பெத்தவங்க

எத்துனை நாள்
தாங்கிடுவாய் = நம்
எல்லா துன்பம்
சுமந்திடுவாய்…….
இத்துனைநாள்
பொறுத்தவளே =இன்னும்
இருவருடம்
பொறுத்துவிடு……..
ஏர்பிடிக்க
அனுப்பாமல் = என்னை
ஏடுபிரிக்க
அனுச்சவளே……….
ஏக்கத்தோடு
படிக்கின்றேன் = நீ
எப்போதுமே
பயத்தவிடு……….
கைகட்டி
நின்னதெல்லாம் = இனி
கண்டிப்பா
நொருக்கிடுவேன்……….
கடன்பத்தி
திகைக்காத = நான்
கரைசேர்ந்தா
திருப்பிடுவேன்……….
மத்தவங்க
சொல்வதெல்லாம்=நான்
மாத்திகாட்டிடுவேன்……
பெத்தவங்க
உங்களுக்கு=நான்
பெருமயசேத்திடுவேன்…..
What's Your Reaction?






