்நாள் வரை மனதில்
சுமந்து கொண்டிருக்கிறேன்
ஏனெனில் உன் கடமைக்கு
அல்ல உன் பாசத்திற்கு அம்மா
ஆயிரம் சாமிகள் என்
கண்ணுக்கு தெரிந்தாலும்
என் முதல் சாமி
நீ தானே அம்மா
நான் கடவுளிடம் மனதார
வேண்டுகிறேன் மீண்டும்
நீயே என்னை கருவில் சுமக்க
நான் நோய் என்று படுத்து
விட்டால் அந்த நோய்க்கே
சாபம் விட்டவள் அம்மா
என்ன தவம் செய்தேன்
உனக்கு நான் மகனாய்
பிறக்க அடுத்த பிறவியிலும்
இதே வரம் பெற்றிட
இறைவனிடம் வேண்டுகிறேன்
நான் வாழ்க்கையில் தோற்றுக்
கொண்டே இருந்தாலும்
என்ன நீ ஜெயிக்க வைத்துக் கொண்டே
தான் இருப்பாய் என் அம்மா
அம்மாவுக்கு என்று தனியாக
கவிதை வேண்டாம்
அன்பாக பழகிப் பார்
அம்மாவே கவிதை தான்
உலகத்துல தாய விட
பெரிய சக்தி
எதுவுமே இல்ல
நூறு சாமிகள் இருந்தாலும்
அம்மா உன்னைப் போல்
ஆகிடுமா கோடி கோடியாய்
கொடுத்தாலும் நீ தந்த
அன்பு கிடைத்திடுமா
இந்த உலகில் பெற்ற
தாயை தவிர யாருடைய
அன்புக்கும் அடிமை
ஆகிவிடாதீர்கள்
ஏமாற்றி விடுவார்கள்
அம்மா ஒவ்வொரு நாளும்
கவலைப் படுவாள்
ஆனால் ஒரு நாளும்
அவளைப் பற்றி
கவலைப்பட்டிருக்க மாட்டாள்
அனலில் இருக்கும்
அம்மாவை பற்றிக்
கொண்டது ஐஸ்கட்டி
ஒவ்வொரு முறை மனம்
தளரும் போது மயிலிறகாய்
மனம் வருடுவது அம்மாவின்
வார்த்தைகள் மட்டுமே
சரியான பாதையில்
சரியாகப் போனாலும்
தாய் சொல்வாள்
பார்த்துப் போ
தெய்வத்தை கைபிடித்து
கோவிலுக்கு அழைத்து
சென்றதுண்டு - அம்மா
மறு பிறவி இருந்தால்
செருப்பாக பிறக்க
வேண்டும் என் அம்மா
காலில் மிதிபட அல்ல
என்னை சுமந்த அவளை
ஒருமுறை நான் சுமப்பதற்காக
தாய்மொழி அறிந்தவர்கள்
தடுமாறுவதில்லை
தாயின் வலி உணர்ந்தவர்கள்
தடம் மாறுவதில்லை
இன்பம் துன்பம் எது
வந்த போதிலும் தன்
அருகில் வைத்து அனைத்து
கொள்கிறது தாய்மை
வார்த்தைகளே இல்லாத வடிவம்
அளவுகோலே இல்லாத அன்பு
சுயநலமே இல்லாத இதயம்
வெறுப்பை காட்டாத முகம்
தனக்கு மிக பிடித்த
ஒன்றை என் கணவருக்கு
பிடிக்காது என் பிள்ளைக்கு
பிடிக்காது என்று சொல்லி
செய்யாமல் விட்டு விடும்
தேவதையின் சாயல் அம்மா
எலும்புகள் உடையும் அளவு
மரண வலி பிரசவ வலி
அதை தாங்கிய தாயால்
தன் பிள்ளையின் ஒரு துளி
கண்ணீரை தாங்க முடிவதில்லை
தாய் நம்மிடம் எதிர்பார்ப்பது
பணத்தையல்ல தன்னுடைய
வளர்ப்பை பிறர் குறை
சொல்லாதவாறு உள்ள
நல்ல குணத்தை
உள்ளத்தில் நஞ்சு வைத்து
உதட்டினிலே கொஞ்சி
பேசும் தந்திரத்தை
அறியாத ஓர் உயிர்
அன்னை மட்டும் தான்
தன்னலம் விரும்பி
வாழும் உலகில்
என் நலம் விரும்பி
வாழும் ஓர்
உயிர் அம்மா
கோபம், வெறுப்பு, பிடிவாதம்
என தன் பிள்ளைகள் எதை
காட்டினாலும் உன் மீது
அன்பு மட்டுமே செலுத்தும்
ஒரே ஜீவன் அம்மா
உழைப்பு சுரண்டலையும்
தன் தியாகத்தையும்
குடும்பத்திற்காக
எளிமையாக கடந்து
செல்பவள் தாய்
கனவு, ஆசை, இலட்சியம்
ஆகியவற்றை கலைத்து
தன் குடும்பத்திற்காக
வாழும் அனைத்து
தாய்மார்களுக்கும்
அன்னையர் தின வாழ்த்துக்கள்
பூமி நம்மை தாங்கும்
முன்னே கருவில் நம்மை
தாங்கியவள் அன்னை
அன்பின் முழு
வடிவமே அன்னை
ஓயாமல் உழைக்கும்
அன்னைகளுக்கு
அன்னையர் தின வாழ்த்துக்கள்
உழைப்பு என்னும் கூராயுதத்தால்
உலகை சீராக்கும் அன்னைகளுக்கு
அன்னையர் தின வாழ்த்துக்கள்
உதிரத்தை உணவாக்கி
உழைப்பை மூலதனமாக்கும்
தந்தையுமான தாய்களுக்கு
அன்னையர் தின வாழ்த்துக்கள்
உலகின் முதல் அறிமுகம்
அறிவின் முழு உருவம்
அன்பின் ஆதி ஊற்று
காத்தலின் கடவுள் நீ
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்
வரம் கேட்டு கடவுளிடம்
போனேன் வீட்டிற்க்கு சென்று
வணங்க சொன்னது விழிபிதுங்கி
வீட்டிற்கு போனேன் வழிமேல்
விழிவைத்து வீட்டில் காத்திருந்தது
என் கடவுள் அம்மா
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்
பொன்னும் பொருளும்
அருளும் அறிவும்
அழகும் அரியனையும்
கிடைத்தாலும் பிரசவித்தவளின்
அன்பு போல் வருமா
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்
அடுப்பாங்கரை தொடங்கி
அனைத்து துறைகளிலும்
வாழ்வதற்கான போராட்டத்தில்
போராட்டமே வாழ்வாய்
எதிர்நீச்சல் போட்டு
கொண்டிருக்கும் அனைத்து
அன்னைகளுக்கும் வாழ்த்துக்கள்
அன்னையர் தின வாழ்த்துக்கள்
தாய்மையின் வலி என்னவென்று
எனக்கு தெரியும் அதனால் தான்
அம்மாவுடன் சேர்ந்து நானும்
அழுதேன் நான் பிறக்கையில்
அன்னையர் தின வாழ்த்துக்கள்
இறைவன் எனக்கு தந்த
முதல் முகவரி
உன் முகம் தான் அம்மா
இந்த உலகத்திற்கு
நான் வருவதற்கு
முன்பாகவே என்னை
காதலித்தவள்
நீ மட்டுமே அம்மா
காதல் என்ற மூன்றெழுத்தில் உள்ள அன்பு
அம்மா என்ற மூன்றெழுத்திலிருந்து தான் உருவாகிறது
What's Your Reaction?