உங்கள் ஆதார் கார்டில் எத்தனை முறை மொபைல் நம்பரை மாற்றலாம்? UIDAI-இன் வரம்புகள் என்னென்ன?
இந்தியாவில் வழங்கப்படும் மிக முக்கியமான அடையாள ஆவணங்களில் ஆதார் கார்டும் ஒன்று. ஆதார் நம்பர் பள்ளியில் சேர்ப்பதற்கு, வங்கி கணக்கு திறப்பதற்கு, அரசாங்க சலுகைகளைப் பெறுவதற்கு என அனைத்திற்கும் அவசியம்.

ஆதாரில் உள்ள எந்த ஒரு தவறான தகவலும் உங்களை சிக்கலில் மாட்டச் செய்யலாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) உங்கள் தகவல்களைப் புதுப்பித்து வைத்துக்கொள்ள ஆன்லைன் இணையதளத்தை வழங்கியுள்ளது.
ஆதார் தகவல்களைப் புதுப்பிப்பதற்கு என்று சில வரம்பு உள்ளது. ஒரு சில தகவல்களை ஒரு முறைக்கு மேல் புதுப்பிக்க முடியாது. எனவே ஆதாரில் அப்டேட் செய்ய விரும்புபவர்கள் இது குறித்த தகவல்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஆதார் கார்டில் பெயர் முதல் மொபைல் நம்பர் வரை அனைத்தையும் மாற்றுவதற்கு குறிப்பிட்ட வரம்பு இருக்கிறது. உங்கள் ஆதார் தகவல்களில் ஏதேனும் மாற்றம் செய்ய விரும்பினால் முதலில் அதை எத்தனை முறை சரி செய்யலாம்? என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
மொபைல் நம்பர் மாற்றம்: இன்றெல்லாம் மக்கள் தங்கள் சிம் கார்டுகளை அடிக்கடி மாற்றி விடுகின்றனர். இதுபோன்ற சமயங்களில் மொபைல் நம்பரை ஆதார் கார்டில் மாற்றியமைப்பது அவசியமாகும். ஏனெனில் அனைத்திற்கும் ஓடிபி சரிபார்ப்பு செயல்முறை செய்யப்படுகிறது. அப்படி செய்கையில் ஆதாருடன் தொடர்புடைய மொபைல் நம்பருக்கு தான் OTP வரும். எனவே நீங்கள் மொபைல் நம்பரை மாற்றி இருந்தால் கட்டாயம் ஆதார் கார்டில் மாற்றம் செய்ய வேண்டும். இதற்கு UIDAI எந்த ஒரு வரம்பையும் நிர்ணயிக்கவில்லை. ஏனெனில் சில பயனர்கள் தங்கள் மொபைல் நம்பரை அடிக்கடி மாற்றுகின்றனர்.
பெயர் மாற்றம்: ஆதார் கார்டில் உள்ள உங்கள் பெயரை மாற்ற விரும்பினால் 2 முறை மட்டுமே இதை செய்ய முடியும். சில நேரங்களில் பெயரில் எழுத்துப்பிழை ஏற்படலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அதை 2 முறை திருத்தலாம். பெயரை திருத்த பான் கார்டு, பாஸ்போர்ட் அல்லது திருமணச் சான்றிதழை ஆதாரமாக வழங்க வேண்டும்.
பிறந்த தேதி மாற்றம்: உங்கள் வாழ்நாளில் பிறந்த தேதியை ஒரே ஒருமுறை மட்டுமே மாற்ற முடியும்.
முகவரி மாற்றம்: நீங்கள் உங்கள் புதிய வீட்டிற்கு குடி பெயர்ந்திருந்தால் அல்லது உங்கள் நிரந்தர முகவரி மாறியிருந்தாலும் ஆதார் கார்டில் முகவரி மாற்றம் செய்ய வேண்டும். இதற்கு வரம்புகள் இல்லை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றியமைக்கலாம். சிலர் வீடுகளை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பார்கள். இதன் காரணமாக UIDAI முகவரியை மாற்றம் செய்ய வரம்பு அமைக்கவில்லை. அதேபோல ஒரு சில தகவல்களை ஆன்லைனில் மாற்றலாம். ஒரு சில தகவல்களை கண்டிப்பாக ஆதார் பதிவு மையங்களில் மட்டுமே மாற்ற முடியும். ஏனெனில் அதற்கு பயோமெட்ரிக் அங்கீகாரம் தேவைப்படலாம்.
What's Your Reaction?






