Kargil War Day: கார்கில் போர் வெற்றி தினம் இன்று!

1999 ஜூலை 26-ஆம் தேதி ஆகும். கார்கில் போரில் வெற்றி பெற்றதன் நினைவாக ஜூலை 26-ம் தேதி ஆண்டுதோறும் கார்கில் வெற்றி தினமாகக் கொண்டாடப்படுகிறது.

Jul 26, 2023 - 09:42
 0  22
Kargil War Day: கார்கில் போர் வெற்றி தினம் இன்று!
Kargil War Day

1999- ல் பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் வெற்றி தினம் ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

கடந்த 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தினர் ஜம்மு-காஷ்மீரின் கார்கில் பகுதியில் ஊடுருவி அப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்தனர். இதனால் இந்திய ராணுவத்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் மூண்டது. மிகப்பெரிய மலைத் தொடரில் இந்த போர் நடந்தது. சவால்கள் நிறைந்த இந்தப் போரில், பாகிஸ்தானுக்கு இந்தியா பலத்த அடி கொடுத்தது. பாகிஸ்தானின் செயலுக்கு அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மன் உள்ளிட்ட உலகின் முக்கியமான நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தன. ஆனால், பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் பகுதியில் ஊடுருவலை நிறுத்தவில்லை.

                                        

இந்திய பகுதியான கார்கில் பகுதியை மீட்க ‘விஜய் நடவடிக்கை' என்கிற பெயரில் இந்திய ராணுவம் முழுமையாக களமிறக்கப்பட்டது. மைனஸ் டிகிரி குளிர் உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொண்டு சவால்கள் நிறைந்த வகையில் இந்தப் போர் நடைபெற்றது. இதில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலர் பலியாயினர். நாட்டை காக்க நடந்த இந்த போரில் இந்திய தரப்பிலும் 543 ராணுவத்தினர் வீரமரணம் அடைந்தனர்.

பாகிஸ்தான் ராணுவத்தை விரட்டியடித்து கார்கிலை மீட்டு வெற்றி பெற்ற நாள் 1999 ஜூலை 26-ஆம் தேதி ஆகும். கார்கில் போரில் வெற்றி பெற்றதன் நினைவாக ஜூலை 26-ம் தேதி ஆண்டுதோறும் கார்கில் வெற்றி தினமாகக் கொண்டாடப்படுகிறது. கார்கில் போரானது மே மாதம் தொடங்கி ஜூலை 26ஆம் தேதி நிறைவுக்கு வந்த இந்நாள் விஜய் திவஸ் என்று அழைக்கப்படுகிறது. 

கார்கில் போரில் உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களை நினைவு கூரும் வகையிலும் உயிரோடு இருக்கும் கார்கில் போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் இந்த வெற்றி தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக மவுன அஞ்சலி செலுத்தப்படும். அந்த நாளில் நமக்காக எல்லையில் பணியாற்றும் வீரர்களை நினைவுகூர்வோம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow