தமிழ் விடுகதைகள்

Tamil Vidukadhaigal

Jan 26, 2025 - 20:00
 0  0
தமிழ் விடுகதைகள்

தமிழ் விடுகதைகள்:

 விடுகதை என்பது ஒரு வாக்கியத்தை கூறி அதில் ஒளிந்திருக்கும் மறைபொருளை கண்டுபிடிப்பதே ஆகும். விடுகதைகள் பல செவி வழியாக நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து இன்றைய தலைமுறை பிள்ளைகள் வரை சென்றடைந்திருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் சிந்தனைகளையும் தூண்டும் வகையில் இருக்க கூடியது விடுகதை. கிராமங்களில் பார்த்தோமானால் விடுகதை என்பது மிக சிறந்த ஒரு பொழுது போக்காக இருக்கும். பிறர் சிறப்பாக சிந்திக்கும் வகையில் ஒரு விடுகதை கூறி அதன் விடையை பிறர் கண்டுபிடிக்க இயலாத பட்சத்தில் அந்த விடுகதையின் விடையை நாம் கூறுவது என்பது அறிவு சார்ந்த ஒரு தனி பெருமை தான். தமிழ் விடுகதைகள் பல, காலம் காலமாக நம்மிடையே வழக்கத்தில் இருந்தாலும் புதியதாக பல விடுகதைகள் இன்றைய கால சூழலுக்கு ஏற்றவாறு உருவாக்கப்படுகிறது. அந்த வகையில் சிறப்பான பல தமிழ் விடுகதைகள் விடையுடன் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

விடுகதைகள் தமிழில்

இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?

 தேள்

 பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன?

 தலைமுடி

 உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான்? அவன் யார்?

  வெங்காயம்

 கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?

 கரும்பு மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன?

 விழுது

இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?

 பட்டாசு

 ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?

 மூச்சு கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான். அவன் யார்?

 பூரி

கருப்பு நிறமுடையவன், கபடம் அதிகம் கொண்டவன், கூவி அழைத்தால் வந்திடுவான், கூட்டம் சேர்த்தும் வந்திடுவான் – அவன் யார்?

 காகம்

 பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள்?

 வெண்டைக்காய்

 சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?

 கண்

 ஓடெடுப்பான் பிச்சை ஒரு நாளும் கண்டறியான் காடுறைவான் தீர்த்தக் கரைசேர்வான்- தேட நடக்குங்கால் நாலுண்டு நல்தலை ஒன்றுண்டு! படுக்கும்போது அவையில்லை பார்! அது என்ன?

 ஆமை

வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?

 முட்டை

 எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு அது என்ன ?

அடுப்புக்கரி

 

 பெயர் யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன? இமை வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ. அது என்ன?

 சிரிப்பு

 வீட்டில் வளரும் என்னை திருடனுக்கு பிடிக்காது அது என்ன? நாய் இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?

 வாழை

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow