என் தாயகம்

நாட்டுப்பற்று கவிதைகள்

Jan 28, 2025 - 15:11
 0  3
என் தாயகம்

இந்த   தரனியிலே    தரமிக்கது
       தாமிரபரணி  இருக்கும் தமிழகமடா...
இந்நாட்டின்  பெருமை சொல்ல
       என்  வாழ்நாள்   போதுமா..?

பிறந்தவ   னெல்லாம்  ஒவ்வொரு
       பெருமையை  சொல்லிச் சென்றான்,
இன்னும் சொல்லி மாழவில்லை
         இந்த  மாநகரின்  பெருமை

சிற்பக்கலையில் சிறந்தவர் பல்லவர்கள்
         அதை பத்துப்பாட்டு விளக்குகிறது,
பாரததேசத்தில்  வளம்பொருந்திய நாடு
         என் செந்தமிழ்நா   டல்லவா..?

வீரத்தில்  தமிழனுக்கு  ஈடுஅந்தகாலம்
        முதல் இந்தகாலத்திலும் இல்லை..
ஒரு வீரனின் பெருமையை ..
        இரு-பத்து நுல்கலா கூறுவது..?

அவன் வீரத்தை என்னிப்பார்க்கையில்
         என்னுள்ளும் பலம் வருகிறது..
வராமலா   போகும்...?  -அது
         கரிகாலனின் பெருமை  யல்லவா..?

என்நாட்டின்  கவிபுகழ்   இக்காலம்
         முதல்  எக்காலமும்  பாடும்..
கவி வாலிபோனான் வள்ளுவனுக்குப்
         பிறகு வைரமுத்துவும் வந்தார்.

அவ்வை முதல் அப்துல் ரகுமான்
         வரை போற்றிப் புகழ்ந்தனர்..
என் தாய்மொழியின் பெருமையை
        தமிழ்காவலர்  முதல் தாராபாதிவரை

கற்புக்  கரசி  கண்ணகியும்
       வெள்ளையனை எதிர்த்த
வேலுநாட்சியாரும் வாழ்ந்த  வளமிக்க. 
        நாடு   என்   தந்தைநாடு..

தமிழ்  தோன்றிய குமரி கண்டம்
        தண்ணீரில்  மூழ்கிய  போதும்
சங்கம்  வைத்து தமிழ்
         காத்தான்  என்  மூத்தோன்..

பட்டுவனிகத்தை பற்றி பத்துப்பாட்டும்,
        எட்டுத் தொகையும் கூறுகிறது..
முத்துவனிகத்தை பற்றி சிலபதிகாரமும்,
         மணிமேகலை யும் கூறுகிறது..

இரக்க      குணம்  என்
         தமிழ்  பெண்களின் தரம்
ஆம் மதுரை மீனாட்சியும்
          மணிமேகலயும் பிறந்த நாடு..

காவிரி,  வைகை, பொருனைநதி
     இம்முன்றும்  கங்கைக்கு இனையாகும்
உணவு தொழில்  செய்து
      உயிர் காத்தான் தமிழன்

இன்று  பெயர்மாற்ற   மடைந்து
        விவசாயம் செய்து வையத்தை
காக்கிறான் இன்றும் தமிழன்
        என்னவளம்  இல்லை என் நாட்டில்..?

என்றும்   கற்பேன்   தமிழை
        என்றும் நிற்பேன் -நான்
தமிழன் னென்ற திமிரோடு
         இந்த  தரனியிருக்கும்  வரை..

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow