வான்கோழி இறைச்சியில் இவ்வளவு ஊட்டச்சத்தா ? ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் ஓங்கும்
வான்கோழி இறைச்சியின் ஊட்டச்சத்து மதிப்பு, உடலுக்கு அளிக்கும் நன்மைகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். வான்கோழி இறைச்சியின் விலை உயர்வானது. எனினும் விலைக்கு ஏற்ப நம் ஆரோக்கியத்திற்கு நன்மைகளை அள்ளித் தருகிறது.
1. வான்கோழி இறைச்சி:

உலகளவில் பன்றிக் கறி, கோழிக் கறி, மட்டன், மாட்டுக் கறிக்கு அடுத்தபடியாக அதிகளவில் உட்கொள்ளப்படும் இறைச்சியாக வான்கோழிக் உள்ளது. இதை நாம் வன உயிரியல் பூங்காவில் பார்த்திருப்போம். வான்கோழிக் கறி பல நாடுகளின் பிரதான இறைச்சி உணவாக உள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் வான்கோழி இறைச்சி அதிகளவில் விற்பனையாகிறது. வான்கோழி இறைச்சி சாப்பிடுவதால் உடல் கிடைக்கும் நன்மைகள், அதன் ஊட்டச்சத்து மதிப்பு பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
2. வான்கோழி இறைச்சியின் ஊட்டச்சத்து:
84 கிராம் வான்கோழி இறைச்சி மொத்த கலோரி எண்ணிக்கை 117 ஆகும். இதில் 24 கிராம் புரதச்சத்து, 2 கிராம் கொழுப்பு, தினசரி தேவையில் 61 விழுக்காடு வைட்டமின் பி3, 49 விழுக்காடு வைட்டமின் பி6, 29 விழுக்காடு வைட்டமின் பி 12, செலீனியம் 46 விழுக்காடு, ஜிங்க் 12 விழுக்காடு, சோடியம் 26 விழுக்காடு, பாஸ்பரஸ் 28 விழுக்காடு, கோலின் 12 விழுக்காடு, மெக்னீசியம் 6 விழுக்காடு, பொட்டாசியம் 4 விழுக்காடு இருக்கிறது. வியக்க வைக்கும் வகையில் கார்போஹைட்ரேட் பூஜ்ஜியம் கிராமிற்கும் குறைவே. சாப்பிடுவதற்கு சற்று கடினமாக இருக்கும்.
3. வான்கோழி இறைச்சியின் ஆரோக்கிய நன்மைகள் அதிகளவு புரதம்:
புரதச்சத்து தேவைப்படுவோர் தவறாமல் வான்கோழி கறி சாப்பிடலாம். ஒரு வேளை சாப்பிட்டால் போதும் அன்றைய நாள் முழுவதும் வயிறு நிரம்பிய உணர்வே இருக்கும். இதில் கொழுப்பும், கலோரிகளும் குறைவே. எடையை குறைத்தபடி உடலில் ஆற்றலை தக்கவைக்க வான்கோழிக் கறி சிறந்த தேர்வாகும்.
4. வைட்டமின், கனிமச்சத்து நிறைந்தது:
இதில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு தேவையான அத்தியாவசிய வைட்டமின்களும், கனிமச்சத்தும் நிறைந்திருக்கின்றன. வான்கோழிக் கறியின் வைட்டமின் பி12 ஊட்டச்சத்து சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்திக்கு உதவும். அதே போல ஜிங்க் மற்றும் இரும்புச்சத்து உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்தும். வான்கோழி இறைச்சியின் செலீனியம் தனது ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகளால் உடலை தாக்கும் நோய்களை எதிர்த்து போராடும்.
5. இதய ஆரோக்கியம் மேம்படும்:
உடலில் கொலஸ்ட்ரால் அளவுகளை வான்கோழி இறைச்சி குறைத்திடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடலில் இரத்த அழுத்தத்தை சீராக்குவதால் இதய ஆரோக்கியம் மேம்படும். இதன் காரணமாக மாரடைப்பு ஏற்படாது. வான்கோழி இறைச்சியின் புரதம் தசையின் வலிமையை அதிகரிக்கும்.
6. மூட்டு வலிக்கு தீர்வு:
அமினோ அமிலங்கள் நிறைந்த வான்கோழி இறைச்சி மூட்டு ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கிறது. வான்கோழி இறைச்சியை தொடர்ந்து சாப்பிடுவதால் நெகிழ்வுத்தன்மை கிடைக்கும். கீழ்வாதம் மற்றும் இதர மூட்டு வலி, மூட்டு நோய் பிரச்னைகளை தவிர்த்திட வான்கோழி இறைச்சி உதவுகிறது.
7. மனநல ஆரோக்கியம்:
இதன் அமினோ அமிலம் மூளையில் செரடோனின் உற்பத்தியை அதிகரித்து தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது. மன அழுத்தமும் குறைவதனால் புத்தி கூர்மை அதிகரிக்கும், சிந்தித்து செயல்பட முடியும்.
What's Your Reaction?






