இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்க கூடாதாம்.! ஏன் தெரியுமா.?
பெரும்பாலும் நம்மில் பலபேருக்கு பழங்களை சாப்பிட பிறகு தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கும். ஆனால், இது தவறான செயல் என்பதை அவர்கள் அறிவதில்லை. எனவே, இப்பதிவில் பின்வருமாறு கூறப்பட்டுள்ள பழங்களை சாப்பிட பிறகு மட்டும் தண்ணீர் குடிக்க கூடாது என்று நிபுணர்கள் கூறுகின்றார்கள். இப்பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் உடல்நலம் மோசமாக பாதிக்கும் என்கிறார்கள். எனவே, அப்பழங்கள் என்னென்ன.? இப்பழங்களை சாப்பிட்டவுடன் தண்ணீர் குடித்தால் உடலில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
1. வாழைப்பழம்:
வாழைப்பழத்தில் மாங்கனீசு மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே, வாழைப்பழத்தை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதன் மூலம் உடல்நலம் பாதிக்கப்படலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
2. தர்பூசணி:
தர்பூசணியில் அதிக அளவில் நீர்ச்சத்து உள்ளது. இதனை சாப்பிட்ட உடன் தண்ணீர் குடித்தால் செரிமான பிரச்சனை ஏற்படுவதோடு வயிற்றில் வீக்கத்தையும் ஏற்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல், தர்பூசணி பழத்தை மதிய வேளையில் மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
3. மாம்பழம்:
மாம்பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக்கூடாது. ஏனென்றால் அதிலுள்ள என்ஸைமஸ் செரிமான அமைப்பை பாதிக்கக்கூடும்.
4. பப்பாளி:
பப்பாளி பழத்தில் Papain என்கிற என்சைம் உள்ளது. எனவே, பப்பாளியை சாப்பிட்டதும் தண்ணீர் குடிப்பதனால் வயிறு மந்தமாகுவதோடு வயிற்றுபோக்கையும் ஏற்படுத்தக்கூடும். எனவே பப்பாளி சாப்பிட்ட பிறகு தண்ணீர் அருந்துதல் கூடாது.
5. அன்னாசி பழம்:
அன்னாசி பழத்தில் Bromelain என்ற என்சைம் உள்ளது. எனவே, இவற்றை சாப்பிட்டதும் தண்ணீர் குடிப்பதனால் வயிற்றுப்போக்கு மற்றும் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
6. ஆரஞ்சு பழம்:
ஆரஞ்சு பழத்தில் அமிலத்தன்மை அதிகமாக உள்ளது. எனவே, ஆரஞ்சு பழத்தை உட்கொண்ட பிறகு தண்ணீர் குடிப்பதன் மூலம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
7. ஆப்பிள்:
ஆப்பிளில் பெக்டின் என்ற நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே ஆப்பிளை சாப்பிட்டதும் தண்ணீர் குடிப்பதனால் வயிற்றில் வீக்கம் உண்டாவதோடு மந்தமான உணர்வும் ஏற்படும்.
What's Your Reaction?