வேலு நாச்சியார் பற்றிய முழு தகவல்கள் – Velu nachiyar history in Tamil
பதினெட்டாம் நூற்றாண்டில் சிவகங்கையை சேர்ந்த வேலுநாச்சியார் என்ற பெண்மணி ஆங்கிலேயர் கிழக்கு இந்திய கம்பெனியை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராடிய இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை இவர்.
1. Biography of Velu nachiyar in Tamil
வேலு நாச்சியார் முழு பெயர் – வேலு நாச்சியார்
வேலு நாச்சியார் பிறந்த ஊர் – ராமநாதபுரம்
வேலு நாச்சியார் பிறந்த நாள் – 03/01/1730
வேலு நாச்சியார் பிறந்த ஆண்டு – 1730
வேலு நாச்சியார் பெற்றோர் பெயர் – செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி மற்றும் தாயார் முத்தாத்தால் நாச்சியார்
வேலு நாச்சியார் கணவர் பெயர் – முத்து வடுகநாதர்
வேலு நாச்சியாரின் மகள் பெயர் – வெள்ளச்சி
வேலு நாச்சியார் இறந்த ஆண்டு – 25/12/1796
2. வேலு நாச்சியார் பிறப்பு:
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி மற்றும் முத்தத்தால் ஆகியவருக்கு 1730 ஆம் ஆண்டு மகளாகப் பிறந்தார் வேலு நாச்சியார். இவர் ஒரு மன்னர் குடும்பத்தை சார்ந்தவர் என்பதால் ஆண் வாரிசு வேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்கிறது எல்லோருக்கும். ஆனால் வேலு நாச்சியாரின் தந்தை அதனை பற்றி கவலை கொள்ளவில்லை. இவரை ஒரு ஆண் போலவே வளர்க்க ஆரம்பித்தார் வேலு நாச்சியாரின் தந்தை.
3. வேலு நாச்சியார் கற்றறிந்த மொழிகள்:
தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், உருது, சமஸ்கிருதம், ஆங்கிலம் என வேலு நாச்சியார் சிறுவயதில் எண்ணற்ற மொழிகளை தான் பயின்று வைத்திருந்தார். மேலும் கல்வி படிப்போடு சேர்ந்து ஆயுதப் பயிற்சியிலும் ஈடுபட்டு தான் ஒரு ஆணாகவே வளர தொடங்கினார்.
4. வேலு நாச்சியாரின் போர் திறன்:
வேலு நாச்சியாரின் தந்தை சிறுவயதிலிருந்தே வாழ்வீச்சு சிலம்பம் வளரி மற்றும் குதிரை ஏற்றம் சவாரி ஆகிய பயிற்சிகளை மிக கடுமையாக கற்றுக் கொடுத்து வந்துள்ளார். மேலும் எண்ணற்ற வீரர்களுடன் கடுமையான சண்டை பயிற்சி ஆகியவை சொல்லிக் கொடுத்துள்ளார். வேலு நாச்சியாரும் அவர் அளித்த பயிற்சிகளை மிகவும் ஆர்வத்துடன் கற்றுக் கொண்டே வந்தார்.
5. வேலு நாச்சியாரின் திருமண வாழ்க்கை:
அப்போதைய கால கட்டங்களில் பெண்களுக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்து வைக்கும் பழக்கம் நடைமுறையில் வேலு நாச்சியாரின் தந்தை தம்முடைய மகளுக்கு ஒரு வீரனை கணவராக வரவேண்டும் என்று எண்ணி வேலு நாச்சியார் தம்முடைய 16 வது வயதில் சிவகங்கை நாட்டு மன்னரான சசிவர்ணா பெரிய உடையார் என்பவரின் மகனான முத்து வடுகநாதன் ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது.
6. வேலு நாச்சியாரும் முத்து வடுகநாதரும்:
திருமணத்திற்கு பின் முத்து வடுகநாதர் சிவகங்கை மாவட்டத்தை நல்ல முறையில் ஆட்சி செய்து வந்தார். மேலும் அவருக்கு விவசாய பணிகளில் அதிக ஆர்வம் கொண்டிருந்தமையால் முத்து வடுகநாதர் விவசாயத்தையும் மேற்கொண்டு வந்துள்ளார்.
மேலும், முத்து வடுவநாதருக்கு எல்லா வகையான உதவிகளையும் செய்வதற்கு அப்பொழுது மந்திரியாய் இருந்த தாண்டவராய பிள்ளை மற்றும் மருது சகோதரர்கள் மற்றும் வடுகநாதரின் மனைவியான வேலுநாச்சியார் என்ற பெரும் பலத்துடன் இருந்தார்.
அப்போது ஆற்காட்டில் ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த நவாப் முகமது அலி என்பவர், சிவகங்கை சீமையாய் இருப்பதைக் கண்டு அவர்களிடம் வரி வாங்குவதற்காக தம்முடைய சிப்பாய்களை அனுப்பி வைத்திருக்கிறார்.
ஆனால் முத்து வடுக நாளோ அவர் யார் இந்த நாட்டு தேசத்தின் மிகப்பெரிய மன்னரா அல்லது எங்களுக்கு ஏதேனும் உதவி செய்திருக்கிறாரா அவருக்கு சல்லி பைசா கூட தர முடியாது என்று சொல்லி வந்தவர்களை விரட்டி அடித்திருக்கிறார் முத்து வடுகநாதர்.
7. முத்து வடுகநாதர்க்கும் ஆங்கிலேயர்களுக்கும் ஏற்பட்ட சண்டை:
அதன் பின்னர் ஆங்கிலேயர்கள் அதிகளவு இவர்களை மிரட்ட தொடங்கினர். மேலும் முத்து வடிவ நாதருக்கு எதிராக கடிதம் ஒன்றையும் ஆங்கிலேய அரசு அனுப்பியது அந்த கடிதத்தில் போலித்தேவன் எவ்வாறு கப்பம் கட்ட முடியாததால் நாட்டை விட்டு விரட்டப்பட்டாரோ அதேபோல் உங்களுக்கும் அந்நிலமை ஏற்படும். எனவே முறையான கப்பம் கட்ட வேண்டும் இல்லையெனில் நீங்கள் அதிக காலம் சிவகங்கை மாவட்டத்தில் ஆட்சியாளர் முடியாது என்று அந்த கடிதத்தில் இருந்தது.
இந்த கடிதத்தை படித்த முத்து வடுகநாதர் மிகவும் கடுமையான கோபம் கொண்டிருந்தார். அதே சமயத்தில் வேலுநாச்சியாருக்கும் முத்து வடுகநாதர்க்கும் வெள்ளச்சி என்ற அழகிய மகள் பிறந்திருந்தார்.
8. முத்து வடுகநாதரை எதிர்த்த ஆற்காடு நவாப்:
ஆற்காடு நவாப் 1722 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தை எதிர்த்து போர் தொடுத்தான். மேலும் முத்து வடுகநாதரும் அவர்களுக்கு எந்தவித அடிபணியாமல் ஆங்கிலேயர்களை எதிர்த்து முதல்முறையாக போர் தொடுத்தார். முத்து வடுகநாதரின் போர்திறன் மற்றும் வால் பயிற்சி வீரர்களின் போர்திறன் ஆகியவற்றிற்கு முன்பு ஆங்கிலேயர்களால் தாக்குப் பிடிக்க முடியாமல் பெரும் இழப்போடு சிவகங்கையை விட்டு ஓடினார்.
அதற்குப் பின்னர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வீரர்கள் அனைவருக்கும் எண்ணற்ற பயிற்சிகள் இரவு பகல் என வழங்கப்பட்டு கொண்டே இருந்தது.
9. ஆற்காடு நவாபின் திட்டம்:
அப்பொழுது ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த ஆற்காடு நவாப் முகமது அலி முத்து வடுகநாதரை அவ்வளவு எளிதாக நம்மால் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்து அவரை நேரடியாக தாக்க கூடாது மேலும் அவரை கண்காணித்துக் கொண்டே இருந்து கொண்டு தக்க சமயம் வரும்பொழுது அவரை தாக்கி சிவகங்கை கைப்பற்ற வேண்டும் என்ற திட்டம் தீட்டினான். மேலும் அதற்கு ஆதரவாக முத்து வடுகநாதருடன் சில நபர்களை கொற்றதாகவும் நியமித்தான்.
10. முத்து வடுகநாதரின் இறப்பு:
எண்ணற்ற முறை போர் செய்தும் சிவகங்கை மாவட்டத்தை ஆங்கிலேயர்களால் கைப்பற்ற முடியவில்லை. ஒருமுறை சிவகங்கையில் உள்ள காளீஸ்வரி தரிசிக்க முத்து வடுகநாதரும் தம்முடைய இளைய மனைவி கௌரி நாச்சியாருடன் கோவிலுக்கு சென்று இருந்தார்.
மேலும் கோவிலுக்கு வெளியே இவர்களுக்கு காவலாக ஒரு சிறிய படையும் இருந்தது. இதனை ஒற்றர்கள் மூலம் தெரிந்து கொண்ட ஆங்கிலேயர்கள் இதுதான் சரியான சமயம் அவர்களை தாக்கி அளிக்க வேண்டும் என்று மிகப்பெரிய படையுடன் அந்த கோயிலை சுற்றி பீரங்கியுடன் நின்றனர்.
இதனை அறிந்து கொண்ட முத்து வடுகநாதர் எம் ஐ நேரடியாக போர் செய்து வெல்ல முடியாமல் இரவில் இறைவனுக்கு பூஜை செய்யும் போது வந்து எங்களை தாக்கி அளிக்க நினைக்கிறீர்களே என்று அவர்களுடன் போரில் ஈடுபட்டார்.
ஆனால் ஆங்கிலேயர்கள் கொண்டு வந்ததோ பீரங்கி இதன் முன் முத்து வடுகநாதரின் வாழ் வீச்சு எடுபடவில்லை இதனால் முத்து வடுகநாதர் மற்றும் அவருடைய இளைய மனைவி கௌரி நாச்சியார் இருவரும் அப்போரில் வீர மரணம் அடைந்தனர்.
11. வேலு நாச்சியாரின் ஆங்கிலேயருக்கு எதிரான கொள்கை:

முத்து உலகநாதன் இறந்த பொழுது வேலுநாச்சியாரும் அவருடைய மகளும் கொல்லங்குடி என்னும் ஊரில் தங்கி இருந்தனர். அப்பொழுது தம் கணவரின் இறப்பை அறிந்த வேலுநாச்சியார் மிகவும் துன்புற்றார். பின்னர் மருது சகோதரர்கள் மற்றும் பிரதானி தாண்டவராயன் ஆகிய இருவரின் உதவியோடு திண்டுக்கல்லில் உள்ள விசாரி பாளையம் என்னும் ஊரில் தஞ்சம் புகுந்தார்.
தன் கணவனை கொன்றவர்களை பழி வாங்க வேண்டும் மற்றும் சிவகங்கை மாவட்டத்தை கைப்பற்ற வேண்டும் என்று தான் மிகப்பெரிய சப்தத்தை மேற்கொண்டு இருந்தார் வேலு நாச்சியார்.
12. சிவகங்கை மீட்ட வேலுநாச்சியார்:
சுமார் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு 1780 வது வருடம் ஆங்கிலேயர்களுடன் எண்ணற்ற போருக்கு பின்னர் சிவகங்கை மாவட்டத்தின் அரசி ஆனால் வேலு நாச்சியார். அப்பொழுது வேலு நாச்சியருக்கு ஆதரவாக இருந்த மருது சகோதரர்கள் மந்திரிகளாக நியமிக்கப்பட்டனர். மக்கள் வேலு நாச்சியார் மற்றும் மருது சகோதரர்களின் அரவணைப்போடு மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
அதன் பின்னர் ஆங்கிலேயர்களின் எண்ணற்ற போராட்டத்தை முறியடித்த வேலுநாச்சியார் வெற்றிகரமாக சிவகங்கை ஆட்சி செய்து வந்தார்.
13. வேலு நாச்சியார் மகள் அரிசி ஆக்குதல்:
வேலு நாச்சியார் எந்தவித பிரச்சினைகளும் இல்லாமல் தாம் 50 வயது வரை சிவகங்கையை ஆட்சி செய்து வந்தார் அதற்கு பின்னர் தம்முடைய மகளான வெள்ளச்சி நாச்சியாரை சிவகங்கை அறிவித்தார். இதனை சிவகங்கை மக்களும் மற்றும் அப்பொழுது மந்திரியாக இருந்த மருது சகோதரர்களும் மிகப்பெரும் ஆதரவு அளித்து அவரை அரசியலாய் ஆக்கினார்.
மேலும் வேலு நாச்சியார் தம்முடைய ஆட்சி காலத்தில் எண்ணற்ற கோயில்களை கட்டுவதற்கும் மற்றும் பழங்கால கோவில்களின் கட்டிடங்களை புதுவிப்பதற்கும், கோவிலில் இருக்கும் தேர்தல் செய்வதற்கும் என எண்ணற்ற உதவிகளை செய்து மக்களை செழிப்புடன் வைத்திருந்தார்.
சிவகங்கை விட்டு வெளி ஊருக்கு சென்று வணிகம் செய்ய அந்தந்த ஊர்களுக்கு சாலை வசதிகள் என பல்வேறு வகையான உதவிகளை செய்து சிவகங்கை மக்களை செழிப்புடன் வைத்திருந்தால் வேலு நாச்சியார்.
14. வேலு நாச்சியாரின் இறப்பு:
ஆங்கிலேயர்களுக்கு எதிராக நம்முடைய கணவனை இழந்த துக்கத்தில் அவர்களை பழி வாங்க வேண்டும் என்று சபதம் எடுத்து அவர்களை நாட்டை விட்டு விரட்டிய முதல் இந்திய சுதந்திர போராட்ட வீராங்கனை 23 12 1976 ஆம் ஆண்டு இந்த உலகை விட்டு பிரிந்து போனார்.
இந்திய வரலாற்றிலேயே ஆங்கிலேயரை எதிர்த்த முதல் பெண்மணி என்ற பெருமை வேலு நாச்சியாருக்கு சாரும்.
What's Your Reaction?






