IND vs AUS : 5-ஆவது டெஸ்டிலிருந்து ரோஹித் சர்மா விலகல்… புதிய கேப்டன் – மாற்று வீரர் யார்?
இந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடருடன் ரோஹித் சர்மா ஓய்வை அறிவிப்பார் என்று தகவல்கள் பரவியுள்ளன. முன்னதாக ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 11 வீரர்கள் குறித்து பயிற்சியாளர் கவுதம் கம்பீரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது அதற்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
1. ரோஹித் சர்மா

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரை இந்திய அணி கைப்பற்றினால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் விளையாடுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். ஆனால் 4 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் ஒரு போட்டியில் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
2 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. ஒரு போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னி நகரில் தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் ஏற்கனவே தன் வசம் வைத்திருக்கும் பார்டர் கவாஸ்கர் கோப்பையை தக்க வைத்துக் கொள்ளும்.
What's Your Reaction?






