சாப்பிடும் பொழுது மறந்தும் செய்யக்கூடாத சில விஷயங்கள்!!
Habits of Eating food

சாப்பிடும் பொழுது மறந்தும் செய்யக்கூடாத சில
விஷயங்கள்!!
உணவு உண்ணும் போது இப்படித்தான் உண்ண வேண்டும் என்று வரைமுறைகள் உள்ளது. உண்ண சாப்பிடும் போது அவர்களுக்கு ஆயுளை நீடிக்கும் என்பது சொல்லப்படுகிறது. ஆனால் இந்த கலியுகத்தில் யாரும் அப்படி சாப்பிடுவது கிடையாது. இதனால் மனிதனுடைய ஆயுளும் குறைந்து கொண்டே வருகிறது. நம் முன்னோர்கள் எல்லாம் 80 வயது வரை மிகவும் ஆரோக்கியமாக இருந்தார்கள். அது படிப்படியாக குறைந்து இப்பொழுது எல்லாம் 50 வயதிலேயே ஆரோக்கியமற்ற ஒரு வாழ்க்கை வாழ வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதனை தடுத்து கை நிறைய பணம் தங்கவும் உடல் ஆரோக்கியத்தோடு இருக்கவும் எப்படி சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.
சாப்பிடும்போது பின்பற்ற வேண்டியவை விரிப்பில் அமர்ந்து உண்ண வேண்டும் சாப்பிடும் போது வெறும் தரையில் அமர்ந்து சாப்பிடக்கூடாது கீழே ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன் மேல் தான் அமர்ந்து சாப்பிட வேண்டும். அது உடல் உஷ்ணத்தை சீர் செய்யும் உணவினை சாப்பிடும் முன்பு அந்த உணவினை தரக்கூடிய அன்னபூரணியை அல்லது உங்களுக்கு பிடித்தமான கடவுளை வணங்கி விட்டு அதன் பிறகு தான் சாப்பிட வேண்டும். கைகளில் தான் உண்ண வேண்டும் கைகளில் தான் சாப்பாட்டை சாப்பிட வேண்டும். கரண்டியை பயன்படுத்தி சாப்பிடக்கூடாது இது உங்களிடம் பணம் தங்குவதை குறைக்கும். கரண்டியில் சாப்பிடுபவர்கள் தாராளமாக பணத்தை செலவு செய்வார்கள் என்று அர்த்தம் இவர்களுக்கு சேமிப்பு திறன் குறையும் எனவே கரண்டியை பயன்படுத்தக் கூடாது. சாதத்தை உருட்டி சாப்பிடக்கூடாது ஒரு சிலர் சாப்பாட்டை நன்றாக உருட்டி சாப்பிடுவார்கள். ஆனால் அது தர்ப்பணம் செய்வதற்கு சமமானது இறந்தவர்களுக்கு உணவு வைக்கும் போது அதனை உருட்டி பிண்டம் வைக்க அந்த முறையை பின்பற்றுவோம் எனவே அதனை செய்வது தவறு. சாப்பிடும்பொழுது பேசக்கூடாது பொதுவாக சாப்பிடும் போது அனைவரும் பேசிக்கொண்டே சாப்பிடும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். உணவின் ரசித்து ருசித்து வாயில் வைத்து மென்று தான் விழுந்த வேண்டும். அறிவியல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் உணவை இப்படி சாப்பிட்டால் தான் நன்கு ஜீரணமாகும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்
சாப்பிடும் பொழுது டிவி பார்க்கக்கூடாது இப்பொழுதெல்லாம் சாப்பிட அமர்ந்தாலே மொபைல் போன் டிவி என அனைத்தும் பார்த்துக் கொண்டே தான் நாம் சாப்பிடுகிறோம் ஆனால் இப்படி சாப்பிடுவது மிக மிக தவறு. எனவே சாப்பாட்டை சாப்பிடும் போது என்ன சாப்பிடுகிறோம்? எதற்கு சாப்பிடுகிறோம் என்று தெரிந்து கொண்டு சாப்பிட வேண்டும். படுக்கையின் மீத அமர்ந்து சாப்பிடக்கூடாது உணவு உண்ணும் போது வேலை பார்த்துக் கொண்டேன் படுக்கையின் மீது அமர்ந்து சாப்பிடுவது போன்ற செயல்களில் செய்யவே கூடாது. இவைகளை மறந்து சாப்பிடும்போது முறையாக அமர்ந்து சாப்பிட்டால் நிச்சயமாக நீங்கள் உழைத்த பணம் உங்களிடம் தங்கும். -
What's Your Reaction?






