உலகின் டாப் 7 பணக்கார பெண்கள் யார் தெரியுமா ? பட்டியலில் இந்திய பெண் உண்டா ?
உலகின் டாப் 7 பணக்கார பெண்மணிகளின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம். இதில் இந்தியாவை சேர்ந்த சாவித்திரி ஜிண்டாலும் இடம்பிடித்திருக்கிறார். ஃபோர்ஸ் இந்தியா தகவலின்படி இது 2025ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரமாகும்.

உலகில் மிகவும் பணக்கார மனிதர் என்ற கேள்வி எழுந்தால் உடனடியாக பில்கேட்ஸ், ஜெஃப் பெசோஸ், அம்பானி எனக் கூறுவோம். இந்த நிலவரம் மாறி பல வருடங்கள் ஆகின்றன. உலகின் நம்பர் 1 கோடீஸ்வரராக தற்போது எலான் மஸ்க் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 347.7 பில்லியன் டாலராகும். இந்திய மதிப்பில் 30 லட்சம் கோடி ரூபாய் ஆகும். உலகின் டாப் 10 பணக்கார மனிதர்களின் பட்டியலில் பெண்கள் இல்லையென்றாலும் டாப் 25, டாப் 50ல் பல பெண்கள் உள்ளனர். உலகின் டாப் 7 பணக்கார பெண்மணிகளின் பட்டியலை அவர்கள் செய்யும் தொழிலோடு இந்த பதிவில் பார்க்கலாம்.
உலகின் டாப் 7 பணக்கார பெண்கள்
ஆலிஸ் வால்டன்
அமெரிக்காவை சேர்ந்த ஆலிஸ் வால்டன் உலகின் டாப் 7 பணக்கார பெண்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். சாம் வால்டனின் வால்மார்ட் நிறுவன தலைவர்களில் ஆலிஸ் வால்டனும் ஒருவர். இவரது வயது 75.
பிரான்கோய்ஸ் பெட்டன்கோர்ட்
பிரான்ஸை நாட்டை சேர்ந்த 71 வயதான பிரான்கோய்ஸ் பெட்டன்கோர்ட் உலக பணக்கார பெண்களின் பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ளார். லோரியல் அழகுசாதன நிறுவனத்தை கண்டுபிடித்தவரின் பேத்தி இவர். மூன்று தலைமுறைகளாக லோரியல் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். 2023ல் 100 பில்லியன் டாலர் சொத்து கொண்ட முதல் பெண்மணியாக இருந்தார். இவருடைய தற்போதைய சொத்து மதிப்பு 74.4 பில்லியன் டாலர் ஆகும்.
ஜூலியா கோச்
அமெரிக்காவை சேர்ந்த 62 வயதான ஜூலியா கோச் தனது கணவரின் மறைவுக்கு பிறகு கோச் தொழில் நிறுவனத்திடம் இருந்து 42 விழுக்காடு சொத்துகளை பெற்றார். பணக்கார பெண்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கும் ஜூலியா கோச்சின் சொத்து மதிப்பு 74.2 பில்லியன் டாலர் ஆகும்.
ஜாக்குலின் மார்ஸ்
நான்காவது இடத்தில் உள்ள ஜாக்குலின் மார்ஸின் சொத்து மதிப்பு 42.3 பில்லியன் டாலர் ஆகும். அமெரிக்காவை சேர்ந்த இவருக்கு 85 வயது ஆகிறது.
ஐந்து மற்றும் ஆறாவது இடங்களில் சுவிட்ஸர்லாந்தின் ரஃபேலாவும், அமெரிக்காவின் ஜான்ஸனும் உள்ளனர்.
சாவித்திரி ஜிண்டால்
உலகின் டாப் 7 பணக்கார பெண்களின் பட்டியலில் இருக்கும் ஒரே இந்திய பெண் சாவித்திரி ஜிண்டால். 74 வயதான அவர் ஜிண்டால் குழுமத்தின் சேர்மன் ஆவார். ஜிண்டால் நிறுவனம் கட்டுமான தொழிலில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இவருடைய சொத்து மதிப்பு 32.3 பில்லியன் டாலர் ஆகும்.
What's Your Reaction?






