Papaya Benefits : மருத்துவ குணங்கள் கொண்ட மகத்தான பப்பாளி பழம்
பப்பாளி பழத்தில் கரோட்டின் சத்து அதிகமாக உள்ளது. உடல் நலத்துக்கு முக்கியமான வைட்டமின் சி-யும் பப்பாளியில் இருக்கிறது
1. பப்பாளி பழத்தின் சத்து

- ஃபோலேட்
- வைட்டமின் ஏ
- நார்ச்சத்து
- பொட்டாசியம்
- பேண்டோதெனிக் அமிலம்
இயல்பாக பப்பாளி பழம் அதிக மழைப்பொழிவு உள்ள பகுதியில் நன்றாக வளரும் ஆனால் உறைபனி பப்பாளி பயிரை சேதப்படுத்தி விடும். பப்பாளி பழம் முதன் முதலாக மத்திய அமெரிக்காவில் கண்டறியப்பட்டது. அந்த பகுதி மக்கள் பப்பாளி பழத்தை அதன் மருத்துவ குணங்களுக்காக சாப்பிட்டு வந்துள்ளனர். தற்போது ஹவாய், பிலிப்பைன்ஸ், இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, ஆப்ரிக்காவின் சில நாடுகள் பப்பாளி உற்பத்தியில் முன்னிலை வகிக்கின்றன.
மீடியம் சைஸ் பப்பாளியில் ஒரு நாளைக்கு தேவையானதை விட 200 விழுக்காடு அதிகமான வைட்டமின் சி உள்ளது. இந்த வைட்டமின் இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
2. இதய நோய்க்கு எதிரான பாதுகாப்பு
பப்பாளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் உள்ளன. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ள உணவுகள் இதய நோய் அபாயத்தைக் குறைக்கும். கூடுதலாக பப்பாளியில் உள்ள அதிக நார்ச்சத்து இதய நோய் அபாயத்தைக் குறைக்கும். நார்ச்சத்து நிறைந்த உணவுகள் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கின்றன.
பப்பாளியின் மற்ற நன்மைகளில் ஃபோலிக் அமிலம் அடங்கும். இது ஹோமோசைஸ்டீன் என்ற அமினோ அமிலத்தை குறைவான தீங்கு விளைவிக்கும் அமினோ அமிலங்களாக மாற்றுவதற்குத் தேவைப்படுகிறது. அதிக அளவு ஹோமோசைஸ்டீன், இறைச்சிப் பொருட்களில் காணப்படும் அமினோ அமிலம் இதய நோய்க்கான ஆபத்து காரணியாகும். பப்பாளி சாப்பிடுவது ஹோமோசைஸ்டீன் அளவைக் குறைத்து இதய நோய் ஆபத்தைக் குறைக்கிறது.
3. செரிமானம்

பப்பாளியில் பப்பைன் மற்றும் சைமோபாபைன் என்ற இரண்டு என்ஜைம் உள்ளன. இரண்டு என்ஜைம்களும் புரதங்களை ஜீரணிக்கின்றன. அதாவது அவை செரிமானத்திற்கு உதவுவதோடு வீக்கத்தைக் குறைக்கும். பப்பேன் மற்றும் சைமோபபைன் இரண்டும் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன. தீக்காயங்கள், கடுமையான வலியைக் குறைக்க அவை உதவக்கூடும். மேலும் கீல்வாதம் மற்றும் ஆஸ்துமா போன்ற நாள்பட்ட அழற்சி நிலைகளுக்கு உதவும்
4. நோய் எதிர்ப்பு அமைப்பு
வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. உடலை பாக்டீரியா மற்றும் வைரஸ் நோய்களை எதிர்த்துப் போராட அனுமதிக்கிறது. பப்பாளியில் இந்த ஆன்டிஆக்ஸிடன்ட் நல்ல அளவில் உள்ளது. பப்பாளி வைட்டமின் ஏ-வின் சிறந்த மூலமாகும். இது ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு அமைப்புக்கு முக்கியமானது.
5. புரோஸ்டேட் புற்றுநோய் பாதுகாப்பு
லைகோபீன் என்பது சிவப்பு மற்றும் ஆரஞ்சு உணவுகளில் காணப்படும் ஒரு இயற்கை நிறமி ஆகும். தக்காளி, தர்பூசணி மற்றும் பப்பாளி ஆகியவை லைகோபீனின் நல்ல ஆதாரங்கள். அதிக லைகோபீன் சாப்பிடுவது புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது என்று சில நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு விரிவான ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன.
What's Your Reaction?






