ஆழம் தெரியாமல் காலை விடாதே
நீதி கதைகள்

ஒருநாள் நரி ஒன்று இருட்டில் உளாவிக் கொண்டிருந்தது. துரதிர்ஷ்டவசமாக நரி ஒரு கிணற்றில் விழுந்துவிட்டது. நரியும் வெளியே வர முயற்சி எடுத்தது ஆனால் அனைத்து முயற்சிகளும் வீணாகிவிட்டது. நரிக்கும் வேறு மாற்று வழி இல்லாமல் அடுத்த நாள் வரும் வரை அங்கேயே தங்கி விட்டது. அடுத்த நாள் ஒரு ஆடு ஒன்று அந்த வழியே வந்தது, கிணற்றில் விழுந்த நரியை ஆடு பார்த்தது. ஆடு நரியிடம், 'நீ அங்கே என்ன செய்கிறாய்?" என்றது.
தந்திரமான நரி உடனே 'நான் இங்கு தண்ணீர் குடிக்க வந்தேன். இதுவரை நான் சுவைத்ததிலேயே மிகவும் சுவையான தண்ணீர் இங்குதான் உள்ளது. வாருங்கள், நீங்களே வந்து சுவைத்துப் பாருங்கள் என்றது நரி", ஆடும் சிறிது நேரம் கூட யோசிக்காமல், கிணற்றில் குதித்தது. அதனுடைய தாகத்தைத் தணித்து விட்டு வெளியேற ஒரு வழியைக் கண்டது. ஆனால் நரியை போலவே, அதனால் வெளியே வர முடியவில்லை.
பிறகு நரி, எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. நீ உன் பின்னங்காலில் நில், நான் உன் தலை மீது ஏறி வெளியே சென்று விடுகிறேன், நான் வெளியே சென்றவுடன் உன்னை வெளியேற்ற உதவுவேன் என்றது. நரியின் புத்திசாலித்தனத்தை புரிந்து கொள்ளாத ஆடு நரி கூறியவாறே கிணற்றில் இருந்து வெளியேற உதவியது.
நரி மேலே சென்று, நீ அவ்வளவு புத்திசாலியாக இருந்தால் கிணற்றில் இருந்து எப்படி வெளியே வருவது என்று நினைக்காமல் எப்படி உள்ளே இறங்கினாய் என்பதை யோசி என்றது. நரியின் தந்திரத்தை ஆடு புரிந்துக் கொண்டது.
நீதி : ஆழம் தெரியாமல் காலை விடாதே. சிந்தித்துப் பார்க்காமல் குருட்டுத்தனமாக எதையும் செய்யாதீர்.
What's Your Reaction?






