சுரதா வாழ்க்கை வரலாறு/Suratha History in Tamil
கவிஞர்களில் பல வகையான கவிஞர்கள் உள்ளார்கள். நாம் இந்த பதிவில் உவமை கவிஞர் சொல்லக்கூடிய சுரதாவின் வாழ்க்கை வரலாற்றினை படித்து தெரிந்துக்கொள்ளலாம்.
1. சுரதா:
கவிஞர் பாரதிதாசன் மீது அதிக பற்று கொண்டதால் பாரகிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார்.
கவிஞர் பாரதிதாசன் மீது அதிக பற்று கொண்டதால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று. மாற்றிக்கொண்டார்.
2. சுரதா பெற்றோர்:
சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன். சுரதா தஞ்சை மாவட்டத்தில் பழையனூர் (சிக்கல்) என்னும் ஊரில் 23-11-1921 அன்று பிறந்தவர். இவருடைய தந்தை பெயர் திருவேங்கடம், தாயார் பெயர் செண்பகம் அம்மையார் ஆவார்.
3. திருமண வாழ்க்கை:
சுரதாவுக்குச் சுலோசனா என்ற மனைவியும், கல்லாடன் என்ற மகனும் உள்ளனர். இவரின் மருமகள் பெயர் இராசேசுவரி கல்லாடன், பேரன்கள் இளங்கோவன், இளஞ்செழியன் என இருவர்.
4. சுரநாவின் சிறப்பு பெயர்கள்!
உவமைக் கவிஞர்
கவிஞர் திலகம்
தன்மானக் கவிஞர்
5. கல்வி:
பள்ளி இறுதி வகுப்பு வரை கல்வி பயின்றார். அதன் பிறகு சீரகாழி அருணாசவ தேரிகர் என்பவரிடம் தமிழ் இலக்கணங்களைக் கற்று தேர்ந்தார்.
6. பெயர் காரணம்:
ஓர் அஞ்சலட்டையின் இறுதியில் சுப்புரத்தினதாசன் என்று தம் பெயரை எழுதுவதற்கு இடம் போதவில்லை என்று அதனைச் சுருக்கி சு.ர.தா. என்று எழுதியவர், காலப்போக்கில் அவ்வாறே தம் பெயரை எழுதத் தொடங்கினார். பெயரெழுத்துகளுக்கு நடுவில் "எதற்கு இந்தத் தேவையில்லாத ஆணிகள்?" என்று கருதியவர் அவற்றைப் பிடுங்கிவிட்டார் ஆணி பிடுங்கப்பட்ட அப்பெயரே 'சுரதா' என்று நிலைத்தது.
சுரதா என்னும் பெயரில் பல மரபுக்கவிதைகளை தொகுத்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதி வந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்.
7. பாரதிதாசனின் நட்பு:
ஜனவரி 14-ம் தேதி 1941-ம் ஆண்டு பாவேந்தர் பாரதிதாசனை முதன் முதலில் பார்த்து பழகிய சுரதா அவருடன் சில காலம் தங்கியிருந்து அவரது கவிதைப் பணிக்குத் துணை நின்றுள்ளார். பாவேந்தர் பாடல்களைப் படியெடுத்தல், அச்சுப் பணிகளைக் கவனித்தல் பாவேந்தரின் நூல் வெளியீட்டிற்குக் துணை நிற்றல் எனப் பல நிலைகளில் பாவேந்தருடன் சுரதாவுக்குத் தொடர்பு இருந்துள்ளது.
8. படைப்பு திறமை:
சுரதாவின் சொல்லடா என்னும் தலைப்பில் அமைந்த கவிதையைப் புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த பொன்னி என்னும் இதழ் 1947 ஏப்ரல் திங்கள் இதழில் வெளியிட்டு இவரைப் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞராக அறிமுகம் செய்தது. கவிஞர் திருலோகசீதாராமின் சிவாஜி இதழில் தொடக்கக் காலத்தில் சுரதாவின் கவிதைகள் வெளிவந்தது. திருச்சிராப்பள்ளி வானொலியில் சுரதாவின் பல கவிதைகள் ஒலிபரப்பாகியுள்ளன.
சுரதாவின் கலை உணர்வை கண்ட கு.ச.கிருட்டிணமூர்த்தி என்பவர் இவரைத் திரையுலகத்திற்கு அறிமுகம் செய்தார். மங்கையர்க்கரசி என்னும் திரைப்படத்திற்கு 1944 ஆம் ஆண்டு முதன்முதலாக உரையாடல் எழுதினார்.
9. பெற்ற பட்டம்:
1969 இல் தேன்மழை நூலுக்காக தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை பரிசு பெற்றார்.
1972 இல் கலைமாமணி பட்டம் பெற்றார்.
1978 இல் பாவேந்தர் விருது பெற்றார்.
1982 இல் குன்றக்குடி அடிகளாரால் கவியரசு பட்டம் பெற்றார்.
1969 இல் தேன்மழை என்ற சுரதாவின் கவிதை நூலுக்குத் தமிழக அரசின் பரிசு கிடைத்தது.
1972 இல் தமிழக அரசு சுரதாவுக்குக் கலைமாமணி என்னும் விருது வழங்கிச் சிறப்பித்தது.
1978 இல் ம.கோ.இரா. தலைமையில் அமைந்த அரசு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கிச் சிறப்பித்தது.
மேலும் பல விருதுகளை பெற்றுள்ளார்.
10. சுரதா படைப்புகள்:
தேன்மழை, துறைமுகம், சிரிப்பின் நிழல், சுவரும் சுண்ணாம்பும்,
அமுதும் தேனும், பாரதிதாசன் பரம்பரை, வினாக்களும் சுரதாவின் விடைகளும், நெய்தல் நீர்
உதட்டில் உதடு, எச்சில் இரவு,
எப்போதும் இருப்பவர்கள், கலைஞரைப் பற்றி உவமைக் கவிஞர்,
சாவின் முத்தம், சிறந்த சொற்பொழிவுகள்,
சுரதா கவிதைகள், சுவரும் சுண்ணாம்பும்,
சொன்னார்கள், தமிழ்ச் சொல்லாக்கம்,
தொடாத வாலிபம் நெஞ்சில் நிறுத்துங்கள்,
பட்டத்தரசி, பாவேந்தரின் காளமேகம்,
புகழ்மாலை, மங்கையர்க்கரசி,
முன்னும் பின்னும், வார்த்தை வாசல்,
வெட்ட வெளிச்சம், சுரதாவின் கவிதைகள்.
11. மறைவு:
சுரதா தன்னுடைய 84ம் வயதில் 2000 சூன் 20 செவ்வாய்க்கிழமை அன்று சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார்.
What's Your Reaction?






