7000 சதுர அடியில் நயன்தாராவின் ஸ்டூடியோவை பார்த்தீங்களா? உள்ளே இவ்வளவு விஷயம் இருக்கா?
திரைத்துறையில் நட்சத்திர ஜோடிகளாக மின்னும் நடிகை நயன்தாரா மற்றும் அவருடைய கணவர் விக்னேஷ் சிவன் சமீபத்தில் ஆர்கிடெக்சுரல் டைஜஸ்ட் இந்தியா என்ற நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தங்களுடைய ஸ்டூடியோவை காண்பித்துள்ளனர். சுமார் 7000 சதுர அடி பரப்பிலான காலனித்துவ பாணியில் கட்டப்பட்ட பங்களாவை ஒரு ஸ்டூடியோவாக மாற்றியுள்ளனர். பார்ப்பதற்கே மிக அழகாக இருக்கும் இந்த ஸ்டூடியோ இணையத்தில் தற்போது பலராலும் பகிரபட்டு வருகிறது.

மார்ச் 15-ஆம் தேதி இன்ஸ்டாகிராமில் ஆர்கிடெக்சுரல் டைஜஸ்ட் இந்தியா நிறுவனம், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஸ்டுடியோவின் படங்கள் மற்றும் வீடியோவை பகிர்ந்தது. இது இதற்கு முன்னர் ஒரு வீடாக இருந்துள்ளது. இதைத்தான் இவர்கள் ஸ்டூடியோவாக மாற்றியுள்ளனர்.
இந்த வீட்டை வடிவமைப்பாளர் நிகிதா ரெட்டி என்பவர் புதுப்பித்துள்ளார். இவர்களுடைய ஸ்டூடியோ அதிநவீன பழமையான வீடாக காட்சியளிக்கிறது. இதில் உயரமான உட்புறங்கள், விசாலமான அறைகள் மற்றும் கண்ணாடி முகப்புகள் உள்ளிட்டவையும் காண்பிக்கப்படுகிறது. அதோடு பகல் நேரங்களில் போதிய வெளிச்சம் உட்புகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அமைந்துள்ள இந்த ஸ்டூடியோவின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால்.. மண் போன்ற நிறங்களை உடைய உட்புறங்கள். பழுப்பு மற்றும் பச்சை வண்ணங்களால் வீடு முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. உள்ளே பிற பாரம்பரிய கலைப் பொருட்களும் உள்ளன. மர சிற்பங்கள், பிரம்பு மற்றும் தேக்கு மர தளபாடங்கள், லினன் துணிகள் போன்ற இயற்கை பொருட்களை அதிக அளவில் பயன்படுத்தியுள்ளனர். சென்னையில் உள்ள முக்கிய குடியிருப்பு பகுதியான வீனஸ் காலனியில் இந்த ஸ்டூடியோ அமைந்துள்ளது.
அதோடு வீட்டின் உள்ளே ஒரு கான்பரன்ஸ் ரூம் உள்ளது. யாரேனும் கெஸ்ட் வீட்டிற்கு வந்தால்.. அந்த ரூமை பயன்படுத்தலாம். அதே போல பார்ட்டி செய்வதற்கும் ஏற்றதாக தெரிகிறது. சுற்றிப் பார்க்க வெளியில் ஒரு பெரிய இடம் ஒன்று உள்ளது. விருந்தினர்கள் மற்றும் நண்பர்களுடன் ஓய்வு எடுக்கவும் விருந்து உபசரிப்பு செய்யவும் வசதியான ஓய்வறை உள்ளது.
What's Your Reaction?






