விண்வெளியில் அதிக நாட்களை கழித்த விண்வெளி வீரர்கள் பட்டியலில் சுனிதா வில்லியம்ஸுக்கு எத்தனையாவது இடம் ?

இந்திய வம்சாவழியைச் சேர்ந்த விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் 286 நாட்கள் கழித்து பூமி திரும்பினார்.

Mar 20, 2025 - 10:36
 0  2
விண்வெளியில் அதிக நாட்களை கழித்த விண்வெளி வீரர்கள் பட்டியலில் சுனிதா வில்லியம்ஸுக்கு எத்தனையாவது இடம் ?

8 நாள் ஆய்வுக்காக சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற அவரது விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை அடுத்து அவர் 9 மாதங்கள் அங்கேயே இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

இருந்தபோதும் விண்வெளியில் அதிக நாட்களை கழித்த விண்வெளி வீரர்கள் பட்டியலில் சுனிதா வில்லியம்ஸுக்கு இரண்டாவது இடமே கிடைத்துள்ளது.

சுனிதா வில்லியம்ஸ் இதுவரை பல்வேறு ஆய்வுகளுக்காக பலமுறை சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் சென்று திரும்பியுள்ளார். இவர் இதுவரை மொத்தம் 606 நாட்கள் விண்வெளியில் கழித்துள்ளார்.

அதேவேளையில், 675 நாட்களை விண்வெளியில் கழித்த பெக்கி விட்ஸன் தான் அதிக நாட்களை விண்ணில் கழித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

சுனிதா வில்லியம்ஸுக்கு அடுத்தபடியாக ஜெப் வில்லியம்ஸ் 534 நாட்களும், மார்க் வண்டே 523 நாட்களும், ஸ்காட் கெல்லி 520 நாட்கள், பார்ரி வில்மோர் 462 நாட்கள், மைக் பாரெட் 447 நாட்கள், கேன் கிம்பரூக் 388 நாட்கள், மைகேல் பின்கே 382 நாட்கள் இருந்து இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

இதில் மார்க் வண்டே ஒரே நாளில் மிக நீண்ட விண்வெளிப் பயணம் மேற்கொண்ட விண்வெளி வீரராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
குட்டி ஸ்டோரி நூல்களை தினந்தோறும் சுவை - நாளை உன்னைப் போற்றும் அவை.