நீங்க வைக்கிற ரசம் எப்பவும் சொதப்புமா? இப்படி ரசம் சாதம் செய்யுங்க...
Rasam Sadam in tamil
நீங்க வைக்கிற ரசம் எப்பவும் சொதப்புமா? இப்படி ரசம் சாதம் செய்யுங்க...
மதிய வேளையில் சமையலறையில் தினமும் நீண்ட நேரம் நின்று சமைக்க பிடிக்கவில்லையா? அப்படியானால் அப்படிப்பட்ட சமயங்களில் தக்காளி சாதம், பருப்பு சாதம் போன்ற ஒன்-பாட் ரெசிபியை செய்யலாம். ஆனால் எத்தனை நாட்கள் தான் ஒரே மாதிரி ரெசிபியை செய்வீர்கள். அவ்வப்போது சற்று வித்தியாசமான ரெசிபியை செய்தால் தான் சமைப்பவர்களுக்கும், சாப்பிடுபவர்களுக்கும் நன்றாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ரசம் என்றால் பிடிக்குமா? ஆனால் நீங்கள் எப்போது ரசம் வைத்தாலும் அது சரியாக வராதா? அப்படியானால் அப்படிப்பட்ட வேளையில் ரசம் சாதத்தை குக்கரில் செய்யுங்கள். இந்த ரசம் சாதம் சட்டென்று செய்யக்கூடியவாறு இருக்கும். "Pongal Wishes In Tamil: பொங்கலுக்கு உங்களுக்கு பிடிச்சவங்களுக்கு இப்படி வாழ்த்து சொல்லுங்க.. குஷியாவாங்க... " உங்களுக்கு குக்கரில் ரசம் சாதத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரசம் சாதம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* அரிசி - 1 டம்ளர்
* துவரம் பருப்பு - 1/2 கப்
* தண்ணீர் - 4 டம்ளர்
* புளி - சிறிய எலுமிச்சை அளவு (1 டம்ளர் நீர்)
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 4
* வரமிளகாய் – 3
* பூண்டு - 6 பல்
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் அரிசி மற்றும் துவரம் பருப்பை ஒரு பாத்திரத்தில் எடுத்து, நீரில் 2 முறை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதில் 4 டம்ளர் நீரை ஊற்றி தனியாக வைத்துவிட வேண்டும். * பின்பு புளியை ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, அதை பிசைந்து சாறு எடுத்து, அதையும் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். * அடுத்து மிக்சர் ஜாரில் மிளகு, சீரகத்தை சேர்த்து, ஒருமுறை அரைத்துக் கொள்ள வேண்டும். * பின் அதில் வெந்தயம், வரமிளகாய், பூண்டு சேர்த்து அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். * பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் அரைத்த மிளகு சீரகத்தை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். * பிறகு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள், பெருங்காய தூள் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும். * பின் அதில் புளி நீரை ஊற்றி கிளறி, ஊற வைத்த அரிசி மற்றும் பருப்பை நீருடன் அப்படியே சேர்த்து, கூடுதலாக 1/2 டம்ளர் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது கொத்தமல்லியைத் தூவி, குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்க வேண்டும். * விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான ரசம் சாதம் தயார்.
What's Your Reaction?