சினேகன் கன்னிகா ஜோடிக்கு இரட்டை குழந்தை பிறந்தாச்சு......

கன்னிகா கர்ப்பமாக இருந்த நிலையில் கடந்த ஜனவரி 25 தேதி அழகான குழந்தைகள் பிறந்துள்ளது.

Jan 30, 2025 - 21:42
Jan 31, 2025 - 11:13
 0  21
சினேகன் கன்னிகா ஜோடிக்கு  இரட்டை குழந்தை பிறந்தாச்சு......

பாடலாசிரியரும், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகியுமான சினேகனுக்கும், நடிகை கன்னிகா ரவிக்கும் இடையே காதல் ஏற்பட்டது.இதையடுத்து இரு வீட்டாரிடமும் உண்மையை சொல்லி அனுமதி பெற்று 2021 ஜூலை 29ம் தேதி அவர்களின் திருமணம் நடைப்பெற்றது.

 இதனை தொடர்ந்து கன்னிகா கடந்த 2024 ஆண்டு கருவுற்றிருந்தார். இந்த ஜோடிகளுக்கு கடந்த 25 தேதி அழகான இரட்டை  பெண் ரோஜாக்கள் பிறந்துள்ளது. இதனை தனது instagram page- இல்  இதனை பற்றி பின்வருமாறு தெரிவித்துள்ளனர்.

"இறைவா நீ ஆணையிடு
தாயே எந்தன்
மகளாய் மாற "... என்ற எனது அன்பின் கோரிக்கை இரட்டிப்பாய் நிறைவேறியது...

தாயே எந்தன் மகளாகவும் ..
மகளே எந்தன் தாயாகவும் ...
இரு தேவதைகள் 25.01.2025 அன்று பிறந்திருக்கிறார்கள் ...

இதயமும்,மனமும்
மகிழ்ச்சியில் நெகிழ்ந்து
நிரம்பி வழிகிறது ...

உங்களின் தூய அன்பினால்
எங்கள் வாரிசுகளை
வாழ்த்துங்கள்.

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 0
Love Love 2
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 1
குட்டி ஸ்டோரி நூல்களை தினந்தோறும் சுவை - நாளை உன்னைப் போற்றும் அவை.