Parai Music History in Tamil | பறையிசை
பறையிசை - ஒரு பார்வை

பறை என்றால் தமிழில் அறிவித்தல் என்ற பொருள் உண்டு. பறை இசைக்கருவி தமிழர்களின் பாரம்பரிய இசைக் கருவி. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகப் பயன்படுத்தப் பட்டு வரும் தமிழிசைக் கருவி. 5000 வருடங்களுக்கு முன்னரே எழுதப்பட்ட தொல்காப்பிய இலக்கண நூலிலேயே பறையிசைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. பறைக்கருவி எல்லாத் தோல்இசைக் கருவிகளுக்கும் தாய்க் கருவி.
சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் வரை தள்ளி இருப்பவர்களைக் கூட தன்வசப் படுத்தி கேட்கவைக்கக் கூடிய திறனைத் தன்னகத்தே கொண்ட இசைமுழக்கம் நிறைந்த இசை வெற்றியை பறைசாற்ற திருமண நிகழ்வுகளில், போர்க்காலங்களில் தாய்மார்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளை போரின் கொடூரங்களில் இருந்து தப்பிக்கச் செய்ய என்று கிட்டத்தட்ட 35 வகை நிகழ்வுகளுக்கும் பயன் படுத்தப் பட்டு வந்த/ பயன்பட்டு வரும் அபூர்வமான ஓர் இசைக்கருவி
காலப்போக்கில் சில சடங்குகளில் மட்டுமே பயன்படுத்தப்படும் இசையாகச் சுருங்கிப்போன பறையிசை இப்பொழுது விடுதலை பெற்று தமிழ்மக்களின் பண்பாட்டு அடையாளமாக உலகெங்கும் இசைக்கப்படுகிறது. கைத்தட்டத் தெரிந்த அனைவரும் எளிதாகக் கற்றுக்கொள்ளக்கூடிய அரியதொரு இசைக் கருவி ஆடியும் பாடியும் ஒரே குழுவாக இசைக்கக் கூடிய இசைக் கருவிகளுள் ஒரு முக்கியமான கருவி.பறையிசையையும், அதனுடன் கூடிய நடனத்தையும் நாம் கண்டுகளிக்க ஓர் அரிய வாய்ப்பு
What's Your Reaction?






