Oscars 2025: 97வது ஆஸ்கார் விருதுகளை தட்டி தூக்கியது யார்; யார்? முழு வின்னர் லிஸ்ட்!!
97வது ஆஸ்கார் விருது விழா இன்று கோலாகலமாக நடைபெற்ற நிலையில், அதில் விருது வென்றவர்கள் யார் யார் என்கிற முழு வின்னர்ஸ் லிஸ்ட்டை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

97வது ஆஸ்கார் விருதுகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. உலக சினிமாவில் மிகவும் உயரிய விருதாக கருதப்படும் இந்த ஆஸ்கார் விழாவில் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்து அவர்களுக்கு விருது அளித்து கவுரவப்படுத்தப்படும்
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருது விழாவை நகைச்சுவை நடிகர் கேனன் ஓ பிரைன் தொகுத்து வழங்கினார். 97வது ஆஸ்கார் விழாவில் விருது வென்றவர்கள் யார்... யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சிறந்த துணை நடிகர் - கிரண் கல்கின் (எ ரியல் பெயின்)
சிறந்த அனிமேஷன் திரைப்படம் - ஃப்ளோ
சிறந்த அனிமேஷன் குறும்படம் - இன் தி ஷேடோ ஆஃப் தி சைப்ரஸ்
சிறந்த ஆடை வடிவமைப்பு - பால் டேஸ்வெல் (விக்டு)
சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் - தி சப்ஸ்டன்ஸ்
சிறந்த எடிட்டிங் - சீன் பேக்கர் (அனோரா)
சிறந்த துணை நடிகை - ஜோ சல்டானா (எமிலியா பெரெஸ்)
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - விக்டு
சிறந்த அசல் பாடல் - எல் மால் (எமிலியா பெரெஸ்)
சிறந்த ஆவணப்பட குறும்படம் - தி ஒன்லி கேர்ள் இன் தி ஆர்கெஸ்ட்ரா
சிறந்த ஆவணப்படம் - நோ அதர் லேண்ட்
சிறந்த ஒலி - டூன்: பகுதி இரண்டு
சிறந்த காட்சி விளைவுகள் - டூன்: பகுதி இரண்டு
சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம் - ஐ யம் நாட் எ ரோபோட்
சிறந்த ஒளிப்பதிவு - தி ப்ரூடலிஸ்ட்
சிறந்த சர்வதேச திரைப்படம் - ஐ யம் ஸ்டில் ஹியர் (பிரேசில்)
சிறந்த அசல் திரைக்கதை - சீன் பேக்கர் (அனோரா)
சிறந்த தழுவல் திரைக்கதை - பீட்டர் ஸ்ட்ராகன் (கான்க்ளேவ்)
What's Your Reaction?






