பார்லே ஜி விளம்பர சிறுமி யார் தெரியுமா ? சுதந்திரத்திற்கும் பார்லே ஜி சிறுமிக்கும் என்ன தொடர்பு ?
சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லோரும் டீ, காஃபி ஆகிய பானங்களுடன் இரண்டு பார்லே ஜி பிஸ்கட் ருசிப்போம். பார்லே - ஜி பிஸ்கட் பாக்கெட் வாங்கும் போதெல்லாம் விளம்பரத்தில் இருக்கும் முகத்தை பார்த்து ரசிப்போம் அல்லது கொஞ்சுவோம். பார்லே-ஜி சிறுமியின் கண்கள் தலைமுடி வசீகரமானது. யார் அந்த பார்லே ஜி விளம்பர சிறுமி ? வாருங்கள் தெரிந்து கொள்வோம்.

பல தலைமுறைகளாக தாத்தா - பாட்டி காலம் முதல் பேரன் பேத்தி காலம் வரை எல்லோரும் விரும்பி ருசிக்க கூடிய பிஸ்கட் என்றால் அது பார்லே - ஜி. என்னுடைய நினைவில் ரண்டு ரூபாய்க்கு பார்லே ஜி பிஸ்கட் பாக்கெட் வாங்கிய நியாபகம் உள்ளது. தற்போது பார்லே - ஜி பிஸ்கட் பாக்கெட் 5 ரூபாய்க்கு கிடைக்கிறது. இன்னும் ஒரு சில இடங்களில் 3 ரூபாய்க்கு பார்லே ஜி பிஸ்கட் பாக்கெட் கிடைக்கிறது. எந்த ஒரு உணவுப் பொருளின் கவரையும் ஏடா கூடமாக கிழிப்போம். ஆனால் பார்லே ஜி பாக்கெட் கிழிக்கும் போது கவனமாக செயல்படுவோம். ஏனெனில் பார்லே ஜி சிறுமி பாக்கெட்டில் இருக்கும் சிறுமியின் முகத்தை கிழிக்க மனம் ஏற்காது. பார்லே ஜி பிஸ்கட் பாக்கெட்டின் விளம்பரத்தில் இருக்கும் சிறுமி யார் ? சிறுமிக்கும் சுதந்திர போராட்டத்திற்கும் என்ன தொடர்பு ? தெரிந்து கொள்வோம்.
பார்லே ஜி பிஸ்கட்
1939ஆம் ஆண்டு பார்லே ஜி பிஸ்கட் விற்கப்பட்டு வருகிறது. 84 ஆண்டுகளுக்கு முன்பாக அதை குளூக்கோ பிஸ்கட் என்ற பெயரில் விற்க தொடங்கினர். 1990 முதல் பார்லே - ஜி பிஸ்கட் பாக்கெட்டில் சிறுமியின் ( குழந்தை என்றும் சொல்லலாம் ) படம் இடம்பெற்றது. பஞ்சு போன்ற கன்னம், வசீகரிக்கும் கண்கள், கைகளில் எதையோ வாசித்தபடி பார்லே - ஜி பாக்கெட்டில் இருக்கும் சிறுமியின் படம் நம் முகத்தில் புன்னகை வரவழைக்க கூடியது. அன்று முதல் யார் அந்த சிறுமி என்ற கேள்வி எழுந்தது. ரூபாய் நோட்டில் காந்தி படத்தை போல பார்லே ஜி பிஸ்கட் பாக்கெட்டில் அச்சிறுமியின் படம் இருக்கும். பல ஆண்டுகள் கடந்தும் பாக்கெட்டில் சிறுமியின் படம் மாற்றப்படவில்லை
பார்லே ஜி பிஸ்கட் சிறுமி யார் ?
பெரும்பாலானோரிடம் பார்லே ஜி பிஸ்கட்டில் உள்ள சிறுமி யார் என கேட்டதற்கு நீரு தேஷ்பாண்டே, சுதா மூர்த்தி, குஞ்சன் குந்தானியா போன்ற பதில்கள் கிடைத்தன. நாக்பூரை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஒருவர் தனது மகளான நீரு தேஷ்பாண்டேவின் புகைப்படத்தை பார்லே ஜி நிறுவனத்திடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த சிறுமிக்கு தற்போது 80 வயது மேல் இருக்கும் என மற்றொரு தகவல் பரப்பபட்டது. அச்சிறுமியின் 4 வயது புகைப்படம் என்றும் கூறப்பட்டது. ஆனால் இவை எதுவுமே உண்மையல்ல என பார்லே பொருட்கள் குழுமத்தின் மேலாளர் மயங்க் ஷா 2023ல் பதிலளித்தார். 1960களில் உருவாக்கப்பட்ட கற்பனை உருவமே பார்லே ஜி பிஸ்கட்டில் இடம்பெற்றதாக கூறினார்.
பார்லே ஜி பிஸ்கட் - சுதந்திர போராட்டம்
1929ல் இனிப்புகள் தயாரிக்கும் நிறுவனமாக பார்லே தொடங்கப்பட்டது. 1938ல் உருவாக்கிய பிஸ்கட்டுக்கு பார்லே குளூக்கோ என பெயர் சூட்டினர். சுதேசி கொள்கையுடன் பார்லே - ஜி பிஸ்கட் விற்பனையை தொடர்புபடுத்த முடியும். நிறுவனத்தின் உரிமையாளர் மோகன்லால் தயாள் சவுஹான் மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டத்திலும், ஒத்துழையாமை இயக்கத்திலும் உடன்பட்டு சுயசார்பு இந்தியா நோக்கத்தில் பிஸ்கட் உருவாக்க முடிவெடுத்துள்ளார். இந்தியாவில் மேல் தட்டு மக்கள் மட்டுமே பிஸ்கட் சாப்பிட முடியும் என்ற நிலையை மாற்றியது அனைவருக்கும் கிடைக்கும் வகையில் பார்லே ஜி உருவாக்கப்பட்டுள்ளது. அப்போதெல்லாம் கொடுங்கோல் பிரிட்டீஷ் தயாரித்த பிஸ்கட் மட்டுமே இந்தியாவில் கிடைத்தது. பிரிட்டீஷ் பொருட்களுக்கு மாற்றாக பார்லே பிக்ஸட் விற்கப்பட்டது. பார்லே ஜி - குளூக்கோ பதிலாக ஜீனியஸ் என அர்த்தம் விவரிக்கப்பட்டது.
இன்றளவில் எத்தனையோ பிஸ்கட்கள் விற்பனைக்கு இருந்தாலும் பெரும்பாலான எளிய மக்களின் தேர்வு பார்லே - ஜி பிஸ்கட் மட்டுமே.
What's Your Reaction?






