கோவாவுக்கு காரை ரோட்டில் ஓட்டினு போகனும்னு அவசியம் இல்ல! இரயில்வே கல்லா கட்ட முடிவு பண்ணிடுச்சு!

குறிப்பாக, கோவாவிற்கு நண்பர்களுடன் விமானத்தில் அல்லது இரயிலில் செல்லும்போது அங்கு சென்ற பின், தங்களது சொந்த கார் இருந்தால் இன்னும் நன்றாக இருக்குமே என நம்மில் பலருக்கு தோன்றியிருக்கும். இந்த கவலை இனி தேவையில்லை. ஏனெனில், கோவாவிற்கு இரயிலில் காரையும் கொண்டு செல்லும் வசதியை கொங்கன் இரயில்வே (Konkan Railway) அறிமுகம் செய்துள்ளது.

Jun 10, 2025 - 11:21
Jun 10, 2025 - 11:21
 0  4
கோவாவுக்கு காரை ரோட்டில் ஓட்டினு போகனும்னு அவசியம் இல்ல! இரயில்வே கல்லா கட்ட முடிவு பண்ணிடுச்சு!

ஒரு சிலர் தொலைத்தூர பயணங்களை கார், பைக்குகளில் மேற்கொள்வதை காட்டிலும் விமானங்களில் அல்லது இரயில்களில் சவுகரியமாக மேற்கொள்ளவே விரும்புகின்றனர். குறிப்பாக, குழந்தைகள் உடனும், முதியவர்கள் உடனும் தொலைத்தூர பயணங்களை மேற்கொள்பவர்கள் விரைவாகவும், சவுகரியமாகவும் செல்வதற்காக விமானத்திலோ அல்லது இரயிலிலோ செல்லவே ஆசைப்படுகின்றனர். அவ்வாறு செல்ல வேண்டிய பகுதிக்கு சென்றபின் அந்த ஊரில் கார் டாக்ஸியை வாடகைக்கு எடுத்து பயன்படுத்துவர். அந்த நேரத்தில் தங்களது சொந்தமான கார் இருந்தால் இன்னும் நன்றாக இருக்குமே என்றே தோன்றும். ஆனால், வேறு வழியில்லாமல் கார் டாக்ஸியை பயன்படுத்துவோம்.



இந்திய அரபிக்கடலோர எல்லையை ஒட்டி, மும்பையையும் கர்நாடகாவின் மங்களூருவையும் இணைக்கக்கூடிய வழித்தடத்தில் இரயில் சேவையை வழங்குவதுதான் கொங்கன் இரயில்வேயின் பணி ஆகும். இந்தியன் இரயில்வேயின் ஓர் அங்கமாக விளங்கும் கொங்கன் இரயில்வே, வாகனங்களை இரயில்களில் கொண்டு செல்லும் புதிய கட்டண சேவையை அறிமுகம் செய்துள்ளது. ஆனால், தற்போதைக்கு முதற்கட்டமாக மும்பை மற்றும் கோவா இடையே மட்டும் இந்த வசதியை கொண்டுவர கொங்கன் இரயில்வே திட்டமிட்டுள்ளது.

 இதன்படி, மும்பையில் இருந்து கோவாவுக்கும், கோவாவில் இருந்து மும்பைக்கும் இரயிலில் வாகனங்களை கட்டணம் செலுத்தி கொண்டு செல்லலாம். முக்கியமாக, தனிநபர் பயன்படுத்தும் கார்களையும், வேன்களையும் இந்த இரு நகரங்களுக்கு இடையே இடமாற்றம் செய்வதற்கு இந்த புதிய சேவை ஆனது மிகவும் உதவிக்கரமாக இருக்கும். இதன் காரணமாக, மும்பை-கோவா நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து நெரிசலும் குறையும்.



இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் இயங்கும் நெடுஞ்சாலைகளுள் 600கிமீ-க்கும் அதிகமான நீளம் கொண்ட மும்பை- கோவா என்.எச்66 நெடுஞ்சாலையும் ஒன்றாகும். ஏனெனில், வட இந்தியாவில் இருந்து கோவாவுக்கு வரும் வாகன ஓட்டிகள் பலர் மும்பை-கோவா நெடுஞ்சாலையை தான் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, வார இறுதி நாட்களில் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை இந்த நெடுஞ்சாலையில் அதிகமாக இருக்கிறது.

 இத்தகைய போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் சிக்கி தவிப்பதற்கு பதில், காரை இரயிலில் அனுப்பி வைத்துவிட்டு, விமானத்தில் அல்லது இரயிலில் அல்லது பேருந்தில் மும்பையில் இருந்து கோவாவிற்கு சவுகரியமாக வரலாம். சாலை போக்குவரத்தை காட்டிலும் இரயில் போக்குவரத்து பாதுகாப்பானது என்பதால், இரயிலில் பாதுகாப்பாக கார் கொண்டுவரப்படும்.

 கொங்கன் இரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த புதிய சேவை ஆனது வருகிற ஆகஸ்ட்- செப்டம்பர் மாதத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை காலத்தின்போது சில நாட்களுக்கு அமல்படுத்தி சோதனை செய்யப்பட உள்ளது. இந்த சோதனையின் மூலமாக, இந்த இரயில் சேவைக்கு தொழிற்நுட்பம் சார்ந்த என்னென்ன சவால்கள் ஏற்படுகின்றன என்பதை கொங்கன் இரயில்வேயால் அறிய முடியும்.

 அத்துடன், இந்த சேவைக்கு மக்கள் மத்தியில் இருந்து எந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கிறது, பாதுகாப்பு சார்ந்து என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதையும் இரயில்வே நிர்வாகத்தால் இந்த சோதனை ஓட்டங்களின் மூலம் அறிய முடியும். அதுமட்டுமின்றி, இந்த சேவைக்கான கட்டணங்களை எந்த அளவிற்கு நிர்ணயிக்கலாம் என்பது குறித்தும் கொங்கன் இரயில்வே நிர்வாகத்திற்கு ஒரு தெளிவு கிடைக்கும்.


What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
குட்டி ஸ்டோரி நூல்களை தினந்தோறும் சுவை - நாளை உன்னைப் போற்றும் அவை.