பர்சனல் லோன் பெற விண்ணப்பிக்கும் முன்.. இந்த 5 கட்டணங்களை கவனிங்க! வங்கிகள் வெளியிடாது!

இன்றெல்லாம் அவசர தேவைகளுக்கு பலரும் பர்சனல் லோன்களைப் பெறுகின்றனர்.

Feb 26, 2025 - 14:30
 0  0

1. கட்டணங்கள்:

அப்படி பெரும் கடன்களுக்கு பல்வேறு கட்டணங்கள் விதிக்கப்படுகிறது. கடன் பெறுவதற்கு முன்பு இது போன்ற கட்டணங்கள் குறித்து தெரிந்து கொண்டு விண்ணப்பிப்பது அவசியமாகும். இதில் சில மறைமுக கட்டணங்களும் அடங்கும். சில வங்கிகள் இவற்றை வெளியிட தயங்கும். கடனுக்கு விண்ணப்பிக்கும் போது கடன் வாங்குபவர்கள் அவற்றை புரிந்து கொண்டு விண்ணப்பிப்பது எதிர்கால சிக்கல்களைத் தவிர்க்க உதவும்.


2. ப்ராசசிங் சார்ஜஸ்:

ப்ராசசிங் சார்ஜஸ்:

பொதுவாக கடன் செயல்முறையை அனுமதிக்கும்போது சில நிர்வாகச் செலவுகளை வங்கிகள் ஏற்க வேண்டும் என்பதால் கடன் தொகையில் 1 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தத் தொகை கடன் வழங்கும் நேரத்தில் கடன் தொகையிலிருந்து கழிக்கப்படும். ஒரு வேளை நீங்கள் ரூ.1 லட்சம் கடன் பெற விண்ணப்பித்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

இந்தத் தொகையில் 1 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை நீங்கள் கடன் பெறும் வங்கியைப் பொறுத்து பிராசசிங் சார்ஜஸ் கழிக்கப்பட்டு அதன் பின்னரே உங்களிடம் மீதி தொகை கடனாக வழங்கப்படும்.

3. தாமதக் கட்டணங்களுக்கான அபராதம்:

கடன் வாங்கியவர் ஈஎம்ஐ தொகையை சரிவர செலுத்தாமல் இருந்தால் வங்கிகள் தாமதத்திற்கு அபராதம் வசூலிக்கும். இந்த அபராதத் தொகை 2 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை இருக்கலாம். மேலும் தாமதமாக ஈஎம்ஐ செலுத்தும் போது உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் குறையத் தொடங்கும். இதனால் எதிர்காலத்தில் கடன் பெறும் வாய்ப்புகளை இழக்க நேரிடலாம்.

4. கடனை கேன்சல் செய்வதற்கான கட்டணங்கள்:

ஒரு சிலர் கடன் பெற வேண்டும் என்று விண்ணப்பித்து விட்டு, கடனுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதும் கடனை ரத்து செய்வார்கள். இது போன்ற கடன் ரத்துக்கு வங்கிகள் சார்ஜ் விதிக்கும். இந்த கட்டணம் பொதுவாக ரூ. 1,000 முதல் ரூ. 3,000 வரை, நீங்கள் வாங்கும் கடனைப் பொறுத்து இருக்கலாம்.

5. ஈஎம்ஐ பவுன்ஸ் சார்ஜஸ்:

போதுமான தொகை இல்லாததால் ஈஎம்ஐ பவுன்ஸ் ஆகிவிட்டால் வங்கிகள் ஜிஎஸ்டி உடன் சேர்த்து பவுன்சுக்கு ரூ. 500 முதல் ரூ. 1,000 வரை கட்டணம் விதிக்கும். அடிக்கடி ஈஎம்ஐ பவுன்ஸ் ஆனால் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படலாம். இதனால் எதிர்காலத்தில் கடன் பெறுவதில் சிரமம் ஏற்படும் வாய்ப்புள்ளது.

6. டாக்குமெண்டேஷன் சார்ஜஸ்:

பெரும்பாலும் வங்கிகள் கடனுக்கு டாக்குமெண்டேஷன் சார்ஜஸ் என்ற பெயரில் ரூ. 500 முதல் ரூ. 2,000 வரை கட்டணம் வசூலிக்கின்றன. இந்த கட்டணங்கள் கடன் ஆவணங்களை தயார் செய்வதற்கு, சரி பார்ப்பதற்கு என பல்வேறு செலவுகளை உள்ளடக்கிய கட்டணமாகும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0