கர்ப்பிணிகளுக்கான பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா மூலம் 6 ஆயிரம் ரூபாய் பெறுவது எப்படி?
பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா, கர்ப்பிணிப் பெண்களுக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை இந்தப் பதிவில் படித்தறியலாம்.
1. மத்திய அர திட்டங்கள்
நம் நாட்டில் மத்திய அரசால் தொடங்கப்பட்ட பல திட்டங்கள் உள்ளன, அதன் மூலம் மக்கள் ஏராளமான பயன்களைப் பெற்று வருகின்றனர். இந்தத் திட்டங்களில், கர்ப்பிணிப் பெண்களுக்காகச் செயல்படுத்தப்படும் திட்டமும் அடங்கும். இந்த திட்டத்த்தின் மூலம் கர்ப்பிணிப் பெண்கள் பல நன்மைகளைப் பெறுவார்கள்.
இந்தத் திட்டத்தைப் பற்றி விரிவாகவும் மேலும் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் முறை பற்றியும் தெரிந்து கொள்ள இந்தப் பதிவைத் தொடர்ந்து படிக்கவும்.
2. பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா என்றால் என்ன?
இந்தத் திட்டம் பிரதமரின் தாய்மை வந்தனத் திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தத் திட்டம் 2017ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் முதல் முறையாகக் கருத்தரிக்கும் பெண்கள் பயன் பெறலாம். இவர்களுக்கான நிதி உதவியையும் அரசு வழங்குகிறது.
இந்தத் திட்டம் பல நோக்கங்களைக் கொண்டுள்ளது. கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்குச் சிறந்த ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்தை அளிக்கிறது. ஊட்டச்சத்து குறைபாட்டிலிருந்து அவர்களின் குழந்தைகளைப் பாதுகாத்து, இறப்பு விகிதத்தைக் குறைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
3. இந்தத் திட்டத்தின் நன்மைகள் என்ன?
இந்தத் திட்டத்தின் மூலம், கர்ப்பிணிப் பெண்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் சில தவணைகளாக அரசாங்கம் 6000 ரூபாயை வழங்குகிறது. இந்த நிதி உதவியை அரசு மூன்று தவணைகளாக வழங்குகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு கடைசி மாதவிடாயின் 150 நாட்களுக்குள் 1000 ரூபாய் முதலில் கிடைக்கும். அதற்கு அவர்கள் விண்ணப்பிக்க வேண்டும், பின்னர் மருத்துவமனையில் பரிசோதனைகள் மேற்கொள்வதற்காகக் கர்ப்பிணிப் பெண்களுக்கு இரண்டாவது தவணையில் 2000 ரூபாய் வழங்கப்படுகிறது.
அதே சமயம், குழந்தைக்கு முக்கியமான தடுப்பூசிகள் போடப்படும்போது, மூன்றாவது தவணையில் ரூ.2000 வழங்கப்படுகிறது.
4. ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
முதலில் நீங்கள் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பதிவு செய்ய வேண்டும். (இணையதளத்தைப் பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்)
அதன் பிறகு, உங்களுக்கு ஒரு ஐடி மற்றும் கடவுச்சொல் கிடைக்கும். பின்னர் நீங்கள் லாக்-இன் செய்து அனைத்து தகவல்களையும் ஆன்லைன் படிவத்தில் சரியாக நிரப்ப வேண்டும். இதற்குப் பிறகு நீங்கள் உங்கள் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த ஆவணங்கள் அனைத்தையும் நீங்கள் படிவத்தில் சமர்ப்பிக்க வேண்டும்-
- தாய் மற்றும் தந்தை இருவரின் ஆதார் அட்டை
- குழந்தை பிறந்தபிறகு கிடைக்கும் பிறப்புச் சான்றிதழ்
- வங்கி கணக்குத் தகவல்
- அனைத்து விவரங்களையும் சரியாகப் பூர்த்தி செய்தபிறகு, சமர்ப்பி (Submit) பொத்தானைக் கிளிக் செய்யவும்.
- இதற்குப் பிறகு, அவ்வப்போது அரசு அனுப்பும் பணம் உங்கள் வங்கிக் கணக்கில் தொடர்ந்து வந்து சேரும்.
இதன் மூலம் கர்ப்பிணிகள் இத்திட்டத்தால் பயன்பெறலாம்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம்.
What's Your Reaction?






