இன்டர்மீடியட் பாஸ்டிங் இருக்க விருப்பமா? இதற்கான சிறந்த நேரம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்..!

ஆரோக்கிய உலகில் இன்டர்மீடியட் பாஸ்டிங் ஒரு ட்ரெண்டாக மாறி வருகிறது. இன்டர்மீடியட் பாஸ்டிங் என்பது என்ன சாப்பிட வேண்டும் என்பது பற்றியது அல்ல. அது எப்போது சாப்பிட வேண்டும் என்பது பற்றியது. இந்தக் கட்டுரையில், இன்டர்மீடியட் பாஸ்டிங் பின்னணியில் உள்ள காரணத்தையும், அதைச் செய்வதற்கான சரியான நேரம் குறித்தும் தெரிந்து கொள்வோம்.

Jan 27, 2025 - 14:31
 0  2
இன்டர்மீடியட் பாஸ்டிங் இருக்க விருப்பமா? இதற்கான சிறந்த நேரம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்..!
இன்டர்மீடியட் பாஸ்டிங் என்றால் என்ன?. தற்போது ட்ரெண்ட் ஆகி வரும் இன்டர்மீடியட் பாஸ்டிங் பற்றிய விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ஆரோக்கிய உலகில் இன்டர்மீடியட் பாஸ்டிங் ஒரு ட்ரெண்டாக மாறி வருகிறது. இன்டர்மீடியட் பாஸ்டிங் என்பது என்ன சாப்பிட வேண்டும் என்பது பற்றியது அல்ல. அது எப்போது சாப்பிட வேண்டும் என்பது பற்றியது. இந்தக் கட்டுரையில், இன்டர்மீடியட் பாஸ்டிங் பின்னணியில் உள்ள காரணத்தையும், அதைச் செய்வதற்கான சரியான நேரம் குறித்தும் தெரிந்து கொள்வோம்.

இன்டர்மீடியட் பாஸ்டிங் என்றால் என்ன?

இன்டர்மீடியட் பாஸ்டிங் என்பது ஒவ்வொரு நாளும் அல்லது ஒவ்வொரு வாரமும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு உணவு சாப்பிடாமல் இருப்பது. இதன் பின்னணியில் உள்ள அறிவியல் என்னவென்றால், உடலில் சேமிக்கப்பட்ட கொழுப்பு குறையும் என்பதாகும். இது எடை இழப்புக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், ரத்த அழுத்தம், வீக்கம், இன்சுலின் உணர்திறன், ரத்த சர்க்கரை ஒழுங்குமுறை, நோய் எதிர்ப்பு செயல்பாடு, குடல் ஆரோக்கியம், கவனம் மற்றும் தூக்கத்தின் தரத்தையும் மேம்படுத்தக்கூடும்.

சில இடைவிடாத பாஸ்டிங் முறைகள்...

OMAD (ஒரு நாளைக்கு ஒரு உணவு): Eat clean with Eshanka நிறுவனர், ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் ஆரோக்கிய பயிற்சியாளர் எஷங்கா வாஹியின் கூற்றுப்படி, “OMAD உணவில், ஒரு நபர் 23 மணிநேரம் உண்ணாவிரதம் இருந்து ஒரு நாளில் ஒரே ஒரு முறை மட்டும் உணவு எடுத்து கொள்கிறார். இது மிகவும் கடினமான உணவு முறை ஆகும். ஆனால் இதன் பலன் அதிகமாகும் என்று விளக்கியுள்ளார்.

மாற்று நாள் உண்ணாவிரதம்: மாற்று நாட்கள் என்பது ஒரு நாள் விட்டு ஒரு நாள் உண்ணாவிரம் இருக்கும் முறையாகும். இந்த உண்ணாவிரதம் கலோரி உட்கொள்ளலைக் குறைக்கிறது மற்றும் இன்டர்மீடியட் உண்ணாவிரதத்தில் இது எளிய முறையாகும்.

5:2 முறை இன்டர்மீடியட் உண்ணாவிரதம்: 5:2 முறை உண்ணாவிரதத்தில், ஐந்து நாட்களுக்கு சாதாரணமாக சாப்பிடுகிறார்கள் மற்றும் இரண்டு தொடர்ச்சியான நாட்களில் விரதம் இருப்பார்கள். இன்டர்மீடியட் உண்ணாவிரதத்தின் மிகவும் பிரபலமான முறைகளில் இதுவும் ஒன்றாகும்.

இன்டர்மீடியட் உண்ணாவிரதத்திற்கான சிறந்த நேரம்...

அதிகாலை உணவு முறை: பிசிகோ டயட் மற்றும் அழகியல் கிளினிக்கின் நிறுவனர் டயட்டீஷியன் விதி சாவ்லாவின் கூற்றுப்படி, “ இன்டர்மீடியட் உண்ணாவிரதம் காலையில் தொடங்குகிறது. அதாவது காலையில் மட்டும் சாப்பிட்டு விட்டு, மதியம் நடுப்பகுதியில் இருந்து இரவு வரை உண்ணாவிரதம் இருப்பார்கள். காலையில் குறைந்த கலோரி உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்மைகள்: இது வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்துகிறது. மேலும் சிறந்த தூக்கத்தை ஆதரிக்கிறது

.

மதிய உணவு முறை: மதிய உணவு முறையை பின்பற்றும்போது, ​​இரவு முழுவதும் உண்ணாவிரதம் இருந்த பிறகு தாமதமாக காலை உணவு சாப்பிடலாம் அல்லது மதிய உணவு சாப்பிட்டு உண்ணாவிரதத்தை முடிக்கவும்.

நன்மைகள்: இது ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு சிறந்த முறையாகும். இது உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள உதவுகிறது.

மாலை உணவு முறை: மாலை நேர உண்ணாவிரத முறையில் ஒரு நபர் காலையில் உண்ணாவிரதம் இருந்து மதியம் சாப்பிடுகிறார். தங்கள் நாளை தாமதமாகத் தொடங்குபவர்களுக்கு இது மிகவும் நல்லது. இது எடை இழப்பை விரைவில் அடைய உதவுகிறது.

நன்மைகள்: மாலையில் அதிக உணவை விரும்புவோருக்கு இது சிறந்தது.

இன்டர்மீடியட் உண்ணாவிரதத்திற்கான சிறந்த நேரம் எப்போதும் உடலின் இயற்கையான சுகாதாரம், வாழ்க்கை முறை மற்றும் அவரவர் விருப்பங்களைப் பொறுத்தது. வெவ்வேறு அட்டவணைகளுடன் பரிசோதனைகளை செய்ய முயற்சிக்கவும். மேலும் நீங்கள் எப்போதும் உங்கள் உடலுக்கு ஏற்ற முறையை பின்பற்றவும்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow