அடிக்கடி தலைவலி வருது ஆனா என்ன காரணம்னு தெரியலயா? இதுதான் காரணம்... இதோ தீர்வு…....
Headache Reason and solution in tamil
அடிக்கடி தலைவலி வருது ஆனா என்ன காரணம்னு தெரியலயா? இதுதான் காரணம்... இதோ தீர்வு…....
கண்ணை சுற்றியுள்ள பகுதிகளில் சிலர் வலி ஏற்படுகிறது என்று கூறுவார்கள். அது தலைப் பகுதி மட்டும் அல்லாமல் கண்களும் சேர்ந்து வலிக்கக் கூடியதாக இருக்கிறது. இந்த வலிக்கான காரணங்கள் அதை எளிய இயற்கை மருத்துவ முறை மூலம் தீர்த்து கட்டுவதற்கான முறைகளைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்
கண்ணை சுற்றியுள்ள பகுதிகளில் சிலர் வலி ஏற்படுகிறது என்று கூறுவார்கள். அது தலைப் பகுதி மட்டும் அல்லாமல் கண்களும் சேர்ந்து வலிக்கக் கூடியதாக இருக்கிறது. இந்த வலிக்கான காரணங்கள் அதை எளிய இயற்கை மருத்துவ முறை மூலம் தீர்த்து கட்டுவதற்கான முறைகளைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்
கடுமையான தலைவலி
பொதுவாகவே தலைவலி என்பதே மிகவும் கொடுமையான விஷயமாக பலருக்கும் இருக்கின்றது. வலி என்றாலே மிகவும் கஷ்டம் தான். அதிலும் மூன்று விதமான வலிகள் ஒரு மனிதனுக்கு மனதளவில் பல துன்பங்களை கொடுக்கக் கூடியவை. உடலளவில் மட்டும் இல்லாமல், குறிப்பாக அதில் முதலில் இருப்பது தலைவலி அதுவும் கண்ணை சுற்றி வலிக்கக் கூடிய ஒரு பக்கத் தலைவலி. இரண்டாவது பல்வலி. மூன்றாவது வயிற்றுவலி.
இவை மனிதனை ஆட்டிப் படைக்கக் கூடிய கொடூரமான வலி. இதுபோன்ற வலியை குறைப்பதற்கு அல்லது பூரணமாக குணப்படுத்துவதற்கு இயற்கை முறையில் பலவிதமான மருத்துவ முறைகள் இருக்கின்றன. இயற்கை மருத்துவ முறைகள் உடனடி நிவாரணம் தரும். சிறிது சிறிதாக வேலை செய்து நிரந்தரமான நிவாரணத்தைத் தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
வீட்டு வைத்திய முறை
உடனடி நிவாரணத்திற்கு ஆங்கில மருந்துகள் எடுப்பதினால் பல விதமான பக்க விளைவுகளுக்கு நாம் ஆளாகின்றோம். எனவே ஆங்கில மருந்துகளை தவிர்த்து, முடிந்தவரை இயற்கை மருந்துகளை பயன்படுத்த துவங்குவது நம் அனைவருக்கும் மிகவும் முக்கியமான ஒன்றாகும். குறிப்பாக ஒருபக்க தலைவலி என்பது உலகத்தில் உள்ள பலரும் பெரும்பாலான வகையில் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் நரம்பியல் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்று நரம்பியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடந்த இருபது வருடங்களாக இந்த ஒரு பக்க கண்ணை சுற்றிய தலைவலி அதிக நபருக்கு வருகின்றது என்று கூறுகின்றனர். இந்த தலைவலி வரும் பொழுது கண்களும் சேர்ந்து வலிக்கும். குறிப்பாக அந்த கண்ணை சுற்றிய பகுதி மற்றும் கண்கள் அதிக வலி உண்டாகும். குறிப்பாக பெண்களை விட ஆண்களுக்கு, அதுவும் 20 முதல் 40 வயதுள்ள ஆண்களுக்கு இவ்வகையான பிரச்சனைகள் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றன.ர் மொத்த மக்கள் தொகையில் 0.1 சதவிகித மக்களுக்கு இந்த பிரச்சனை இருக்கிறது என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
காரணங்கள்
சரியான உடற்பயிற்சி இல்லாததால், அதாவது ஒரே இடத்தில் நாள் முழுக்க உட்கார்ந்து வேலை பார்ப்பது, பெரிதாக எங்கும் நடந்து போகாமல் இருப்பது
அதிகமாக வெளிச்சத்தை கண்களால் பார்த்தால்
அதிக உடல் வெப்பம்,
அளவுக்கு அதிகமான குடிப்பழக்கம்
புகைப்பிடித்தல்
அதிகமான உயரத்தில் மலை ஏறுதல், உயரமான பகுதிகளுக்குச் செல்லுவது, ஆக்சிஜன் குறைவாகக் கிடைக்கும் பகுதிகளுக்குச் செல்வது ஆகியவற்றாலும் தலைவலி ஏற்படும்.
சில குறிப்பிட்ட வகை கொழுப்பு வகையான உணவுகள், சில குறிப்பிட்ட மீன் வகைகள்
சில ஸ்டீரியாய்டு மருந்துகளை எடுத்துக் கொள்கின்றன பொழுது ஏற்படும் பக்க விளைவுகள் மற்றும் அதனாலும்
சிலருக்கு இது பரம்பரை பரம்பரையாக வருகின்ற பிரச்சினையாகக் கூட இருக்கலாம்.
ஒத்தடம் கொடுத்தல்
சிலருக்கு சூடு ஒத்தனம் கொடுத்தால் இவ்வகையான வலியிலிருந்து தற்காலிகமான நிவாரணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சிலர் குளிர்ந்த ஒத்தனம் கொடுப்பார்கள். எதுவாக இருந்தாலும் ஒத்தனம் கொடுப்பது நிரந்தரமான நிவாரணம் கிடைக்குமா என்றால் சிறு சந்தேகம் தான். ஆனால் சிலருக்கு அடிக்கடி வராமல் எப்பவாவது ஒரு முறை இதுபோன்ற தலைவலிகள் ஏற்படும்.
அப்படி எப்பவாது இதுபோன்ற தலைவலி ஏற்படுவதற்கு குளிர்ந்த ஒத்தனம் அல்லது சூடான ஒத்தனம் கொடுத்தால், இது போன்ற தலைவலியிலிருந்து தற்காலிகமான நிவாரணம் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒத்தனம் கொடுப்பது என்பது, ஒரு ரப்பர் பையில் வெண்ணையை ஊற்றி கொண்டு கண்களை சுற்றி உள்ள பகுதியில் வைத்து வைத்து எடுக்க வேண்டும். அப்படி ஒத்தனம் கொடுக்கக்கூடிய அந்த ரப்பர் பொருள் உங்களிடம் இல்லை என்றாலும் சிறிது காட்டன் துணியை எடுத்துக் கொண்டு சுடு தண்ணீரில் முக்கி வலிக்கின்ற இடத்தில் ஒத்தணம் கொடுக்க வேண்டும்.
அக்குபிரஷர் பெரும்பாலும் சைனாவில் இருந்து இந்தியாவுக்கு வந்த ஒரு அற்புதமான மருத்துவ முறையாகும். சீனர்கள் பெரும்பாலும் அனைத்து வியாதிகளுக்கும் அக்குபஞ்சர் அல்லது அக்குபிரஷர் மூலமே தீர்வு காண்கின்றனர் . அந்த காலத்திலேயே வல்லவர்களாக இருந்தனர். இது போன்ற ஒற்றை தலைவலிக்கு அக்குபிரஷரில் நல்ல நிவாரணம் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அக்குபிரஷர் தெளிவாக தெரிந்த நிபுணரை கொண்டு இதை செய்ய .அப்படி அக்குபிரஷர் தெளிவாக தெரிந்த நிபுணரை கொண்டு
இந்த ஒற்றைத் தலைவலிக்கு அக்குபிரஷர் எடுத்துக் கொண்டால் சில நாட்களில் பூரணமாக குணமடைந்து விடுகிறது என்று அக்குபிரஷர் எடுத்துக்கொண்ட நபர்கள் கூறுகின்றனர். 2014ஆம் நடந்த ஒரு ஆய்வின் படி இந்த நோய்க்கு பலரும் மருந்து மாத்திரைகள் எடுத்து கேட்கவில்லை என்று இறுதியாக அக்குபிரஷர் மூலம் நல்ல நிவாரணம் கிடைத்துள்ளது என்று கூறியுள்ளனர். அதற்குப் பின்னரே இந்த வியாதி அக்குபிரஷர் மூலம் முழுமையாக குணமளிக்க முடியும் என்று வெளிநாடுகளில் கண்டுபிடித்தனர். ஆனால் இந்தியாவை பொருத்தவரை அக்குபஞ்சர் மற்றும் அக்குபிரஷர் செய்வதற்கு சரியான நிபுணரை தேர்ந்தெடுக்க வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது.
மசாஜ்
லேசான மசாஜ் செய்வது சற்று நம் தலைவலிக்கு நிவாரணம் கிடைக்கும். தலையில் மசாஜ் செய்வதினால் தலையில் உள்ள செரட்டோனின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இந்த செரட்டோனின் ஹார்மோன் சுரப்பினால் மூளையிலுள்ள நரம்புகள் உற்சாகம் அடைகிறது. ரத்த ஓட்டம் சீராகிறது. சரியான ரத்த ஓட்டம் இல்லாமையும் அதிகமான மன உளைச்சலும் இது போன்ற வலிகளுக்கு காரணமாக இருக்கின்றது சரியான முறையில் மசாஜ் செய்வது இந்த வழியில் இருந்து தற்காலிக மற்றும் நிரந்தர தீர்வு கிடைக்கும். என்று சிலர் குறிப்பிடுகின்றனர்.
சரியான முறையில் மசாஜ் செய்வது நரம்புகளில் இடையே இருக்கும் தடைகளை நீக்கி வழியையும் நீக்கி நல்ல சுகம் தருகிறது என்று குறிப்பிடுகின்றனர். முக்கியமாக மூளை பகுதியில் ரத்த ஓட்டம் சீராகிறது என்று குறிப்பிடுகின்றனர். மசாஜ் செய்ய இரண்டு விரல்களை மட்டுமே பயன்படுத்தி சர்க்குலர் வடிவில் பின்னங்கழுத்தில் வலி இருக்கும் இடத்திலும் செய்ய வேண்டும். நெற்றிக்கு மேல், கண்ணை சுற்றி, கண்ணின் ஓரங்கள், போன்ற இடங்களில் தொடர்ந்து மசாஜ் செய்ய வேண்டும். மட்டுமல்லாமல் இதற்கென மசாஜ் ஆயில் வாங்கி அதை தடவி மசாஜ் செய்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மசாஜ் ஆயில் என்பது வேறு ஒன்றுமில்லை கடுகு லவங்கப்பட்டையின் ஒரு சின்ன கலவையில் உண்டான எண்ணெய். இதை பயன்படுத்தி மசாஜ் செய்து வந்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
எஷன்ஷியல் ஆயில்
மேலும் இந்த தலை வலியை நீக்குவதற்கு வெளியே மருந்து கடைகளில் பலவகையான மசாஜ் ஆயில் கிடைக்கின்றது. அவற்றையும் பயன்படுத்தி மசாஜ் செய்யலாம். இதுபோன்ற தலைவலியை எளிதாக மேலே குறிப்பிட்ட மசாஜ் அல்லது சில தெரப்பிகள் மூலம் எளிதாக குணப்படுத்த முடியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இதை ஒரு மாதமோ இரண்டு மாதமோ வீட்டில் செய்து பாருங்கள். தொடர்ந்து இதுபோன்ற வலிகள் உங்களுக்கு இருந்தால், என்ன செய்தாலும் குணமாகவில்லை என்றால் நிச்சயமாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது மிகவும் முக்கியம்.
இதுபோன்ற தலைவலிகள் பெரும்பாலும் மனச்சோர்வு மன அழுத்தம் சரியான தண்ணீர் குடிக்காமல் இருப்பது. போன்ற பிரச்சினைகளால் ஏற்படுவதே. இது போன்ற பிரச்சினைகளால் ஏற்பட்டிருந்தால் மேலே கூறியிருக்கும் மருத்துவ முறைகளின் படி எளிதாக குணமாக்கி விடலாம்.மேலும் இந்த தலைவலியை மேலே குறிப்பிடுகின்ற மருத்துவமுறை மூலம் 90 சதவீதம் குணமாக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது.
What's Your Reaction?