செல்வத்தை பெருக்க சாணக்கியர் கூறும் 5 விதிகள்... என்னென்ன தெரியுமா?
சாணக்கிய நீதி உலகளாவிய ரீதியில் பிரசித்தி பெற்ற ஒரு தத்துவ நூலாக திகழ்கின்றது. இந்த நூல் ஆச்சாரியா சாணக்கியரின் கொள்கைகளையும் தத்துவங்களையும் உள்ளடக்கி தொகுக்கப்பட்டுள்ளது.
1. சாணக்கியர்
பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முழுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் ஆச்சாரியா சாணக்கியர்.
சாணக்கிய நீதியில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் பிரகாரம் வாழ்வில் செல்வத்தை பெருக்கிக்கொண்டே செல்வதற்கு சாணக்கியர் குறிப்பிடும் முக்கியமான 5 விதிகள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
2. சாணக்கியரின் 5 விதிகள்
சாணக்கியரின் கருத்தின் அடிப்படையில் செல்வத்தை அதிகரிக்க வேண்டும் என்றால், முதலில் வீண் செலவுகளை கண்டறிந்து நிறுத்த வேண்டும். பணத்தை புத்திசாலித்தனமாக கையாளும் ஆற்றல் இருப்பவர்கள் மட்டுமே செல்வத்தை பெறுக்க முடியும்
பணத்தை சேமிக்க வேண்டுமே தவிர கஞ்சனாக இருக்க கூடாது. பணத்தை எதிலும் முதலீடு செய்யாமல் கட்டி காப்பாற்றுபவர்களால் வாழ்வில் ஒருபோதும் செல்வத்தை அதிகரித்துக்கொள்ள முடியாது. எனவே அறிவார்ந்த ரீதியில் பணத்தை முதலீடு செய்வது அவசியம்.
சாணக்கியர் கூற்றுப்படி தீய செயல்களுக்கு பணத்தை செலவிடும் குணம் கொண்டவர்களால் வாழ்வில் எந்த நிலையிலும் செல்வ செழிப்பை பெற முடியாது. இவர்கள் தீராத வறுமையில் சிக்கிக்கொள்வார்கள் என சாணகக்கியர் குறிப்பிடுகின்றார்.
சாணக்கிய நீதியின் பிரகாரம் தங்களின் நிலையை உயர்த்திக்கொள்வதற்காக கடின உழைப்பை வழங்காதவர்கள் வாழ்வில் ஒருபோதும் செல்வமானது உயராது. கடின உழைப்பும் முயற்சியும் மிகவும் முக்கியம்.
சாணக்கியர் கூற்றுப்படி பணத்தை மதிக்காதவர்களும் பணத்தின் அருமையை உணராவர்களும் தங்கள் வாழ்வில் நிதி ரீதியில் உயர்வை பெறவே முடியாது.
What's Your Reaction?






