புதிய அம்மிக்கல், ஆட்டுக்கல் பழக்கும் முறை; சட்னி, மாவு பக்காவா அரைக்கலாம்

கை குத்தல் அம்மி, கொத்திய ஆட்டுக்கல் பழக்குவது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம். இவை இரண்டையும் பல நூற்றாண்டுகளாக சட்னி, மாவு அரைக்க நம் முன்னோர் பயன்படுத்தி வந்துள்ளனர். அம்மிக்கல், ஆட்டுக்கல் பழக்குவது சற்று கடினமான காரியம். எனினும் நன்கு பழக்கிவிட்டால் சமைக்கும் உணவின் ருசியும் அதிகரிக்கும்.

Feb 26, 2025 - 14:30
 0  0

1. பாரம்பரியம்:

பாரம்பரியம்:

அம்மிக்கல்லையும், ஆட்டுக்கலையும் அக்கா தங்கச்சி என குறிப்பிட்டு பேசுவார்கள். அக்காலத்தில் திருமண சீர்வரிசையில் குத்துவிளக்கு, வெள்ளி பாத்திரங்களுடன் அம்மிக்கல், ஆட்டுக்கல் வாங்கி கொடுப்பார்கள். இக்காலத்தில் இட்லி, தோசை மாவு மற்றும் சட்னி அரைக்க மிக்ஸி, கிரைண்டர் பயன்படுத்துகிறோம். அப்போதெல்லாம் அம்மிக்கல், ஆட்டுக்கல் தான். அம்மிக்கல், ஆட்டுக்கல் புதிதாக வாங்கினால் அதை நன்கு பழக்கப்படுத்திய பிறகே பயன்படுத்த வேண்டும். ஏனெனில் கை குத்தல் அம்மியிலும், கொத்திய ஆட்டுக்கல்லிலும் அழுக்கு, தூசி, கற்கள் தேங்கியிருக்கும். புதிய அம்மிக்கல், ஆட்டுக்கல் எப்படி பழக்குவது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

2. அம்மிக்கல் பழக்கும் முறை:

அம்மிக்கல் பழக்கும் முறை:
  • உளி வைத்து செதுக்கிய அம்மிக்கல் வாங்கியிருந்தால் இந்த பழக்கும் முறைய பின்பற்றுங்கள். முதலில் பிரஷ் வைத்து நன்றாக தேய்க்கவும். தேங்காய் நார் பயன்படுத்தியும் தேய்த்து அழுக்கை சுரண்டி எடுக்கலாம்.
  • மூன்று ஸ்பூன் கைகுத்தல் அரிசியை அம்மியில் போட்டு நன்கு மேலும் கீழும் அரைக்கவும். மண் ஒட்டியிருந்தாலும் வெளியே வரும். அரிசி பவுடராக மாறும் வரை அரைத்திடுங்கள்.
  • எல்லா பக்கமும் பரப்பிவிட்டு அரைக்க முயற்சி செய்யவும். மண், தூசி இருந்தால் வெளியே வந்துவிடும்.
  • இதன் பிறகு தண்ணீர் ஊற்றி மூன்று முறை நன்கு கழுவுங்கள். இப்போது வெள்ளை அரிசி போட்டு அரைத்து எடுக்கவும். இதில் சிறிய கற்கள் வந்துவிடும்.
  • மீண்டும் ஒரு முறை தண்ணீரில் கழுவி வெயிலில் உலர்த்தவும். அதன் பிறகு சட்னி அரைக்க பயன்படுத்தலாம்.

3. ஆட்டுக்கல் பழக்கும் முறை:

ஆட்டுக்கல் பழக்கும் முறை:
  • ஆட்டுக்கல்லில் மண், தூசி நிறைய இருக்கும். முதலில் தண்ணீர் ஊற்றி கழுவி எடுக்கவும். மூன்று முறை கழுவிய பிறகு தேங்காய் நார் வைத்து தேய்த்திடுங்கள்.
  • இப்போது அரிசி மாவு போட்டு நன்கு தேய்க்கவும். அரிசி மாவின் நிறம் மாறுவதிலேயே அதில் அழுக்கு, தூசி இருப்பதை கண்டுபிடித்துவிடலாம்.
  • கொஞ்சம் தண்ணீரும் சேர்த்து மூன்று முறை அரிசி மாவு போட்டு தேய்த்து கழுவி எடுக்கவும்.
  • இறுதியாக ஒரு வெங்காயத்தை உள்ளே போட்டு இடித்து நன்கு அரைத்து அதை வெளியே வீசிவிட்டு கழுவுங்கள்.
  • மாவு அரைப்பதற்கு ஆட்டுக்கல் ரெடி. அம்மிக்கல், ஆட்டுக்கல் பழக்கும் போது கை வலிக்கும். அதற்காக நிறுத்திவிடுவார்கள்.
  • சட்னி, மாவு அரைக்க அம்மிக்கல், ஆட்டுக்கல் பயன்படுத்தும் போது கைகளில் கொழுப்பு குறையும், கை தசைகள் வலிமை பெறும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0