தினமும் தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் – Curd Benefits

Curd Benefits in Tamil

Dec 19, 2024 - 14:16
Dec 20, 2024 - 18:28
 0  6
தினமும் தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் – Curd Benefits

 தினமும் தயிர் சாப்பிடுவதால்

கிடைக்கும் நன்மைகள் – Curd

Benefits 

 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த உணவுகளில் ஒன்றாக தயிர் இருக்கிறது. மேற்கத்திய நாடுகளில் யோகர்ட்டை தான் அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் ஆசிய நாடுகளில் பசுவின் பாலை முறையான வெப்பநிலையில் சூடாக்கி பின்னர் நொதித்தல் முறையில் செய்யப்படுவது தான் தயிர். இந்த தயிரை நம்முடைய தினசரி உணவில் சிறிதளவேனும் கட்டாயமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் பயன்கள் என்னென்ன என்று இங்கே நாம் தெரிந்து கொள்வோம்

தயிர் கடைகளில் வாங்கினாலும் காலங்காலமாக எந்த ரசாயனங்களும் பயன்படுத்தாமல் இயற்கையான நொதித்தல் முறையில் நம்முடைய வீடுகளிலேயே செய்து பயன்படுத்தி வருகிறோம். இதிலுள்ள புரோ-பயோடிக் பண்புகள் நம்முடைய குடலில் நல்ல பாக்டீரியாக்களை உற்பத்தி செய்து குடல் மற்றும் வயிறு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் என்ன மாதிரியான நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

​தயிரில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

தயிரில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. குறிப்பாக,

  • வைட்டமின் பி12,
  • கால்சியம்,
  • பாஸ்பரஸ்,
  • புரதம்,
  • மக்னீசியம்,

மற்றும் பிற மினரல்கள் அதிக அளவில் இருக்கின்றன.

​ஜீரண சக்தியை மேம்படுத்தும் தயிர்

பொதுவாக பால் பொருள்கள் சாப்பிடும் போது ஜீரணம் தாமதமடையும் என்று சொல்வார்கள். ஆனால் தயிரில் உள்ள புரோ-பயோடிக் தன்மையால் நம்முடைய ஜீரண மண்டலம் துரிதமாக செயல்பட்டு, ஜீரண ஆற்றலை மேம்படுத்துகிறது.

அதோடு தயிர் உருவாகும் போது உண்டாகிற நொதித்தல் செயல்பாட்டின் போது பாலில் உள்ள லாக்டோஸ் மூலக்கூறுகள் உடைக்கப்படுவதால் ஜீரணம் வேகமாக நடைபெறுகிறது.

​எடையை குறைக்கும் தயிர்

தயிரில் புரதத்துடன் கொழுப்புச் சத்து இருப்பதால் எடை கூடுமோ என்று சிலர் அச்சப்படுவதுண்டு. ஆனால் எடையை குறைக்க டயட்டில் இருப்பவர்கள் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு என்றால் அது தயிர்.

நம்முடைய உணவுமுறை, முறையற்ற வாழ்க்கை முறை ஆகியவற்றோடு உடலில் சுரக்கும் கார்டிசோல் ஹார்மோனின் ஏற்றத்தாழ்வு காரணமாக எடை கூடுவது, அதிகப்படியான தொப்பை ஆகிய பிரச்சினைகள் உண்டாகின்றன.

தயிரை நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும்போது கார்டிசோல் ஹார்மோன் உற்பத்தியின் அளவு குறைகிறது. அதோடு வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதால் அதிகப்படியான கலோரிகள் எடுக்கப்படுவதும் கட்டுப்படுத்தப்படுகிறது.

​ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த தயிர்

தயிரில் புரதங்கள் அதிகமாக இருக்கின்றன. குறிப்பாக எளிதில் ஜீரணமாகக்கூடிய புரதங்கள் தயிரில் மிக அதிகம். அதனாலேயே இது ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்தி வைக்கிறது.

க்ரீக் யோகர்ட்டில் உள்ள மூலக்கூறுகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கச் செய்வதோடு இதய நோய்களுக்கான அபாயத்தையும் குறைக்கச் செய்கிறது.

தயிர் கடைகளில் வாங்கும்போது ஃபிளேவர்டு தயிர் வகைகள் கிடைக்கின்றன. அவற்றை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். அவற்றில் பதப்படுத்தபட்ட பொருள்கள் மற்றும் எசன்ஸ்கள் சேர்க்கப்பட்டிருக்கும். அதனால் வீட்டில் செய்யப்படும் பிளைனான தயிர் தான் டயட் இருப்பவர்களுக்குச் சிறந்தது.

​கால்சியம் குறைபாட்டை தடுக்கும் தயிர்

தயிரில் அதிகப்படியான கால்சியம் சத்து இருக்கிறது. இது நம்முடைய எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்துக்கு மிகவும் உதவியாக இருக்கிறது.

அதோடு வயதாகும்போது, இயல்பாகவே கால்சியம் சத்து குறைபாடு ஏற்படும். குறிப்பாக பெண்களுக்கு இந்த பிரச்சினை மிக அதிகமாக உண்டாகும். இதனால் எலும்புத் தேய்மானம், மூட்டு வலி போன்ற பல பிரச்சினைகளால் அவதிப்படுவார்கள்.

இந்த கால்சியம் பற்றாக்குறையை சரிசெய்வதற்கு தினமும் ஒரு சிறிய கப் அளவாவது தயிரை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம். கால்சியம் பற்றாக்குறையை சரிசெய்வதோடு எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க தயிர் உதவும்.

பற்கள் ஆரோக்கியத்துக்கு தயிர்

நம்முடைய பற்கள் ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் இருப்பதற்கு மிக முக்கியமானது கால்சியம் தான். இந்த கால்சியம் தயிரில் மிக அதிகமாகவே இருக்கிறது.

அதேபோன்று தயிரில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய இரண்டுமே பற்களை வலிமையாக வைத்திருக்கச் செய்கின்றன. நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்ய உதவும் தயிரானது பற்களில் உள்ள நுண்ணியிரிகள் மற்றும் கெட்ட பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது.

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow