பாக்கியலட்சுமி சீரியல் முடிவு குறித்து நடிகர் சதீஷ் போட்ட பதிவு.. என்ன இப்படி சொல்லிட்டாரு

பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2020ம் ஆண்டு ஜுலை மாதம் தொடங்கப்பட்ட ஒரு தொடர் பாக்கியலட்சுமி.
விறுவிறுப்பாக, எமோஷ்னலாக, காமெடி, கலகலப்பு, சலசலப்பு, குடும்பம் என எல்லாம் கலந்து கலவையாக இந்த தொடர் ஒளிபரப்பாகி வந்தது.
தற்போது வரை 1220 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகும் இந்த தொடரை வீனஸ் இன்போடெயின்மென்ட் தயாரிக்கிறார்கள்.
கடந்த சில மாதங்களாக இந்த தொடர் முடிவுக்கு வரும் என நிறைய செய்திகள் உலா வருகிறது.
நடிகரின் பதிவு
இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடித்துவரும் சதீஷ் தனது இன்ஸ்டாவில் ஒரு பதிவு போட்டுள்ளார்.
அதில் அவர், பாக்கியலட்சுமி என்ற பப்ளிக் எக்ஸாம் முடியும் நேரம் நெருங்கிவிட்டது. நான் பாசா இல்லை பெயிலா என்பது ரசிகர்கள் என்ற உங்கள் கையில் இருக்குது, மனதிலும் உடம்பிலும் சோர்ந்துவிட்டேன்.
இருப்பினும் முயற்சி தொடரும் என பதிவு போட்டுள்ளார். இதனை வைத்து பார்க்கும் போது தொடர் முடிவை நெருங்கிவிட்டது என்பது தெளிவாக தெரிகிறது.
gopi human actor Good morning. Kaalai vanakkam. Baakiyalakshmi endra public exam mudiyum neram nerungi vittathu. Naan passa illai faila enbathu, rasigargal endra ungal kaiyil irukkuthu. Manadhilum udalilim sorvadainthu vitten. Iruppinum muyarchigal thodarum. Oru nalla nadigan endra ilakkai adaiya innum en payanam thodarum. Nandri. Vazhthukkal
What's Your Reaction?






