தொழில் தொடங்க வேண்டுமா? ரூ.10 லட்சம் முதலீட்டில் தொடங்கக்கூடிய ஜிம் பிசினஸ்! முழு விவரங்களுடன்!
பலரும் சொந்த தொழில் தொடங்கலாமா? என்று யோசித்துக் கொண்டிருப்பீர்கள் அப்படி யோசிப்பவர்களுக்காக தான் இந்தப் பதிவு.
1. ஜிம் :
உங்கள் பகுதியில் ஒரு ஜிம் அமைப்பது குறித்து யோசிக்கலாம். இதன் மூலம் உங்களுக்கு மாதம் மாதம் வருமானம் கிடைக்கும். பலரும் தற்போது ஜிம்மிற்கு சென்று தங்கள் ஆரோக்கியத்தை பேணிக்காக்க விரும்புகின்றனர். இந்தப் பதிவில் ஜிம் அமைப்பதற்கு என்னென்ன தேவை? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்
2. இடம்:

ஒரு ஜிம் அமைத்து அதை வெற்றிகரமாக நடத்த சரியான இடத்தை தேர்வு செய்வது முக்கியம். குறிப்பாக அலுவலக பணியாளர்கள் உங்கள் உடற்பயிற்சி கூடத்தை எளிதாக பார்வையிடக்கூடிய பகுதிகளில் ஜிம்மை அமைக்க வேண்டும். அதோடு அதிக மக்கள் நடமாட்டம் இருக்கும் பிசியான பகுதியை தேர்வு செய்வது அதிக வருவாயை ஈட்ட உதவும். மேலும் நீங்கள் ஜிம் அமைக்கும் பகுதியில் நல்ல சாலை வசதி உள்ளதா? என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள். இடத்தை தேர்வு செய்த பிறகு உங்களுடைய ஜிம் குறித்து விளம்பரப்படுத்துவது மிகவும் முக்கியமானது. உடற்பயிற்சி செய்த பிறகு ஜிம்மிற்கு வருபவர்கள் புத்துணர்ச்சி பெரும் வகையில் சுத்தமான குடிநீரை வழங்கவும் விதிகளைச் செய்ய வேண்டும்.
3. முதலீடு:

ஒரு உடற்பயிற்சி கூடம் அமைப்பதற்கு பொதுவாக ரூ. 5 லட்சம் முதல் ரூ. 25 லட்சம் வரை செலவாகலாம். உபகரணங்கள், உட்புற வேலைப்பாடுகள், வாடிக்கையாளர்களுக்கான வசதிகள் மற்றும் மார்க்கெட்டிங் செலவுகள் ஆகியவற்றுக்கு இந்த முதலீடு அவசியமாகிறது. ஒருவேளை சிறிய ஜிம்களை அமைக்கயிருந்தால் அதற்கான முதலீடு ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை இருக்கலாம். அதுவே நீங்கள் பெரிய ஜிம் அமைக்க இருந்தால் அதிக முதலீடு தேவைப்படும்.
4. உபகரணங்கள்:

உயர்தர உபகரணங்கள் வேண்டுமானால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யலாம் அல்லது குறைந்த பட்ஜெட்டில் உபகரணங்கள் வாங்க இருந்தால் OLX மற்றும் குவிக்கர் போன்ற இணையதளங்களில் செகண்ட் ஹேண்ட் உபகரணங்களை வாங்கலாம். அதோடு அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற பிரபல இ-காமர்ஸ் தலங்களிலும் உடற்பயிற்சி உபகரணங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பிட்னஸ் மார்ட், ப்ரோ பாடிலைன் மற்றும் பிட்னஸ் வேர்ல்ட் போன்ற பிரத்தியேக இணையதளங்களையும் பயன்படுத்தலாம்.
5. வருமானம்:

ஜிம் அமைக்க ஆரம்ப செலவுகள் அதிகம் என்றாலும், உங்கள் ஜிம் பிரபலமடைந்து விட்டால் மாதம் மாதம் கணிசமான வருமானத்தைப் பெற முடியும். ஒரு வாடிக்கையாளரிடம் 500 முதல் 1000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கலாம். அதே போல உங்களுக்கு வரும் வருமானம் என்பது உங்கள் ஜிம்மிற்கு வரும் வாடிக்கையாளரை பொறுத்தது. ஒரு வேலை ஜிம் மக்கள் பார்வையில் படும் இடத்தில் இருந்தால் அதிக வாடிக்கையாளர்கள் வந்து வருமானம் அதிகரிக்கலாம். உடற்பயிற்சி அமைப்பதில் மிகவும் முக்கியமானது விளம்பரப்படுத்துவது. நகரத்தில் அமைத்தாலும் சரி கிராமத்தில் அமைத்தாலும் சரி உங்கள் ஜிம்மிற்கு வாடிக்கையாளரை ஈர்க்க பிரபலப்படுத்துவது முக்கியம். அதோடு ஜிம்மில் பயிற்சியாளர்களையும் பணியமர்த்த வேண்டும்.
6. உரிமங்கள்:
உரிமங்கள்: உங்கள் உடற்பயிற்சி கூடத்தை தொடங்குவதற்கு முன்பு சில உரிமங்கள் மற்றும் அனுமதிகளை பெற வேண்டும் இந்த முயற்சிகளை எல்லாம் மேற்கொண்டு ஜிம் அமைக்கலாம். மேற்கண்ட விவரங்கள் பிசினஸ் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கான ஐடியா மட்டுமே. இதை வைத்து நாங்கள் முதலீட்டு முடிவுகள் எடுக்கச் சொல்லவில்லை. எந்த ஒரு பிசினஸ் தொடங்க வேண்டுமானாலும் அதற்கு உங்களுடைய நிதி ஆலோசகரை அணுகி நன்கு யோசித்து சுய விருப்பத்தின் பெயரில் தொடங்கவும்.
What's Your Reaction?






