பென்குயின்கள்
பென்குயின்கள் என்பது நீரில் வாழும் பறவை இனம். பறவை இனத்தைச் சார்ந்தவையாக இருந்தாலும் இந்தப் பென்குயின் பறவைகளால் பறக்கமுடியாது.

பென்குயின்கள் தங்கள் வாழ்நாளில் முக்கால்வாசி (மூன்று பங்கு) காலத்தை கடலில் செலவழிக்கின்றன. உணவுக்காக இவை கடல்களை நம்பியுள்ளன.
அதிக அளவில் மீன்பிடிப்பது, பிளாஸ்டிக் பொருள்கள், எண்ணெய்க் கசிவுகள் உள்ளிட்ட மாசுபாடுகள் இந்தப் பறவைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன.
உலகம் முழுவதும் 18 வகையான பென்குயின்கள் உள்ளன. இவற்றில் மிகப்பெரியது பேரரசப் பென்குயின் (Emperor penguin). இவை 1.1 முதல் 1.3 மீட்டர் வரை உயரம் வளரக் கூடியவை. மிகச்சிறியது சிறிய பென்குயின் (Little penguin) ஆகும். இதன் உயரம் 30 முதல் 35 சென்டிமீட்டர் வரை இருக்கும்.
பென்குயின்கள் ஒருநாளில் 70% நேரத்தை தூங்கிக் கழிக்கின்றன.
பென்குயின்கள் 20 முதல் 30 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.
தன் உடலில் 2 கிலோ எடையுள்ள சிறகுகளைப் போர்த்திக்கொண்டு, கடும் குளிரை இதமாகச் சமாளித்து விடுகின்றன இந்தப் பென்குயின்கள்.
இதற்குப் பிடித்த உணவு கடல்மீன்கள்தான். கடலில் வெகு ஆழத்துக்குச் சென்று டைவ் அடித்து விதவிதமான மீன்களை ஆசை தீர துரத்திப் பிடித்துச் சாப்பிடும். கடலில் 200 மீட்டருக்குக் கீழ் சர்வ சாதாரணமாக பென்குயின்கள் நீச்சல் அடிக்கும்.
ஐஸ் பாறைகளைக் கண்டுவிட்டால், காலால் நடக்காமல் வயிற்றால் வழுக்கியபடி படுவேகத்தில் ‘ஸ்கேட்டிங்’ செய்யும். சில நேரங்களில் இரை தேடிக் கடலில் குதிக்கும் பென்குயின்கள், பல நாட்கள் வரை கரைக்குத் திரும்பாமல் நீந்தும்.
மிகவும் கடுமையான குளிர் பிரதேசங்களில் வசிக்கும் இவை மிகவும் சாதுவானவை.
பனிப்பாறைகள் நிறைந்த துருவப் பகுதியில் மட்டுமே இவைகள் வாழும். ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, பெரு, நியூசிலாந்து நாடுகளின் கடற்கரைகள், தெற்கு அட்லாண்டிக், அண்டார்டிகா,பசிபிக் கடற்கரைகள்தான் பென்குயின்கள் வாழும் இடங்கள்.
பெரிய பனிப்பாறைகள் மிதக்கும் கடலில், இவைகள் குதித்து விளையாடும். தண்ணீரில் மூழ்கி மீன்களைப் பிடித்துச் சாப்பிடும். இவை நல்ல தண்ணீரைக் குடிக்காது. கடல் நீரை மட்டுமே குடிக்கும்.
What's Your Reaction?






