வீட்ல 5 வாழைப்பழம் இருக்கா? வாழைப்பழ அல்வா பண்ணுங்க...

Banana Halwa Recipe in tamil

Dec 29, 2024 - 09:13
 0  3
வீட்ல 5 வாழைப்பழம் இருக்கா?  வாழைப்பழ அல்வா பண்ணுங்க...

வீட்ல 5 வாழைப்பழம் இருக்கா?  

வாழைப்பழ அல்வா பண்ணுங்க...

குழந்தைகளுக்கு ரொம்ப

பிடிக்கும்...! 

இனிப்புகள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இனிப்புகள் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். அவர்கள் சாப்பிடும் அளவுதான் மாறுமே தவிர இனிப்பு சாப்பிடுவதை யாராலும் புறக்கணிக்க முடியாது. கடைகளில் வாங்கி சாப்பிடும் இனிப்புகளை விட வீடுகளில் செய்து சாப்பிடும் இனிப்புகள் ஆரோக்கியமானதாகவும், கலப்படம் இல்லாததாகவும் இருக்கும். அல்வா என்றால் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது திருநெல்வேலி அல்வாதான். ஆனால் சில பழங்களை வைத்து செய்யப்படும் அல்வாக்கள் சுவையில் சிறந்ததாக இருக்கும்.

 குறிப்பாக எளிதில் கிடைக்கக்கூடிய வாழைப்பழத்தை வைத்து செய்யக்கூடிய அல்வா மிகவும் தனித்துவமானது மற்றும் சுவையானது. "முட்டை சேர்க்காமல் மினி கிறிஸ்துமஸ் கேக்கை எப்படி செய்யணும்-ன்னு தெரியுமா? " இந்த வாழைப்பழ அல்வா கேரளா மற்றும் மங்களூரு போன்ற பகுதிகளில் மிகவும் பிரபலமானது. வெறும் 5 பொருட்களை வைத்து எளிதில் செய்யக்கூடிய இந்த அல்வா குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும். இந்த பதிவில் கேரளா வாழைப்பழ அல்வாவை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:

 வாழைப்பழங்கள் - 5(நன்கு பழுத்த பழம் சிறந்தது)

 நெய் - ¼ கப்

   சர்க்கரை - ½ கப்

 முந்திரி - ¼ கப்

ஏலக்காய் தூள் - ¼ ஸ்பூன்

 

 செய்முறை: - ஒரு மிக்ஸி ஜாரில், வாழைப்பழங்களை நறுக்கி போட்டு, மென்மையான பேஸ்டீ போல அரைத்துக் கொள்ளவும். வாழைப்பழத்தை கைகளால் பிசைந்தும் பயன்படுத்தலாம், ஆனால் பழத்தை அரைப்பது வாழைப்பழ அல்வாவுக்கு மென்மையான தன்மையை அளிக்கிறது. நீங்கள் கொஞ்சம் கெட்டியான அல்வாவை விரும்பினால் கைகளில் பிசைந்து கொள்ளலாம். 

...!" - அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நெய்யை ஊற்றி நெய் காய்ந்ததும் அதில் அரைத்து வைத்த வாழைப்பழத்தை போடவும். பின்னர் 15 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து நன்கு கிளறவும். கொஞ்சம் கொஞ்சமாக வாழைப்பழத்தின் நிறம் மாறத்தொடங்கும். - வாழைப்பழம் நிறம் மாறத் தொடங்கியதும் அதில் தேவையான அளவு சர்க்கரை மற்றும் முந்திரி சேர்த்து நன்கு கிளறவும். இப்போது அல்வாவின் நிறம் முற்றிலும் மாறியிருக்கும். இந்த நிலையில் ஏலக்காய் பொடியை அல்வாவில் கொட்டி நன்கு கிளறவும். - சர்க்கரை கொட்டிய 20 நிமிடத்திற்குப் பிறகு அல்வா நன்கு கெட்டியாகவும், பாத்திரத்தில் ஒட்டாத தன்மையுடனும் மாறியிருக்கும்.!" - இப்போது அல்வாவை நெய் தடவிய ஒரு தட்டுக்கு மாற்றி நன்கு பரப்பி விடவும். - அல்வா நன்கு ஆறியதும் அதை நீங்கள் விரும்பும் வடிவத்திற்கு வெட்டி சாப்பிட்டு மகிழலாம். - நன்கு பழுத்த வாழைப்பழத்தைப் பயன்படுத்தினால் அல்வாவின் சுவை சூப்பராக இருக்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow