பராசக்தி படத்துலையும் சிவகார்த்திகேயனுக்கு சாவுதான்! காரணம் ‘இந்த’ ரியல் ஹீரோவின் கதை இது..
Parasakthi Movie Real Life Story Of Student Rajendran : நடிகர் சிவகார்த்திகேயனின் 25வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில், இந்த படம் யாருடைய கதை என்பது குறித்த தகவல் வெளியவந்துள்ளது.

Parasakthi Movie Real Life Story Of Student Rajendran : தமிழ் திரையுலகின் முக்கிய நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது 25வது படத்தின் டைட்டில் நேற்று வெளியானது. இந்த நிலையில் இப்படத்தில் சிவகார்த்திகேயன் யாருடைய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது.
பராசக்தி திரைப்படம்:
இதுவரை நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கின்ற பல படங்களுக்கு பழைய படங்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. எதிர்நீச்சல், காக்கி சட்டை, வேலைக்காரன் உள்ளிட்ட பல பழைய படங்களின் பெயர்கள் இவருக்கு ராசியாக அமைந்துள்ளன. அந்த வகையில் சிவாஜி கணேசன் முதன்முதலாக நடித்த பராசக்தி படத்தில் தலைப்பு சிவகார்த்திகேயனின் 25 வது படத்தின் டைட்டிலாக அமைந்துள்ளது.
இந்த படத்தின் டைட்டில் டீசரில், சிவகார்த்திகேயன் கல்லூரியில் படிக்கும் மாணவராகவும், புரட்சியாளராகவும் காண்பிக்கப்பட்டுள்ளார். இது, உண்மையாகவே மொழிப்போர் போராட்டத்தில் உயிரிழந்த ஒரு கல்லூரி மாணவரின் கதைதான் எனக்கூறப்படுகிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
யாருடைய கதை?
பராசக்தி படம் 1960களில் நடந்த இந்தி தினத்திற்கு எதிரான போராட்டங்கள் குறித்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும் இந்த படத்தின் கதை நிஜமல்ல என, படுக்குழு கூறியது எடுத்து உண்மை சம்பவங்களின் தழுவல்தான் என படக்குழு விவரித்தது. இருப்பினும் சிவகார்த்திகேயனின் பராசக்தி பட லுக்கை பார்க்கும் போது அது குறிப்பிட்ட ஒரு போராட்டக்காரரின் வீரக்கதை என கூறப்படுகிறது.
இந்தியாவில் இந்தி மொழியை கட்டாயமொழியாக மத்திய அரசு மாற்றிய பிறகு அதற்கு எதிராக தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் போராட்டங்கள் வெடித்தன. குறிப்பாக 1960களில் இந்த போராட்டம் உச்சத்தை கடந்தது. 1965 ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தில் 70 முதல் 80 பேர் வரை உயிரிழந்தனர். அதில் ஒருவர்தான், அண்ணா பல்கலைக்கழக மாணவர் ராஜேந்திரன்.
ஆகஸ்ட் மாதம் நடந்த இந்தப் போராட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்தி தினத்திற்கு எதிரான பதாகைகளை ஏந்திக்கொண்டும், வீர முழக்கங்கள் இட்டப்படியும், அவர்கள் தங்கள் கல்லூரியில் இருந்து போராட்டத்தை தொடங்கினர். எந்த பிரச்சினையும் இன்றி நடந்து கொண்டிருந்த இந்தப் போராட்டத்தை காவல்துறையினர் நிறுத்தும்படி கூறியிருக்கின்றனர். அதற்கு மாணவர்கள் செவி சாய்க்காமல், தங்களின் வீர முழக்கங்களை உரக்க கூறியபடி, போராட்டத்தை தொடர்ந்திருக்கின்றனர். இதனால், போலீசார் மாணவர்கள் மீது துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டு இருக்கின்றனர். இதில் உயிரிழந்த மானவர்தான், ராஜேந்திரன். இவருக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?






