வீட்டிலேயே தயாரித்த சாம்பார், ரசப் பொடி; சுவையும் மணமும் அள்ளுதே

எதிர்பார்த்தபடி சாம்பார் வரவில்லை, ரசத்தில் உப்பு அதிகமாக இருக்கே என்ற கவலை இனி வேண்டாம். இந்த பதிவில் வீட்டிலேயே சாம்பார் பொடி, ரசப் பொடி தயார் செய்து சமையலுக்கு பயன்படுத்திட குறிப்புகள் பகிரப்பட்டுள்ளது.

Mar 16, 2025 - 14:55
 0  2
வீட்டிலேயே தயாரித்த சாம்பார், ரசப் பொடி; சுவையும் மணமும் அள்ளுதே
Prep Time  min
Cook Time  min
Serving
Difficulty Easy

10-15 வருடங்களுக்கு முன்பெல்லாம் தாய் வீட்டில் இருந்து மகள் வீட்டிற்கு சாம்பார் பொடி, ரசப் பொடி மற்றும் சில மசாலாப் பொருட்கள் பிளாஸ்டிக் பாக்ஸில் போட்டு கொடுப்பார்கள். இவையெல்லாம் பாக்கெட்டில் கிடைக்கும் காரணத்தால் யாரும் மில்லுக்கு சென்று சாம்பார், ரசப் பொடி அரைப்பதில்லை. வீட்டில் செய்த பொடியில் சாம்பார், ரசம் வைத்தால் மனமும் சுவையும் அற்புதமாக இருக்கும். பேச்சுலர்களுக்கும் வீட்டில் அரைத்த சாம்பார், ரசப் பொடி பெரிதும் உதவியது. இந்த பதிவில் வீட்டிலேயே சாம்பார் பொடி, ரசப் பொடி தயாரிப்பது எப்படி ? நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க என்ன வேண்டும் உள்ளிட்டவற்றை பார்க்கலாம்.

Directions

1. சாம்பார் பொடி செய்ய தேவையானவை
  • காய்ந்த மிளகாய்
  • தனியா
  • கறிவேப்பிலை
  • துவரம் பருப்பு
  • மிளகு
  • சீரகம்
  • கடலை பருப்பு
  • கட்டி பெருங்காயம்
  • மஞ்சள்
  • வெந்தயம்

குறிப்பு : ஒரு கிலோ சாம்பார் பொடி, ரசப் பொடி செய்யும் அளவிற்கு பொருட்கள் பயன்படுத்த போகிறோம்.

சாம்பார் பொடி செய்ய தேவையானவை
2. சாம்பார் பொடி செய்முறை
  • ஒரு கடாயில் 550 கிராம் தனியா எடுத்து எண்ணெய் ஊற்றாமல் சில நிமிடங்களுக்கு வறுக்கவும். நல்ல வாசனை வந்த பிறகு கடாயில் இருந்து எடுத்துவிடவும்.
  • அதே கடாயில் 50 கிராம் துவரம் பருப்பு, 70 கிராம் கடலை பருப்பு போட்டு வறுக்கவும். இதையடுத்து ஒரு கைபிடி கறிவேப்பிலை, 20 கிராம் மிளகு, 35 கிராம் சீரகம், 35 கிராம் கட்டி பெருங்காயம் போட்டு ஒரு நிமிடத்திற்கு வறுக்கவும்.
  • இவற்றை வெளியே எடுத்துவிட்டு கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி 330 கிராம் காய்ந்த மிளகாய் போட்டு சிறிது நேரத்திற்கு சூடுபடுத்தவும்.
  • இதன் பிறகு கடாயில் வறுத்த அனைத்தையும் மிக்ஸியில் அரைக்கவும். முன்னதாக 35 கிராம் மஞ்சள் தூள் சேருங்கள்.
சாம்பார் பொடி செய்முறை
3. ரசப் பொடி செய்ய தேவையானவை
  • தனியா
  • வர மிளகாய்
  • சீரகம்
  • மிளகு
  • துவரம் பருப்பு
  • மஞ்சள்
  • வெந்தயம்
  • கட்டி பெருங்காயம்
  • உப்பு
4. ரசப் பொடி செய்முறை
  • கடாயில் எண்ணெய் ஊற்றாமல் 310 கிராம் தனியா போட்டு சில நிமிடங்களுக்கு வறுக்கவும்.
  • அடுத்ததாக 135 கிரம் சீரகம், 100 கிராம் மிளகு, 100 கிராம் துவரம் பருப்பு, 20 கிராம் வெந்தயம் சேர்த்து ஒரு நிமிடத்திற்கு நன்கு வறுத்திடுங்கள்.
  • கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி 210 கிராம் வர மிளகாய் போட்டு சூடுபடுத்தவும்.
  • இவற்றின் சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைக்கவும். முன்னதாக 80 கிராம் உப்பு, 20 கிராம் மஞ்சள் சேர்த்திடுங்கள்.

சுவையும் மனமும் மிகுந்த சாம்பார், ரசம் வைக்க இந்த பொடிகளை வைக்கவும். சில்வர் பாத்திரத்தில் பொடிகளை நிரப்பி இறுக்கமாக மூடிவிடுங்கள். 3-4 மாதங்களுக்கு இந்த பொடி கெட்டு போக வாய்ப்பே இல்லை.

ரசப் பொடி செய்முறை

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
குட்டி ஸ்டோரி நூல்களை தினந்தோறும் சுவை - நாளை உன்னைப் போற்றும் அவை.