ரயில்வே வேலைவாய்ப்பு 2025: முக்கியமான தேதிகள்
விண்ணப்பங்கள் தொடங்கும் தேதி: ஜனவரி 23, 2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 22, 2025
விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி தேதி: பிப்ரவரி 23 முதல் 24, 2025 வரை
திருத்த சாளரம்: பிப்ரவரி 25 முதல் மார்ச் 6, 2025 வரை
ரயில்வே வேலைவாய்ப்பு 2025: காலியிட விவரங்கள்
இந்த வேலைவாய்ப்பு CEN 08/2024ன் கீழ் 7வது ஊதியக் குழுவின் நிலை-1க்கு உள்ளது. நியமிக்கப்பட உள்ள சில முக்கிய பணியிடங்கள் மற்றும் துறைகள் பின்வருமாறு:
பணியிடம் மற்றும் துறை
உதவியாளர் TL மற்றும் AC (பட்டறை)- மின்சாரம்
உதவியாளர் TL மற்றும் AC- மின்சாரம்
உதவியாளர் தண்டவாள இயந்திரம்- பொறியியல்
உதவியாளர் TRD- மின்சாரம்
பாயின்ட்ஸ்மேன் B- போக்குவரத்து
தண்டவாள பராமரிப்பாளர்-IV- பொறியியல்
தகுதி, வயது வரம்பு
விண்ணப்பதாரர் 10 ஆம் வகுப்பு அல்லது ITI அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
NCVTயில் இருந்து தேசிய பயிற்சி சான்றிதழ் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 18 முதல் 36 வயது (ஜனவரி 1, 2025 அன்று).
தேர்வு செயல்முறை
தேர்வு 4 நிலைகளில் நடைபெறும்-
கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) இதில் 90 நிமிட தேர்வில் 100 கேள்விகள் இருக்கும். தவறான பதிலுக்கு 1/3 மதிப்பெண்கள் குறைக்கப்படும். பொது மற்றும் EWS பிரிவினருக்கு 40% மற்றும் OBC, SC, ST பிரிவினருக்கு 30% மதிப்பெண்கள் பெற வேண்டும்.
உடல் தகுதி தேர்வு (PET)
சான்றிதழ் சரிபார்ப்பு (Document Verification)
மருத்துவ பரிசோதனை (Medical Examination)
விண்ணப்பக் கட்டணம்
பொது/ஓபிசி/ஈடபிள்யூஎஸ்: ரூ.500
எஸ்சி/எஸ்டி/பிஹெச்/ஈபிசி: ரூ.250
அனைத்து பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள்: ரூ.250
கட்டணத்தை யுபிஐ, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, அல்லது நெட் பேங்கிங் மூலம் செலுத்தவும்.
எப்படி விண்ணப்பிப்பது?
இணையதளம்: rrbapply.gov.inக்கு செல்லவும்.
விண்ணப்பப் படிவத்தை நிரப்பி, அனைத்து தேவையான சான்றிதழ்களையும் பதிவேற்றவும்.
விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
சமர்ப்பித்த பிறகு, படிவத்தின் நகலை சேமிக்கவும்.