Mood swing control tips: மூட் ஸ்விங்கைக் கட்டுப்படுத்த உங்களுக்கு சூப்பர் டிப்ஸ் இதோ!
How to reduce mood swings naturally: மோசமான மனநிலை நம் அன்றாட வாழ்வைப் பாதிக்கும் முக்கிய காரணியாகும். எனவே இதைக் கட்டுப்படுத்துவதற்கான வழியைத் தெரிந்து கொண்டிருப்பது அவசியம். இதில் மனநிலை மாற்றங்கள் அதாவது மூட் ஸ்விங்கைக் கட்டுப்படுத்துவதற்கான சில குறிப்புகளைக் காணலாம்.

How to manage mood swings naturally: அன்றாட வாழ்வில் பலரும் பல பிரச்சனைகளைக் கையாள்கின்றனர். அவை உடல்நலம் அல்லது மனநலம் சார்ந்த பிரச்சனையாக இருக்கலாம். அவ்வாறே மாதவிடாய் முதல் பருவகால மாற்றம் வரை பல்வேறு காரணிகளால் மனநிலை பாதிக்கப்படலாம். இது நாள்பட்ட மன அழுத்தமாக இருக்கலாம். அதிலும் சில சமயங்களில் திடீரென ஏற்படும் எரிச்சல், திடீர் சோகம் மற்றும் மனக்கிளர்ச்சியான நடத்தை போன்றவை மனநிலை மாற்றங்களின் அறிகுறிகளாகும். இது மன ஆரோக்கியத்தையும், நம்மைச் சுற்றியுள்ளவர்களுடனான உறவையும் பாதிக்கலாம்.
மனநிலை பாதிப்புகள் சில நேரங்களில் தேவையற்ற பிரச்சனைகளைச் சந்திக்கும் சூழல் ஏற்படலாம். எனினும், இந்த மனநிலை மாற்றங்களை நிறுத்த பல்வேறு வழிகள் உள்ளன. இயற்கையான முறையில் மனநிலை மாற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கான முதல் படியாக, அதன் தூண்டுதலுக்கான காரணத்தைக் கண்டறிவது அமைகிறது. இந்த தூண்டுதலைத் தவிர்ப்பது அல்லது சமாளிப்பதற்கான வழிகளைக் கண்டறியலாம். இது தவிர, ஆரோக்கியமான உணவுமுறை, யோகா, தியானம், சரியான தூக்கம் போன்ற தளர்வு நுட்பங்களைப் பின்பற்றுவதன் மூலம் மனநிலை மற்றும் ஒட்டுமொத்த மன ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
மூட் ஸ்விங் எதனால் ஏற்படுகிறது?
மனித உணர்ச்சிகளனாது ஹார்மோன்கள், மூளை செயல்முறைகள் அல்லது நமது அன்றாட வாழ்க்கையில் நிகழும் புதிய செயல்கள் போன்ற பல்வேறு காரணிகளால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இது மனநிலை மாற்றங்களுக்கு முக்கிய காரணமாகிறது. சாதாரண மனச்சோர்வு என்பது ஒவ்வொரு தனிமனிதனும் அனுபவிக்கக் கூடிய மனநிலை மாற்றங்களாகும். இது பொதுவாக சோகத்தை வெளிப்படுத்துகிறது. பெரும்பாலும் இளைஞர்களிடையே ஏற்படும் மனநிலை மாற்றங்கள் மிகவும் கவனிக்கத்தக்கதாகும். எனினும், வேறுசில சூழ்நிலைகள் அல்லது விளைவுகளால் பெரியவர்களிடமும்மனநிலை மாற்றங்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
மூட் ஸ்விங்கை கட்டுப்படுத்துவது எப்படி?
உணர்ச்சிகளை அங்கீகரிப்பது
மனநிலை மாற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு முக்கியமான படியாக உணர்ச்சிகளை அடக்காமல் இருப்பது. எந்த முடிவும் இல்லாமல், அந்த உணர்ச்சிகளை அங்கீகரிப்பது அவற்றைச் சமாளிப்பதற்கான எளிய தீர்வாக அமைகிறது. ஆய்வு ஒன்றில், ஒருவர் எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளை பழக்கமாக ஏற்றுக் கொள்வது, அவர்கள் உளவியல் ஆரோக்கியத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மனநிலை மாற்றங்களை ஏற்றுக் கொள்வது
மனநிலை மாற்றங்களைக் கட்டுப்படுத்துவதைப் புரிந்து கொள்வதற்கான முதல் படியாக, மாற்றங்களை ஏற்றுக்கொள்வது அமைகிறது. தற்போதைய காலத்தில் உணர்ச்சிகரமான குறிப்புகள் மற்றும் தூண்டுதல்களைக் கண்காணிப்பதற்கென பல்வேறு மொபைல் பயன்பாடுகள் உள்ளன. இதன் மூலம் ஒருவர் நாட்குறிப்பைப் பயன்படுத்தி மனநிலையையும் உணர்வுகளையையும் கண்காணித்து தூண்டுதல்களை அடையாளம் காணலாம். ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் பருவகால மாற்றங்கள் போன்றவை மூளை தூண்டுதல்களுக்கு காரணமாகலாம்.
ஜர்னலிங் செய்வது
நல்ல மனநிலை மாற்றத்திற்கு வேறு சில நல்ல செயல்பாடுகளில் கவனம் செலுத்தலாம். அதன் படி, ஜர்னலிங் செய்வது அன்றைய நாளைப் பற்றி சிந்திக்க உதவுகிறது. இது மனநிலை மாற்றங்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதைப் புரிந்துகொள்ளவும், அவ்வாறு உணரவைத்தது என்ன என்பதைத் தெரிந்து கொள்ளவும் உதவும். இதில் எண்ணங்களை எழுதுவது உதவுகிறது. ஆராய்ச்சி ஒன்றில் ஜர்னலிங் என்பது உணர்ச்சியை மையமாகக் கொண்டதாகவும், நேர்மறையான விளைவுகளுடன் தொடர்புடையதாகவும் கூறப்படுகிறது.
உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது
பல உடல் செயல்பாடுகள் இயற்கையாகவே மனநிலை மாற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகளைப் புரிந்து கொள்ள உதவுகிறது. ஒரு சிறிய நடைபயிற்சி மேற்கொள்வது, இசை கேட்பது, இயற்கையில் நேரத்தை செலவிடுவது போன்ற நிதானமான செயலில் ஈடுபடுவது மனதை அமைதிப்படுத்த உதவுகிறது. மனநிலை மாற்றத்தை ஒரு நேர்மறையான அணுகுமுறையுடன் திறம்படச் சமாளிக்க, ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை
பழங்கள், காய்கறிகள், மெலிந்த புரதம் மற்றும் முழு உணவுகள் போன்றவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் நல்ல சமநிலையான உணவை பராமரிக்கலாம். இது தவிர, வாரத்தின் பெரும்பாலான நாட்களில் குறைந்தது அரை மணி நேரம் மிதமான தீவிர உடற்பயிற்சியை இலக்காக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் இரவில் 7-9 மணிநேரம் தூங்குவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மனநிலை, தியானம், யோகா மற்றும் ஆழ்ந்த சுவாசம் போன்ற தளர்வு நுட்பங்களும் இயற்கையாகவே மனநிலையைக் கட்டுப்படுத்துகிறது.
What's Your Reaction?






