ஹெல்தியா இன்ஸ்டன்டா ஒரு சூப்பரான வெஜிடபிள் அடை இந்த மாதிரி செஞ்சு பாருங்க!!

Vegetable Adai recipe in tamil

Feb 11, 2025 - 12:02
 0  5
ஹெல்தியா இன்ஸ்டன்டா ஒரு சூப்பரான வெஜிடபிள் அடை இந்த மாதிரி செஞ்சு பாருங்க!!

ஹெல்தியா இன்ஸ்டன்டா ஒரு சூப்பரான

 வெஜிடபிள் அடை இந்த மாதிரி செஞ்சு

பாருங்க!! 

எப்பவுமே நம்ம வீட்ல இட்லி தோசைக்கு மாவு அரைச்சு வச்சிருக்கோம். அதை வச்சு இட்லி, தோசை பணியாரம் அப்படின்னு என்ன வேணாலும் செய்யலாம் ஆனா சில சமயங்களில் இட்லி தோசைக்கும் மாவு இல்லாத டைம்ல சப்பாத்தி பூரி பொங்கல் அப்படின்னு ஏதாவது செய்வோம் ஆனா அது எதுவுமே உங்களுக்கு சாப்பிட பிடிக்கல அப்படின்னா ஒரு சூப்பரான இன்ஸ்டன்ட்டா செய்யக்கூடிய வெஜிடபிள் அடை ரெசிபி இந்த மாதிரி செஞ்சு பாருங்க. குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் குழந்தைகளோட பிரேக்ஃபாஸ்ட்க்கு இந்த அடை செஞ்சு கொடுத்தீங்கன்னா குழந்தைகள் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. அவங்களுக்கு ஒரு சத்தான பிரேக்பாஸ்ட் இது. பொதுவாக குழந்தைகள் காய்கறிகள் விரும்பி சாப்பிட மாட்டாங்க அந்த மாதிரி இருக்கிற குழந்தைகளுக்கு நல்லா மொறு மொறுன்னு இந்த மாதிரி ஒரு அடை ரெசிபி செஞ்சு கொடுத்தீங்கன்னா கண்டிப்பா குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க. இதுக்கு தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, சாம்பார் குருமா அப்படின்னு எது வேணாலும் சைடு டிஷ்ஷா வச்சுக்கலாம். தயிர் பச்சடி மட்டும் வச்சு சாப்பிட்டா கூட ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். டேஸ்டான ஹெல்தியான இந்த அடை ரெசிபிக்கு உங்களுக்கு என்னென்ன காய்கறிகள் தேவையோ எல்லாமே சேர்த்துக்கலாம் இதுல நம்ம உருளைக்கிழங்கும் கேரட்டும் சேர்த்து இருக்கோம்.

அதனால நல்லா மொறு மொறுன்னு சாப்பிடுறதுக்கே அவ்ளோ ருசியா இருக்கும். இதுல நம்ம ராகி மாவும் கடலைமாவும் சேர்த்து செய்யப் போறோம் இது ரெண்டும் ரொம்ப ரொம்ப நல்லது முக்கியமாக ராகி மாவில் கால்சியம் சத்துக்கள் நிறைய இருக்கிறதால ராகி மாவு சேர்த்து இந்த அடை ரெசிபி செய்யும் போது குழந்தைகளுக்கு தேவையான கால்சியம் சத்துக்கள் கிடைக்கும். சுவையான இந்த அடை ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாரும் விரும்பி இரண்டு மூணு சேர்த்து சாப்பிடுவாங்க. இந்த அடை ரெசிபி ஒன்று சாப்பிட்டாலே வயிறு நிரம்பிடும். இந்த சுவையான அடை ரெசிபியை வீட்ல இட்லி தோசை மாவு இல்லாத அப்போ செஞ்சு பாருங்க கண்டிப்பா சூப்பரா இருக்கும் இப்ப வாங்க இந்த இன்ஸ்டன்ட் வெஜிடபிள் அடை ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம். வெஜிடபிள் அடை எப்பவுமே நம்ம வீட்ல இட்லி தோசைக்கு மாவு அரைச்சு வச்சிருக்கோம். அதை வச்சு இட்லி, தோசை பணியாரம் அப்படின்னு என்ன வேணாலும் செய்யலாம் ஆனா சில சமயங்களில் இட்லி தோசைக்கும் மாவு இல்லாத டைம்ல சப்பாத்தி பூரி பொங்கல் அப்படின்னு ஏதாவது செய்வோம் ஆனா அது எதுவுமே உங்களுக்கு சாப்பிட பிடிக்கல அப்படின்னா ஒரு சூப்பரான இன்ஸ்டன்ட்டா செய்யக்கூடிய வெஜிடபிள் அடை ரெசிபி இந்த மாதிரி செஞ்சு பாருங்க. குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் குழந்தைகளோட பிரேக்ஃபாஸ்ட்க்கு இந்த அடை செஞ்சு கொடுத்தீங்கன்னா குழந்தைகள் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. அவங்களுக்கு ஒரு சத்தான பிரேக்பாஸ்ட் இது. பொதுவாக குழந்தைகள் காய்கறிகள் விரும்பி சாப்பிட மாட்டாங்க அந்த மாதிரி இருக்கிற குழந்தைகளுக்கு நல்லா மொறு மொறுன்னு இந்த மாதிரி ஒரு அடை ரெசிபி செஞ்சு கொடுத்தீங்கன்னா கண்டிப்பா குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க.

1 பவுள் 1 தோசை கல் தேவையான பொருட்கள் 1/2 கப் துருவிய உருளைக்கிழங்கு, 1/2 கப் துருவிய கேரட், 2 பெரிய வெங்காயம், 4 டேபிள் ஸ்பூன் ராகி மாவு ,4 டேபிள் ஸ்பூன் கடலை மாவு , 1டீஸ்பூன் எள்,1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் ,4 பச்சை மிளகாய் ,கொத்தமல்லி சிறிதளவு உப்பு    தேவையான அளவு, எண்ணெய் தேவையான அளவு,

 செய்முறை 

 ஒரு பாத்திரத்தில் துருவிய உருளைக்கிழங்கு கேரட் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.  ராகி மாவு கடலை மாவு உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.  தோசை சட்டியில் எண்ணெய் சேர்த்து அடை போல தட்டி எண்ணெய் சேர்த்து நன்றாக இருபக்கமும் வேக வைத்து எடுத்தால் சுவையான வெஜிடபிள் அடை தயார்.

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow