OBC சான்றிதழ் பெறுவது எப்படி? | How to Apply OBC Certificate online in tamilnadu?
ஓ.பி.சி (OBC Certificate) சான்றிதழ் வழங்கும் முறை 1988 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற தொழில்முறை நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கும், Employment க்கும் இது செல்லுபடியாகும்
1. ஓ.பி.சி (OBC Certificate)

ஓ.பி.சி (OBC Certificate) என்பது பின்தங்கிய வகுப்புகளின் குடிமக்களுக்கு மாநில அரசு தனது சாதியை உறுதிப்படுத்தும் அறிக்கையாகும். இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி ஒருவர் அட்டவணை சாதி அல்லது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சமூகச் சான்றிதழ் (OBC) என்றும் அழைக்கப்படுகிறது.
இது அனைத்து குடிமக்களுக்கும் சமத்துவத்தைக் கொண்டுவருவதற்காக குறிப்பிட்ட சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு சில சலுகைகளை வழங்க பயன்படுகிறது. அதுபோல, ஒரு பட்டியல் சாதி அல்லது பட்டியல் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒரு நபருக்கு இத்தகைய சலுகைகளைப் ஓ.பி.சி (OBC Certificate) சாதிச் சான்றிதழ் கட்டாயமாகும்.
2. ஓ.பி.சி (OBC) சான்றிதழுக்கு தேவையான ஆவணங்கள்.

1. விண்ணப்பதாரர் புகைப்படம்
2. விண்ணப்பதாரர் ஆதார் அட்டை மற்றும் ரேஷன் கார்டு.
3. வருமானச் சான்று (பேஸ்லிப், வருமானச் சான்றிதழ் போன்றவை)
4. சாதிச் சான்றிதழ் (Community Certificate)
5. வருமான வரி அறிக்கை (Income Tax Return)
6. விண்ணப்பதாரரின் சுய அறிவிப்பு (Self-Declaration of Applicant)
8. பிற ஆவணங்கள்
3. ஓ.பி.சி (OBC Certificate) சான்றிதழ் எப்படி விண்ணப்பிப்பது?

படி 1: https://www.tnesevai.tn.gov.in என்ற இணைப்பைப் பயன்படுத்தி TNeGA eSevai இணையதளத்தில் செல்லவும்.
படி 2: இப்போது, குடிமகன் உள்நுழை பொத்தானைக் கிளிக் செய்து சரியான உள்நுழைவு பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும். பின்னர், கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு, உள்நுழை பொத்தானைக் கிளிக் செய்யவும்.
படி 3: புதிய பக்கம் தோன்றும். அதில், திரையின் இடது புறத்தில் உள்ள DEPARTMENT WISE விருப்பத்தை கிளிக் செய்யவும்.பிறகு, Revenue Department கிளிக் செய்யவும்.பிறகு,REV-115 Other Backward Classes (OBC) Certificate என்பதை கிளிக் செய்யவும் .
படி 4: தமிழ்நாடு இ-மாவட்ட இணையதளத்தில் உள்ள சேவைப் பக்கத்திற்கு நீங்கள் தானாகவே திருப்பி விடப்படுவீர்கள். நீங்கள் தொடர விரும்பினால், Procees பொத்தானைக் கிளிக் செய்யவும்.
படி 5:நீங்கள் ஏற்கனவே CAN க்கு பதிவு செய்திருந்தால், உங்கள் விவரங்கள் CAN எண், பெயர், தந்தையின் பெயர், கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, பிறந்த தேதி , ஆதார் எண்கள் இதில் ஏதாவது ஒன்றுஉள்ளீடு செய்து Search என்பதை கிளிக் செய்யவும் .
படி 6: Generate OTP என்பதை கிளிக் செய்து மொபைல் எண்ணுக்கு வரும் OTP யை உள்ளிடவும். பிறகு Proceed என்பதை என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.
படி 7: புதிய பக்கம் தோன்றும். அதில், Personal Details:
- Religion மதம்
- Caste சாதி
- Serial Number of the caste in the central list of OBC
- Occupational Group தொழில் குழு
போன்ற உங்கள் விவரங்களை தேர்ந்தெடுக்கவும்
படி 8: பிறகு, Status of Father/Husband:
உங்கள் தந்தை அல்லது கணவர் உயிருடன் இருக்கிறாரா? ஆம் அல்லது இல்லை என்பதை தேர்வு செய்யவும்
Whether Alive? Choose Yes or No
ஆம் என்றால் கீழே கொடுக்கப்பட்ட விவரங்களை தேர்வு செய்யவும்
- Nature of Occupation
- Status
படி 9: பிறகு, Status of Mother:
உங்கள் அம்மா உயிருடன் இருக்கிறாரா? ஆம் அல்லது இல்லை என்பதை தேர்வு செய்யவும்
Whether Alive? Choose Yes or No
ஆம் என்றால் கீழே கொடுக்கப்பட்ட விவரங்களை தேர்வு செய்யவும்
- Nature of Occupation
- Status
போன்ற விவரங்களை பூர்த்தி செய்து Submit பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.
படி 10: புதிய பக்கம் தோன்றும். அதில்,
ஆவணத்தின் நகலை SCAN COPY பதிவேற்றம் செய்யவும். இறுதியாக, Make a Payment என்பதை கிளிக் செய்து ரூ:60 ரூபாய் இணையதளம் மூலம் செலுத்திய பின்பு, நீங்கள் விண்ணப்பம் செய்யப்பட்ட நகல் அதாவது ஒப்புகை சீட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும்.
What's Your Reaction?






