முட்டைகோஸ் பக்கோடா இந்த மாதிரி ஒரு தடவை காரசாரமா ஆந்திரா ஸ்டைல்ல செஞ்சு பாருங்க!!
How to prepare Cabbage Pakkoda Recipe in tamil

முட்டைகோஸ் பக்கோடா இந்த மாதிரி ஒரு
தடவை காரசாரமா ஆந்திரா ஸ்டைல்ல
செஞ்சு பாருங்க!!
வெங்காய பக்கோடா, கடலை மாவு பக்கோடா, பாகற்காய் பக்கோடா, உருளைக்கிழங்கு சிப்ஸ், முந்திரி பக்கோடா, ராகி பக்கோடா, சிக்கன் பக்கோடா அப்படின்னு நிறைய பக்கோடா ரெசிபிஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா இந்த மாதிரி முட்டைக்கோஸ் வச்சு ஒரு தடவை பக்கோடா செஞ்சி பாருங்க மொறு மொறுன்னு சாப்பிடறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும். முட்டைக்கோஸ் வச்சு பொரியல் கூட்டு முட்டைகோஸ் சாம்பார் அப்படின்னா நிறைய செஞ்சு இருப்பீங்க ஆனா முட்டைக்கோஸ் வச்சு பக்கோடா யாராவது ஒன்னு ரெண்டு பேரு தான் செஞ்சிருப்பிங்க
முட்டைக்கோஸ் வச்சு மஞ்சூரியன் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா அதே முட்டைக்கோஸ் வச்ச இந்த மாதிரி பக்கோடா அதுவும் ஆந்திரா ஸ்டைலில் செஞ்சு சாப்பிட்டு பாருங்க டேஸ்ட் ரொம்பவே சூப்பரா இருக்கும். இந்த டேஸ்டான சுவையான முட்டைகோஸ் பக்கோடா ரெசிபி செஞ்சு கொடுத்தீங்கன்னா வீட்ல இருக்குற குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. இதுல முந்திரிப்பருப்பு பச்சை மிளகாய், கருவேப்பிலை எல்லாமே வறுத்து சேர்க்கும்போது ரொம்பவே வாசனையா சாப்பிடுவதற்கு அவ்வளவு சூப்பரா இருக்கும். இந்த சுவையான முட்டைக்கோஸ் பக்கோடா ரெசிபியை குழந்தைகளுக்கு ஈவினிங் டைம்ல செஞ்சு கொடுங்க. கண்டிப்பா ஸ்கூலுக்கு போயிட்டு வர குழந்தைகள் ஜாலியா இதை ரசிச்சு ருசிச்சு சாப்பிடுவாங்க மொறுமொறுன்னு செஞ்சு கொடுத்தாதான் புடிக்கும் இந்த முட்டைகோஸ் பக்கோடா வச்சு ஒரு மசாலா கூட ட்ரை பண்ணலாம் காளான் நமக்கு ரோட்டு கடையில் கிடைக்கும் அதுல கூட பாதி முட்டைகோஸ் தான் சேர்ப்பாங்க. ரொம்பவே டேஸ்ட்டா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான முட்டைகோஸ் பக்கோடா ரெசிபி எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.. 1 பவுள் 1 கடாய்
தேவையான பொருட்கள்
1 கப் முட்டைக்கோஸ், 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 2 டேபிள் ஸ்பூன் சோள மாவு ,2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 2 கொத்து கறிவேப்பிலை,2 பச்சை மிளகாய், 10 முந்திரி பருப்பு, 1 டீஸ்பூன் மிளகு தூள்,1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் ▢1 டீஸ்பூன் சீரகத்தூள், 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், உப்பு தேவையான அளவு, எண்ணெய் தேவையான அளவு செய்முறை ▢ நறுக்கிய முட்டைக்கோஸை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு மஞ்சள் தூள் மிளகுத்தூள் சீரகத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். ▢ இஞ்சி பூண்டு விழுது சோள மாவு அரிசி மாவு கடலை மாவு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும். ▢ சூடான எண்ணெயில் இதனை உதிர்த்து சேர்த்து நன்றாக பொரித்து எடுத்துக் கொள்ளவும். ▢ பிறகு அதே எண்ணெயில் முந்திரி பருப்பு பச்சை மிளகாய் கறிவேப்பிலையை தனித்தனியாக வறுத்து எடுத்து முட்டைக்கோசு சேர்த்து விட்டால் சுவையான முட்டைகோஸ் பக்கோடா தயார்.
What's Your Reaction?






