சமூக வலைதளங்களில் டிரெண்டாகும் Ghibli இமேஜை உருவாக்குவது எப்படி ?
கடந்த 3 நாட்களாக இந்த ஜிப்லி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன. பிரபலங்கள் முதல் அனைவரும் தங்களது புகைப்படங்களை சற்று மாற்றி ஜிப்லி புகைப்படங்களாக மாற்றி வெளியிடுகிறார்கள். மக்கள் தங்களை அனிமி கதாப்பாத்திரமாக பார்ப்பதற்கு பிடித்திருக்கிறது என்பது இதன் மூலம் தெரிகிறது. ஏஐ டூல்களான ஜெமினி அல்லது குரோக் பயன்படுத்தி இதனை உருவாக்கலாம்.

சமூக வலைதளங்களில் தற்போது ஜப்பான் (Japan) அனிமி ஸ்டைலில் தங்களை போட்டோக்களை மாற்றி பதிவிடும் ஜிப்லி (Ghibli) தற்போது டிரெண்டாகிவருகிறது. ஸ்டுடியோ கிப்லி என்ற ஜப்பானிய நிறுவனம் ஒரு புதிய ஸ்டைலில் மை நெய்பர் டோட்டோரோ (My Neighbor Totoro) , ஸ்பிரிட்டர் அவே, ஹவ்ல்ஸ் மூவிங் கேஸ்ட்ல் போன்ற திரைப்படங்களை உருவாக்கினர். இந்த வகை படங்களுக்கு உலக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவை இயற்கை காட்சிகள், நீல வானம், சூரிய உதயம் என கண்களுக்கு விருந்தாகும் காட்சிகளை கண்களை கவரக் கூடிய வண்ணங்களில் படங்களை உருவாக்குவார்கள். இந்த படங்களின் கதாபப்பாத்திரங்களின் தோற்றங்கள் பெரிய கண்கள், சிறிய முகபாவனைகள் என குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்க கூடிய வகையில் இருக்கும். உலக அளவில் இந்த வகை படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக இந்த ஜிப்லி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன. பிரபலங்கள் முதல் அனைவரும் தங்களது புகைப்படங்களை சற்று மாற்றி ஜிப்லி புகைப்படங்களாக மாற்றி வெளியிடுகிறார்கள். மக்கள் தங்களை அனிமி கதாப்பாத்திரமாக பார்ப்பதற்கு பிடித்திருக்கிறது என்பது இதன் மூலம் தெரிகிறது. ஏஐ டூல்களான ஜெமினி அல்லது குரோக் பயன்படுத்தி இதனை உருவாக்கலாம்.
சாட் ஜிபிடி கொண்டு இதனை உருவாக்குவது எப்படி ?
சாட்ஜிபிடி ஆப்பிற்கோ அல்லது வெப்சைட்டிற்கோ சென்று உங்களது இமேஜை அப்லோட் செய்ய வேண்டும். பின்னர் Ghiblify this அல்லது turn this image in studio ghibil theme என்றோ குறிப்பிட்டு அனுப்பவும். நீங்கள் அனுப்பிய போட்டோவை அது கிப்லி ஸ்டைல் மாற்றி கொடுக்கும். அதனை நீங்கள் டவுன் லோடு செய்துகொள்ளலாம். ப்ரீ யூசர்ஸ்க்கு இது குறைவான வாய்ப்பே வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜெமினி மற்றும் எக்ஸ் தளத்தில் உள்ள கிரோக் ஏஐ கொண்டும் இதனை உருவாகாகலாம். ஆனால் ப்ராம்ட் சரியாக கொடுக்க வேண்டும். Ghibli style மற்றும் Ghibli inspired என கொடுக்க வேண்டும். உதாரணமாக உங்களுக்கு கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக உடையணிந்து ஒரு தோட்டத்தின் முன் நிற்கும் போட்டோ வேண்டும் என்றால் நீங்கள் Create an image in the Studio Ghibli style of a young girl in a traditional outfit standing in a garden என்று பிராம்ட் கொடுக்க வேண்டும்.
மேலும் Deep Dream Generator, Artbreeder, அல்லது Fotor போன்ற தளங்களில் Ghibli-ஸ்டைல் ஃபில்டர்கள் உள்ளன.RunwayML, Dream by Wombo, அல்லது Stable Diffusion போன்ற AI கருவிகள் ஜப்பானீஸ் அனிமே-ஸ்டைல் புகைப்படங்களை உருவாக்க உதவும்.
What's Your Reaction?






