பெண்கள் நாப்கின்களுக்கு பதிலாக இதை ஏன் பயன்படுத்தனும்னு தெரியுமா?

Usage of Menstrul cup and alternative of Napkin

Feb 24, 2025 - 14:33
 0  0
பெண்கள் நாப்கின்களுக்கு பதிலாக இதை ஏன் பயன்படுத்தனும்னு தெரியுமா?

பெண்கள் நாப்கின்களுக்கு பதிலாக இதை ஏன் பயன்படுத்தனும்னு தெரியுமா?

மாதவிடாய் கப்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் பெண்கள் தங்களது மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தக் கூடிய

நாப்கின்களுக்காக பல நூறு ரூபாய்களை செலவு செய்கின்றனர். இந்த நாப்கின்கள் இன்றைய தலைமுறை பெண்களுக்கு

வசதியானதாகவும், பயன்படுத்த எளிதானதாகவும் உள்ளது. இது போன்ற நாப்கின்களை பயன்படுத்தும் போது குறைந்தது

ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறைகளாவது இதனை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டியது அவசியமாகிறது.

இன்றைய நவீன யுக பெண்கள் தற்போது மென்சுரல் கப்களை (menstrual cup) பயன்படுத்தி வருகின்றனர். இது நாப்கின்களை

விட சுகாதாரமானதாகும். பயன்படுத்த எளிதானதாகும் இருக்கிறது என்று இதனை உபயோகப்படுத்தும் பெண்கள்

தெரிவிக்கின்றனர். மேலும் இதன் மீதான முதலீடும் மிகமிகக் குறைவு தான். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை

உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் பரிந்துரை இந்த மாதவிடாய் காலத்தில் இந்த மாதவிடாய் கப்களை

பயன்படுத்துவதன் மூலமாக, நாப்கிங்கள் மூலமாக உண்டாகும் தொற்றுக்களை தவிர்க்கலாம். இதனை பெண்களின்

உதிரப்போக்கிற்கு தகுந்தாற் போல் ஒரு நாளில், ஒரு சில முறைகள் சுத்தம் செய்து பயன்படுத்தலாம். பெண்கள் நல

மருத்துவர்கள் நாப்கின்கள், துணி, டம்போன்ஸ் போன்றவற்றை விட இந்த மாதவிடாய் கால கப்கள் சிறந்தது என்று

தெரிவிக்கின்றனர். பயன்படுத்தும் முறை இந்த மாதவிடாய் கப்பினை முதலில் ஒரு C வடிவம் வருமாறு மடித்துக் கொள்ள

வேண்டும். பின்னர் இதனை பெண்ணுறுப்பில் செருகிவிட வேண்டும். இதன் மடிப்பு உள்ளே சென்ற பிறகு தானாகவே

விரிந்து பழைய நிலைக்கு வந்துவிடும். இது பெண்ணுறுப்பின் உட்புற சுவரை தொட்டு மூடும் படியாக இருக்கும். இதனை

உள்ளே வைத்த உடன் ஒரு முறை திருப்பி விட்டுக் கொள்ளவும். இதனால் ஒருவேளை அந்த கப் விரிவடையாமல்

இருந்தால் விரிவடைந்து கொள்ளும். சிறந்தது : மாதவிடாய் கப்கள் மிகச்சிறந்த ஒன்றாகும். இதனை மீண்டும் மீண்டும் பல

முறைகள் பயன்படுத்திக் கொள்ளலாம். அடிக்கடி நாப்கின்களை வாங்கி பயன்படுத்த வேண்டிய தேவை இருக்காது.

நாப்கின்களை நாம் பயன்படுத்தி விட்டு வெளியே எறிய வேண்டியது இருக்கும். இதனால் சுற்றுப்புறம் மாசடைகிறது.

நாப்கின்னின் குறைகள் நாப்கின்களில் பிளாஸ்டிக் மற்றும் கெமிக்கல்கள் இருக்கும். இது கேன்சருக்கான வாய்ப்பை

அதிகரிக்கும். மேலும் இதனால் தொற்றுக்கள், பெண்ணுறுப்பு பகுதியில் அரிப்புகள் போன்றவை உண்டாகும். ஆனால்

 இப்போது பெண்களிடையே இந்த மாதவிடாய் கப்கள் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. தொற்றுகள்

பெண்ணுறுப்பு பகுதிகளில் அரிப்பு, தொற்றுகள் போன்றவை ஏற்பட்டால் அது மிகவும் அசௌகரியமான ஒன்றாக இருக்கும். 

ஆனால் இந்த மாதவிடாய் கப்களை பயன்படுத்துவதன் மூலமாக பெண்களுக்கு தொற்றுகள் எதுவும் உண்டாவதில்லை.

 அளவு இந்த மாதவிடாய் கப்களை வாங்கி பயன்படுத்துவதற்கு முன்னால் அதன் அடிப்படையை தெரிந்து கொள்ள

வேண்டியது அவசியம். பெண்ணுறுப்பின் அளவான ஒவ்வொருவருக்கும் மாறுபடும். உடலுறவில் ஈடுபடாமல் இருக்கும்

பெண்கள் சிறிய சைஸ் கப்களை வாங்க வேண்டியது அவசியம். இது சுகாதார ரீதியாகவும், பண ரீதியாகவும் பெண்களுக்கு

மிகச்சிறந்த பலனை கொடுக்கிறது. இதன் முக்கியத்துவம் வேலைக்கு செல்லும் பெண்கள், வெளியிடங்களுக்கு செல்லும்

பெண்கள் போன்றவர்களுக்கு அடிக்கடி நாப்கின்களை மாற்ற வேண்டிய கட்டாயம் இருக்கும். ஆனால் அதற்கு ஏற்ற

இடங்கள் இல்லாமல் போகலாம். இவ்வாறு மாற்றாமல் இருந்தால், பெண் உறுப்பில் தொற்றுகள் உண்டாகும். அதே போல்

உதிரப்போக்கு கரையானது ஆடைகளில் ஆகிவிட்டாத என்பது போன்ற பய உணர்வும் இருக்கும். இந்த மாதவிடாய்

கப்களில் இது போன்ற ஒரு பிரச்சனைகள் இருக்காது. பாதுகாப்பு இந்த கப்களை பயன்படுத்துபவர்கள் ஒரு விஷயத்தை

நன்றாக மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இந்த கப்களை மற்றவர்களுடன் பகிர்ந்து 

உபயோகப்படுத்த கூடாது. இதனை ஒருவர் மற்றுமே உபயோகப்படுத்த வேண்டும். இந்த கப்பை சூடான நீரில் போட்டு

நன்றாக கழுவி பயன்படுத்த வேண்டியது மிக முக்கியம். குறிப்பு இதனை பயன்படுத்தும் முறை குறித்தும், இதனை நீங்கள்

பயன்படுத்தலாமா வேண்டாமா என்பது குறித்தும் உங்களது மருத்துவரின் ஆலோசனையை பெற்றுக் கொள்ளுங்கள்.

இருப்பது தெரியாது மாதவிடாய் அதிகமாக இருப்பதாக இருந்தால், அது மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கும். இதனை 24

மணிநேரமும் பயன்படுத்தலாம். முதல் முறையாக பயன்படுத்துபவர்கள், இரவில் இதனை காலி செய்து, சுத்தம் செய்த

பின்னர் மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். சற்று சிரமம் முதலில் இந்த மாதவிடாய் கப்களை பயன்படுத்தும் போது ஒரு

சிலருக்கு சிரமமாக இருக்கலாம். ஆனால் இது சீக்கிரமே பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும். புதிதாக பயன்படுத்தும்

போது முதல் முறையாக பயன்படுத்தும் போது சிலருக்கு இது வலியை ஏற்படுத்தலாம். இதனை வெளியே எடுக்கும் போது

நீங்கள் வலியை உணரலாம். ஆனால் இது அனைவருக்கும் வலியை உண்டாக்காது. இந்த வலியை குறைக்க நீங்கள்

இயற்கையான வலி நிவாரணிகளை பயன்படுத்தலாம். தண்ணீர் மாதவிடாயின் போது உண்டாகும் வலியினை குறைக்க

தண்ணீர் அதிமாக குடிப்பது ஒரு மிகச்சிறந்த வழியாகும். வெள்ளரி போன்ற நீர்ச்சத்து அதிகமாக உள்ள பழங்களை நீங்கள்

சாப்பிடுவதன் மூலமாக இந்த வலியை குறைக்கலாம். தூக்கம் நன்றாக தூங்கி ஓய்வெடுப்பது என்பது நல்ல நிவாரணியாக

இருக்கும். உங்களால் முடிந்த ஒரு சின்ன உடற்பயிற்சியை செய்வதும் நல்லது. கேன்சர் நாப்கின்களை பயன்படுத்துவதால்

கூட கேன்சர் வருமா என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயமாக நாப்கின்களில் உள்ள கெமிக்கல்கள் கேன்சருக்கான அபாயத்தை

கேன்சர்

அதிகரிக்கிறது. ஏனெனில் இந்த நாப்கின்களில் பிளாஸ்டிக் உள்ளது. ஆபத்து நாம் வெள்ளையாக எது இருந்தாலும் அதை

அப்படியே அப்பட்டமாக நம்பும் திறனை கொண்டுள்ளோம். சில பெண்கள் நாப்கின்கள் வெண்மையாக இருந்தால் 

சுத்தமானது, சுகாதாரமானது என்று நினைக்கிறார்கள். ஆனால் இந்த காட்டனை சுத்தம் செய்ய வணிக நிறுவனங்கள்

டியோசின் (dioxin) என்ற ஒரு கெமிக்கலை பயன்படுத்துகின்றன. இத்தனையா? பெண்கள் தங்களது முழு வாழ்நாளில்

கிட்டத்தட்ட 6000 நாப்கின்களை பயன்படுத்த வேண்டியிருக்கிறது. எனவே இது பல ஆரோக்கிய கெடுதல்களை செய்கிறது.

நோய் எதிர்ப்பு தன்மையை குறைக்கிறது. ஹார்மோன்களின் வேலைகளை பாதிக்கிறது, ஒவரியன் கேன்சர் போன்றவைக்கு

காரணமாகிறது. பாக்டீரியா பாதிப்பு துணி போன்ற மெட்டிரியல்களால் ஆன நாப்கின்களை பயன்படுத்துவதால், அந்தரங்க

பகுதியில் ஈரப்பதம் அதிகரிக்கிறது. இதனால் அங்கு பாக்டீரியாக்களின் வளர்ச்சியானது அதிகமாகிறது. இது சில

பெண்களுக்கு அந்தரங்கபகுதியில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்று ஏற்பட ஒரு காரணமாக உள்ளது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0