Miss World 2025 : 'உலக அழகி நான்தான்’ வெற்றி வாகை சூடினார் ஓபல் சுச்சதா சுவாங்ஸ்ரீ

ஐதராபாத்தில் நடந்த 72 ஆவது உலக அழகிப்போட்டியில் தாய்லாந்தைச் சேர்ந்த ஒபால் சுச்சாதா உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.

Jun 2, 2025 - 11:31
 0  4
Miss World 2025 : 'உலக அழகி நான்தான்’ வெற்றி வாகை சூடினார் ஓபல் சுச்சதா சுவாங்ஸ்ரீ

தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் கடந்த 10 ஆம் தேதி தொடங்கி நடந்துவந்த உலக அழகிப்போட்டியில் பல்வேறு நிலைகளில் அழகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். டாப் 40, 10, 5, உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டு இறுதிப்போட்டி நேற்று நடந்தது. இதில் தாய்லாந்து அழகியான ஒபால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. உலக அழகிப்போட்டியில் இரண்டாவது இடத்தை எத்தியோப்பியாவைச் சேர்ந்த ஹசத் டெரிஜீ, மற்றும் 3 ஆம் இடத்தை போலந்தைச் சேர்ந்த மஜா லஜ்தா ஆகியோர் வென்று அசத்தினர்.

உலக அழகிப்பட்டம் வென்ற 21 வயதாகும் ஒபால், தாய்லாந்தின் புக்கெட் நகரில் பிறந்தவராவார். தாய், சீன மொழி மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடியவர் ஒபால், தமாசட் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் குறித்து இளங்கலை பட்டத்தை படித்து வருகிறார்.

உலக அழகிப்பட்டம் வென்ற தாய்லாந்து அழகி, தனது நாட்டுக்கு முதல்முறையாக மகுடத்தை எடுத்துச்செல்வது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். 2021ஆம் ஆண்டு முதல் அழகிப் போட்டியில் பங்கேற்று வரும் ஒபால், 2023,2024 ஆம் ஆண்டுகளில் நடந்த தாய்லாந்து அழகிப்போட்டிகளிலும் பங்கேற்றவர் என்பது குறிப்பிடதக்கது.

வெற்றிக்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய ஒபால் சுச்சாதா, தனக்கு 'பொறுமை' மற்றும் 'உறுதிப்பாடு' ஆகியவை வெற்றிக்கான உண்மையான காரணமாக அமைந்தது. தன் மீது நம்பிக்கை வைத்து, தனது மதிப்புகளைப் பின்பற்றுவதே தன்னை இந்த நிலைக்குக் கொண்டு வந்ததாக அவர் கூறினார்.

இந்தப் பயணத்தின் போது பல சோர்வு மற்றும்  சிக்கலான தருணங்கள் இருந்தன, ஆனால் நம்பிக்கையை ஒருபோதும் கைவிடவில்லை என்றும் அவர் பகிர்ந்து கொண்டார். அவரைப் பொறுத்தவரை, ஒருவர் தன்னம்பிக்கையுடன் இருந்து தனது இலக்கில் கவனம் செலுத்தினால், அவர் எந்த சிரமத்தையும் சமாளித்து ஒரு நாள் வெற்றியை அடைய முடியும் என்று தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
குட்டி ஸ்டோரி நூல்களை தினந்தோறும் சுவை - நாளை உன்னைப் போற்றும் அவை.