டிராகன் படத்தின் முதல் விமர்சனம்! படம் எப்படி இருக்கு தெரியுமா
லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி சென்சேஷனல் என்ட்ரி கொடுத்தார் பிரதீப் ரங்கநாதன். இப்படத்திற்கு பின் இவர் இயக்கத்தை விட நடிப்பில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIK, அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் என தொடர்ந்து படங்களை கமிட் செய்தார். இவர் ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ரூ. 18 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாகவும் சொல்லப்படுகிறது.
டிராகன் படம் வருகிற பிப்ரவரி 21ம் தேதி வெளிவரவுள்ளது. இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கவுதம் மேனன், மிஸ்கின், விஜே சித்து உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
முதல் விமர்சனம்
சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளிவந்த பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில், இம்மாதம் வெளிவரவுள்ள டிராகன் திரைப்படம் குறித்து முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது.
அதன்படி, படம் ப்ளாக் பஸ்டர் என்றும், Perfect Entertainer என்றும் அதில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, ஹீரோ பிரதீப் ரங்கநாதனை பாராட்டி இந்த விமர்சனம் பதிவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
What's Your Reaction?






