மூவர்ண கொடியின் சிறப்பு | Desiya Kodi Sirappu in Tamil

இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் வெங்கய்யா. ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பெடகள்ளேபள்ளி என்ற கிராமத்தில் 1878-ம் ஆண்டு பிறந்தவர் வெங்கய்யா.

Jan 4, 2025 - 21:28
 0  13
மூவர்ண கொடியின் சிறப்பு | Desiya Kodi Sirappu in Tamil

தேசிய கொடி நிறம் விளக்கம் | National Flag History in Tamil

ஆங்கிலேயரின் ஆட்சிக்கு பிறகு இந்திய நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய அடையாளம் நாட்டின் தேசிய கொடி. ஒவ்வொரு நாட்டிற்கும் அடையாளமாகவும், போராட்ட வீரர்களின் உயிர் மூச்சாகவும் இருப்பது நாட்டின் தேசிய கொடிதான். 1947 ஆம் ஆண்டு ஜூலை 22-ல் இந்திய தேசியக் கொடி என்ற அங்கீகாரத்தை பெற்றது. நம் நாட்டின் தேசிய கொடியானது மூன்று வகையான வண்ணங்களை கொண்டுள்ளது. இத்தகையை சிறப்பினை கொண்டுள்ளதால் தான் தேசிய கொடியை மூவர்ண கொடி என்று சிறப்புடன் அழைக்கிறார்கள். வாங்க இந்த பதிவில் மூவர்ண கொடியின் சிறப்புகளை படித்து தெரிந்துக்கொள்ளலாம்..

தேசிய கொடி ஏற்றப்பட்ட ஆண்டு:

ஆங்கிலேய நாட்டின் சர்வாதிகார ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை அடைந்த ஆகஸ்ட் 15, 1947-ம் ஆண்டு ஆங்கிலேய நாட்டின் தேசிய கொடியை வீழ்த்தி சுதந்திர இந்தியாவின் கொடியை செங்கோட்டையில் ஏற்றப்பட்டது.

தேசிய கொடி ஏற்றப்பட்ட முதல் நாடு:

சுதந்திர இந்தியாவிற்காக வடிவமைக்கப்பட்ட தேசிய கொடி முதன் முதலில் கொல்கத்தாவில் உள்ள க்ரீன் பார்க்கில் 1906-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 07-ம் தேதி ஏற்றப்பட்டது.

தேசிய கொடியின் சிறப்பு:

நாட்டின் தேசிய கொடியானது எந்த வித சாதி மத இனத்தையும் சேர்ந்து இருக்கக்கூடாது என்பதற்காக அமைந்தது தான் தேசிய கொடி. இந்திய நாட்டின் தேசிய கொடியானது சுதந்திர இந்தியாவில் முதன் முதலில் ஆகஸ்ட் 15, 1947-ம் ஆண்டு கோடி ஏற்றம் செய்யப்பட்டது.

மூவர்ண கொடியின் விளக்கம்:

  • காவி நிறம் – பலத்தையும், தைரியத்தையும் குறிப்பதாக அமைந்துள்ளது.
  • வெண்மை நிறம் – உண்மை மற்றும் அமைதியை காட்டுகிறது.
  • பச்சை நிறம் – வளர்ச்சி, பசுமை மற்றும் விவசாய செழிப்பைக் காட்டுவதாக அமைந்துள்ளது.
  • தேசிய கொடியில் நடுவில் உள்ள அசோக சக்கரம் வாழ்க்கை சுழற்சியை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. 

தாய் மண்ணில் பிறந்த ஒவ்வொரு குடிமகனின் முகவரியும் தேசியக் கொடியில் பொருந்தியுள்ளது. அதனை மதித்துப் போற்ற வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.

கள் செய்த அர்ப்பணிப்பின் அடையாளமே இந்திய தேசியக் கொடி. மேலும், தேசியக் கொடியில் இடம் பெற்றுள்ள மூவண்ணத்திற்கும் தனி தனி தத்துவம் உள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0